விக்கெட் ஆகாமலே நடந்து சென்றது ஏன்? கிண்டலுக்குள்ளானது குறித்து மிட்செல் மார்ஷ் ...
Rajini: ``பேரன்பிற்குரிய சூப்பர் ஸ்டார் அவர்களுக்கு..'' - பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த விஜய்
திரையுலகில் முன்னணி நடிகராக திகழும் ரஜினிகாந்த் இன்று தனது 74- வது பிறந்தநாளைக் கொண்டாடுகிறார்.
அரசியல் தலைவர்கள், சினிமா பிரபலங்கள், ரசிகர்கள் என பலரும் ரஜினிகாந்திற்கு பிறந்தநாள் வாழ்த்துகளைத் தெரிவித்திருக்கின்றனர். அந்தவகையில் நடிகரும், தவெக தலைவருமான விஜய் ரஜினிகாந்திற்கு தன்னுடைய பிறந்தநாள் வாழ்த்தைத் தெரிவித்திருக்கிறார். அவர் பதிவிட்டிருந்த எக்ஸ் பதிவில், "பேரன்பிற்கும் மரியாதைக்கும் உரிய சூப்பர் ஸ்டார் திரு. ரஜினிகாந்த் அவர்களுக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.
தாங்கள் நல்ல ஆரோக்கியத்துடன் நீடூழி வாழ இறைவனைப் பிரார்த்திக்கிறேன்" என்று பதிவிட்டிருக்கிறார்.
அதேப்போல கமல்ஹாசனும் ரஜினிக்கு தனது பிறந்தநாள் வாழ்த்தைத் ரஜினிக்கு தெரிவித்திருக்கிறார்." அன்பு நண்பர், சூப்பர் ஸ்டார் அவர்களுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துகள். மென்மேலும் பல வெற்றிகள் பெறுக; நலம் சூழ்க; மகிழ்ச்சி நிறைக; நீடு வாழ்க!" என்று வாழ்த்தி இருக்கிறார்.