செய்திகள் :

Sanjiv Goenka: `ஏமாற்றம்தான், பரவாயில்லை' - தோல்விக்குப் பின் வீரர்களிடம் LSG ஓனர் சஞ்சீவ் கோயங்கா

post image

ஐபிஎல் பார்ப்பவர்களுக்கு சஞ்சீவ் கோயங்கா யார் என்று நிச்சயம் ஓரளவுக்காவது தெரிந்திருக்கும். 2016, 2017-ல் விளையாடிய ரைசிங் புனே சூப்பர் ஜெயன்ட்ஸ் அணியின் உரிமையாளர்களில் ஒருவர் சஞ்சீவ் கோயங்கா.

இவர், 2017-ல் தோனியை விட ஸ்டீவ் ஸ்மித் சிறந்த கேப்டன் என்று தோனியை கேப்டன்சியிலிருந்து நீக்கி ஸ்மித்தை கேப்டனாக நியமித்தது அப்போது பேசுபொருளாக மாறியிருந்தது.

அதைத்தொடர்ந்து, 2022-ல் ஐபிஎல்லில் புதிதாகச் சேர்க்கப்பட்ட லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணியிலும் இவர் ஒன் ஆஃப் தி உரிமையாளராக இருந்தார். அந்த அணிக்கு கேப்டனாக கே.எல்.ராகுல் நியமிக்கப்பட்டார்.

ஜாகீர் கான் - சஞ்சீவ் கோயங்கா - ரிஷப் பண்ட்
ஜாகீர் கான் - சஞ்சீவ் கோயங்கா - ரிஷப் பண்ட்

இதில், கடந்த ஆண்டு ஹைதராபாத்துக்கு எதிரான போட்டியில் தோல்வியடைந்ததையடுத்து, மைதானத்தில் கே.எல்.ராகுலிடம் சஞ்சீவ் கோயங்கா சற்று ஆக்ரோஷமாகப் பேசும் வீடியோ விவாதப்பொருளானது.

பின்னர், கடந்த ஆண்டு இறுதியில் நடைபெற்ற மெகா ஏலத்தில் லக்னோ அணியிலிருந்து கே.எல். ராகுல் விடுவிக்கப்பட்டு, ரூ. 14 கோடிக்கு டெல்லி அணியால் வாங்கப்பட்டார். மறுபக்கம், ரிஷப் பன்ட்டை லக்னோ அணி ஏலத்தில் ரூ. 27 கோடிக்கு எடுத்து கேப்டனாக நியமித்தது.

மிஸ்ஸான வெற்றி

இவ்வாறிருக்க, இந்த சீசனில் இரு அணிகளும் மார்ச் 24-ம் தேதி மோதிய தங்களின் முதல் ஆட்டத்தில், லக்னோ அணி தன்னுடைய சில தவறுகளால் கைமேல் இருந்த வெற்றியை டெல்லியிடம் தாரைவார்த்தது.

இதனால், சஞ்சீவ் கோயங்கா இப்போது யாரை என்ன சொல்லப் போகிறாரோ என்று கிரிக்கெட் ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் முணுமுணுத்தனர். இந்த நிலையில், டெல்லியுடனான தோல்விக்குப் பிறகு தனது வீரர்களை சஞ்சீவ் கோயங்கா உற்சாகப்படுத்தும் வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

எக்ஸ் தளத்தில் லக்னோ அணி நிர்வாகம் வெளியிட்டிருக்கும் அந்த வீடியோவில், ``இந்தப் போட்டியில் பேட்டிங் மற்றும் பந்துவீச்சிலிருந்து நான் எடுத்துக்கொள்வதற்கு நிறைய நேர்மறையான விஷயங்கள் இருக்கின்றன. பவர்பிளேயில் நம்முடைய பேட்டிங் மற்றும் பந்துவீச்சு நன்றாக இருந்தது.

நாம் ஒரு இளம் அணி. இத்தகைய நிகழ்வுகள் நடக்கும்தான். நாளை முதல் நேர்மறையான விஷயங்களை எடுத்துக்கொண்டு முன்னேறுங்கள். நிச்சயம் நல்ல முடிவுகளை நாம் பெறுவோம்.

