செய்திகள் :

Shankar : இயக்குநர் ஷங்கரின் சொத்துகளை முடக்கிய அமலாக்கத்துறை - நடவடிக்கையின் பின்னணி என்ன?

post image
2010ம் ஆண்டு ஷங்கர் இயக்கத்தில் ரஜினி, ஐஸ்வர்யா ராய் உள்ளிட்டோர் நடிப்பில் 'சன் பிக்சர்ஸ்' தயாரிப்பில் பிரமாண்ட பொருட்ச்செலவில் வெளியாகி, அதிக வசூலையும் குவித்தப் படம் 'எந்திரன்'.

இந்த 'எந்திரன்' திரைப்படத்தின் கதை காப்புரிமை தொடர்பான வழக்கில் இயக்குநர் ஷங்கரின் சொத்துகள் தற்போது அமலாக்கத்துறையால் முடக்கப்பட்டிருப்பதாகக் கூறப்படுகிறது. இதில் ஷங்கருக்கு சொந்தமான 10.11 கோடி ரூபாய் மதிப்பிலான மூன்று அசையா சொத்துக்கள் முடக்கப்பட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளது.

'எந்திரன்' திரைப்பட கதையின் காப்புரிமை குறித்தான இந்த வழக்கு 2011-ம் ஆண்டு இயக்குநர் ஷங்கர் மீது எழுத்தாளர் ஆரூர் தமிழ்நாடன் என்பவரால் எழும்பூர் குற்றவியல் நீதிமன்றத்தில் தொடரப்பட்டிருந்தது. அப்போது இது குறித்து ஆரூர் தமிழ்நாடன், “ 'ஜூகிபா' கதைக்கும் 'எந்திரன்' கதைக்கும் பல ஒற்றுமைகள் இருக்கின்றன. என் கதையைத் திருடி `எந்திரன்' திரைப்படத்தை எடுத்து, இயக்குநர் சங்கர் மோசடி செய்திருக்கிறார். இது காப்புரிமைச் சட்டப்படி கிரிமினல் குற்றம்" என்று குற்றம்சாட்டி வழக்குத் தொடர்ந்திருந்தார்.

"யாருடையக் கதையையும் நாங்கள் திருடவில்லை. இது எங்களுடையை கதைதான்" என்று ஆரூர் தமிழ்நாடனின் இந்த வழக்கை எதிர்த்து இயக்குநர் ஷங்கரும் தயாரிப்பாளர் கலாநிதி மாறனும், சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார்.

இதையடுத்து சென்னை உயர் நீதிமன்றத்தில் நடந்த இந்த வழக்கில் `ஜூகிபா' கதைக்கும் `எந்திரன்' படத்துக்குமான 16 ஒற்றுமைகளைப் பட்டியலிட்டுக் காட்டியிருந்தார் ஆரூர் தமிழ்நாடன். இதை உறுதி செய்த நீதிபதி, இந்த வழக்கைத் தொடர்ந்து நடத்த அனுமதி வழங்கினார். அவ்வகையில் 2011ம் ஆண்டு தொடரப்பட்ட இந்த வழக்கு பல ஆண்டுகளாக் நடைபெற்றுக் கொண்டிருந்தது.

ஆரூர் தமிழ்நாடன்

இந்நிலையில் தற்போது இந்த வழக்கின் அடிப்படையில் ஷங்கருக்கு சொந்தமான 10.11 கோடி ரூபாய் மதிப்பிலான மூன்று அசையா சொத்துக்கள் முடக்கப்பட்டுள்ளன. தற்போது ஷங்கரின் சொத்துகள் முடக்கப்பட்ட தகவல்கள் மட்டும் அதிகாரபூர்வமாகத் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. இது தொடர்பான விரிவான தகவல்களை அமலாக்கத்துறை தீவிர விசாரணைக்குப் பிறகு வெளியிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Dragon: "உங்களில் ஒருவனாக என்னை இங்கு நிற்க வைத்ததற்கு நன்றி..." - பிரதீப் ரங்கநாதன் நெகிழ்ச்சி

பிரதீப் ரங்கநாதன் நடிப்பில் உருவாகியிருக்கிற `டிராகன்' திரைப்படம் நேற்று (பிப்ரவரி 22) திரையரங்குகளில் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது.`லவ் டுடே' வெற்றிக்குப் பிறகு பிரதீப் மீண்டும் ஏ.ஜி.எஸ் ... மேலும் பார்க்க

`திராவிடர் கழகப் பெண்ணுக்கும், பாஜக ஐ.டி விங் பையனுக்குமான காதல் கதை அது!' - தியாகராஜன் குமாராராஜா

யுகபாரதி எழுதிய `மஹா பிடாரி' என்ற கவிதை தொகுப்பு நூல் வெளியீட்டு விழாவில் தமிழ் சினிமாவின் ஆளுமைகள் பலரும் பங்கேற்று உரையாற்றினர். நூல் வெளியீட்டு விழாவின் காணொளிகள் அனைத்தும் ஒவ்வொன்றாக சினிமா விகடன்... மேலும் பார்க்க

Amaran 100 : `` `நல்லப் படம் இல்லைனு தெரிஞ்சும் பண்றியா'னு எம்.ஜி.ஆர் சொன்ன வார்த்தை!" - கமல்ஹாசன்

கடந்தாண்டு தீபாவளி பண்டிகைக்கு நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான நிரைப்படம் `அமரன்'. மேஜர் முகுந்த் வரதராஜனின் வாழ்க்கையை அடிப்படையாகக்கொண்டு உருவான இத்திரைப்படத்தை ராஜ்கமல் நிறுவனம் தயாரித்தி... மேலும் பார்க்க

Dragon Review: `ஃபயர் ஃபயரும்மா...' அட்டகாசமான திரையனுபவமாகிறதா இந்த `டிராகன்'?

தன் வாழ்க்கையின் நலனுக்காக எந்தத் தவற்றையும் செய்யத் துணியும் இளைஞன், அதன் விளைவுகளை உணரும் கமெர்ஷியல் பயணமே இந்த 'டிராகன்'.48 அரியர்களுடன் கல்லூரியில் கெத்தாகத் திரிந்த 'டி. ராகவன்' என்கிற 'டிராகன்' ... மேலும் பார்க்க

NEEK Review: இந்த நிலா வெளிச்சம் பாய்ச்சுகிறதா, மேகங்களிடையே மறைந்து ஏமாற்றுகிறதா?

காதல் தோல்வியால் திருமணம் செய்யாமலிருக்கும் பிரபுவை (பவிஷ் நாராயண்) கட்டாயப்படுத்தி பெண் பார்க்கக் கூட்டிச் செல்கிறார்கள் அவரது பெற்றோர். அங்கே சென்றால், அவனது பள்ளித் தோழி பிரீத்தி (ப்ரியா பிரகாஷ் வா... மேலும் பார்க்க