செய்திகள் :

SIR: ``எங்களை காயப்படுத்தாதீர்கள், காயமடைந்த புலி மிகவும் ஆபத்தானது'' - மேற்கு வங்க முதல்வர் மம்தா

post image

இன்னும் சில மாதங்களில் பீகார், மேற்கு வங்கம், தமிழ்நாடு என அடுத்தடுத்து சட்டமன்றத் தேர்தல்கள் நடைபெறவிருக்கின்றன. சட்டமன்றத் தேர்தல் நடைபெறும் மாநிலங்களில் இந்திய தேர்தல் ஆணையம் வாக்காளர் பட்டியல்களின் சிறப்பு தீவிர திருத்தம் (SIR) நடத்திவருகிறது.

சமீபத்தில் பீகாரில் SIR நடத்தி முடித்திருக்கும் நிலையில், மேற்கு வங்கத்தில் SIR நடத்துவதற்கான ஏற்பாடுகள் தொடங்கப்பட்டிருக்கின்றன. இது தொடர்பாக ஆய்வு நடத்த இந்திய தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் நேற்று மேற்கு வங்கம் சென்றிருக்கிறார்.

இந்த விவகாரம் தொடர்பாக நபன்னாவில் நடந்த கூட்டத்தில் மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி செய்தியாளர்களைச் சந்தித்தார்.

தேர்தல் ஆணையம் - SIR
Election Commission - SIR

அப்போது, ``பா.ஜ.க-வின் "ரப்பர் ஸ்டாம்ப்" போல செயல்படும் இந்திய தேர்தல் ஆணையக் குழு, மாநில அரசு அதிகாரிகளை அச்சுறுத்துகிறது.

எங்கள் மாநில வாக்காளர்களை வாக்காளர் பட்டியலிலிருந்து நீக்குவதை பொறுத்துக்கொள்ள முடியாது. பா.ஜ.க தலைமையிலான மத்திய அரசு, தங்கள் அரசியல் நலனுக்காக வாக்காளர்களின் வாக்குரிமையை பறிக்க SIR ஐ பயன்படுத்துகிறது.

SIR செயல்முறையே ஒரு மோசடி. மாநில அதிகாரிகள் கூட்டங்களுக்கு அழைக்கப்பட்டு அச்சுறுத்தப்படுகிறார்கள். அதே நேரத்தில் மாநில அரசு இந்த விவாதங்களில் இருந்து முற்றிலும் விலக்கப்பட்டுள்ளது.

மேற்கு வங்க தேர்தல் ஆணைய தலைமை நிர்வாக அதிகாரி மனோஜ் அகர்வால் மீது பல புகார்கள் உள்ளன. அதை நான் சரியான நேரத்தில் வெளிப்படுத்துவேன்.

ஆனால் அவர் மிகைப்படுத்த மாட்டார் என்று நம்புகிறேன். அவர் பல அதிகாரிகளை அச்சுறுத்தி வருகிறார். மேற்கு வங்காளத்தில் சட்டமன்றத் தேர்தல் தேதிகள் இன்னும் அறிவிக்கப்படவில்லை.

மாநிலத்திற்கு வருகை தரும் தேர்தல் ஆணைய அதிகாரிகள் அரசு அதிகாரிகளை எவ்வாறு வரவழைக்க முடியும்? அதிகாரிகளை எவ்வாறு அச்சுறுத்த முடியும்?

தேர்தல் - மோடி
தேர்தல் - மோடி

நான்கு தேர்தல் குழு அதிகாரிகள் BLRO-க்களை அழைத்து அவர்களின் அறிவுறுத்தல்களின்படி ஆவணங்களைத் தயாரிக்குமாறு மிரட்டியதாகக் கூறப்படுகிறது.

பா.ஜ.க எம்.பியும் மத்திய அமைச்சருமான சாந்தனு தாக்கூர் SIR மூலம் சுமார் 1.2 கோடி சட்டவிரோத வாக்காளர்களை மாநில வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்க முடியும் என்று கூறுகிறார்.

தேர்தல் ஆணையத்தால் 1.2 கோடி வாக்காளர்கள் நீக்கப்படுவார்கள் என்று ஒரு மத்திய அமைச்சர் எப்படி முன்கூட்டியே அறிவிக்க முடியும்? அப்படியானால் பா.ஜ.க அலுவலகத்தில்தான் திட்டங்கள் தயாரிக்கப்படுகின்றனவா?