இந்தப் போட்டியின் முடிவு ஏமாற்றம்தான். இருப்பினும், இதுவொரு சிறந்த போட்டி. எனவே, நன்றாக விளையாடுங்கள்" என்று தனது வீரர்களிடம் சஞ்சீவ் கோயங்கா கூறினார்.

LSG vs PBKS: "இதைத்தான் அணியின் ஆலோசனைக் கூட்டத்தில் பேசினோம்" - வெற்றி குறித்து ஸ்ரேயாஸ் ஐயர்

ஐபிஎல் தொடரில் நேற்று ( ஏப்ரல்1) நடந்தபோட்டியில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியும், பஞ்சாப் கிங்ஸ் அணியும் மோதின. போட்டியில் முதலில் பேட்டிங் செய்த லக்னோ அணி 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட் இழப்புக்கு 17... மேலும் பார்க்க

LSG vs PBKS: கிண்டல் செய்த திக்வேஷ் சிங்; அபராதம் விதித்த பிசிசிஐ; மைதானத்தில் என்ன நடந்தது?

நேற்று ( ஏப்ரல்1) நடந்த போட்டியில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியும், பஞ்சாப் கிங்ஸ் அணியும் மோதின. போட்டியில் முதலில் பேட்டிங் செய்த லக்னோ அணி 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட் இழப்புக்கு 171 ரன்கள் எடுத்... மேலும் பார்க்க

Nehal Wadhera: 'ரிக்கி பாண்டிங் ஒரு வார்த்தை கூட நெகட்டிவாக பேசமாட்டார்'- கோச் பற்றி நெகிழும் வதேரா

'பஞ்சாப் வெற்றி!'லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் மற்றும் பஞ்சாப் கிங்ஸ் அணிகளுக்கிடையேயான ஆட்டம் லக்னோவில் நடந்திருந்தது. இந்தப் போட்டியில் பஞ்சாப் அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் வென்றிருக்கிறதுNehal Wadheraஇ... மேலும் பார்க்க

Dhoni: "தோனிக்கெதிராக இவ்வாறு செய்யக் கூடாது; அவர் ஒய்வுபெற்றால்..." - கெயில் கூறுவது என்ன?

ஆர்.சி.பி-க்கெதிரான போட்டியில் 13 ஓவர்களில் 6 விக்கெட் இழந்து வெற்றிக்கு 100+ ரன்கள் தேவை என்று சிஎஸ்கே தத்தளித்த நேரத்தில், தோனி இறங்காமல் அஸ்வின் இறக்கப்பட்டது குறித்து ரசிகர்கள் மத்தியில் பெரிய விவ... மேலும் பார்க்க

CSK vs DC: "தயவுசெய்து இவரை மட்டும் ப்ளேயிங் 11இல் எடுக்காதீர்கள்" - சிஎஸ்கே-க்கு ஹர்பஜன் வார்னிங்

ஐ.பி.எல்-இல் இந்தாண்டு சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் செயல்பாடுகள் பல்வேறு கேள்விகளுக்கும், விமர்சனங்களுக்கும் உள்ளாகியிருக்கின்றன. மும்பைக்கு எதிரான முதல் போட்டியில் மட்டும் வெற்றிபெற்ற சி.எஸ்.கே அணி,... மேலும் பார்க்க

MI vs KKR: "அஸ்வனி குமாரின் அந்த விக்கெட் மிக முக்கியமானது" - வெற்றிக்குப் பின்னர் ஹர்திக் பாண்டியா

மும்பை வான்கடே ஸ்டேடியத்தில் நேற்று (மார்ச் 31) நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் கொல்கத்தாவை வீழ்த்தி தனது வெற்றிக் கணக்கைத் தொடங்கியது மும்பை. இப்போட்டியில் டாஸ் வென்ற மும்பை கேப்டன் ஹர்திக் பாண்டியா, முதல... மேலும் பார்க்க