தேர்தல் ஆணையத்திடமிருந்து நாம் பாரபட்சமற்ற தன்மையை எதிர்பார்க்கிறோம். அரசும் எதிர்க்கட்சியும் சேர்ந்துதான் ஜனநாயகத்தின் கட்டமைப்பை உருவாக்குகின்றன.

எல்லாவற்றிற்கும் மேலாக, ஜனநாயகத்தின் தூண்கள் அரசியலமைப்புச் சட்டமும் பொது மக்களும்தான். ஒரு குடிமகனின் வாக்களிக்கும் உரிமையைப் பறிக்க யாருக்கும் உரிமை இல்லை.

உண்மையான வாக்காளர்கள் நீக்கப்பட்டால், வங்காள மக்கள் வேறு எந்த மாநிலமும் செய்ய முடியாத வகையில் பதிலளிப்பார்கள்.

Mamata Banerjee
Mamata Banerjee

நெருப்புடன் விளையாடாதீர்கள். நாங்கள் ராயல் பெங்கால் புலி. எங்களைக் காயப்படுத்தாதீர்கள். காயமடைந்த புலி மிகவும் ஆபத்தானது.

இது SIR அல்ல. இது ஒரு பின்கதவு NRC. பாஜக அரசு மற்றும் அதன் அறிவுறுத்தல்களின் கீழ் செயல்படும் மத்திய நிறுவனங்கள், கல்வி முதல் பண்டிகைகள் வரை அனைத்தையும் அரசியலாக்கி காவிமயமாக்கி வருவதை நாங்கள் கடுமையாக கண்டிக்கிறோம்.

மத்தியில் இருப்பவர்கள் எல்லாவற்றையும் கட்டுப்படுத்த முடியும் என்று நினைக்கிறார்கள். ஆனால் அவர்கள் இப்படியே தொடர்ந்தால், ஒருநாள் பூனை பையில் இருந்து வெளியே வரும்.

பீகாரில் பா.ஜ.க-என்.டி.ஏ அரசாங்கம் இருப்பதால், அங்குள்ள நிறுவனங்கள் அதற்கு உதவியதால், அவர்களால் (தேர்தல் ஆணையம்) பீகாரில் SIR நடத்த முடிந்தது.

ஆனால் வங்காளத்தின் சமூக அமைப்பு முற்றிலும் வேறுபட்டது. இங்கு, இந்துக்கள், முஸ்லிம்கள், சீக்கியர்கள் மற்றும் கிறிஸ்தவர்களைத் தவிர, எஸ்சி, எஸ்டி மற்றும் பிற சிறுபான்மை சமூகங்களும் உள்ளன.

ராஜ்போங்ஷிகள், சிறுபான்மை குழுக்கள் மற்றும் புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கு ஏற்கனவே NRC அறிவிப்புகள் அனுப்பப்பட்டுள்ளன." என்று குறிப்பிட்டிருக்கிறார்.

"போரை நிறுத்தும் பணியை ட்ரம்ப் தொடர்வார்" - நோபல் குழுவை விமர்சித்த வெள்ளை மாளிகை

அமெரிக்க அதிபராகப் பதவியேற்ற பிறகு, தான் அமைதிக்கான நோபல் பரிசுக்கு தகுதியானவன், தனக்கு நோபல் பரிசு தர வேண்டும் என்று கடந்த ஏழெட்டு மாதங்களாகக் கூறி வந்தார் டொனால்ட் ட்ரம்ப்.அமெரிக்காவின் உதவியுடன் கா... மேலும் பார்க்க

அமைதிக்கான நோபல் பரிசு பெற்ற 'மரியா கொரினா மச்சாடோ' - தலைமறைவாக இருப்பது ஏன்?

2025ம் ஆண்டுக்கான அமைதிக்கான நோபல் பரிசை பெற்றுள்ளார் வெனிசுலா நாட்டைச் சேர்ந்த மரியா கொரினா மச்சாடோ. மக்களாட்சிப் போராளியான இவர், பல ஆண்டுகளாக வெனிசுலாவின் சர்வாதிகார ஆட்சியாளர் நிக்கோலஸ் மதுரோவின் அ... மேலும் பார்க்க

புதுச்சேரி: `மாணவர்கள் மீதான வழக்கை உடனே திரும்பப் பெற வேண்டும் என எச்சரிக்கிறோம்!’ -தகிக்கும் திமுக

`புதுச்சேரி பல்கலைக்கழகத்தில் பாலியல் புகாருக்குள்ளான பேராசிரியர்களை கைது செய்ய வேண்டும்’ என்று போராட்டம் நடத்திய மாணவர்கள் மீது தாக்குதல் நடத்தியதுடன், அவர்களை போலீஸார் கைது செய்தனர். புதுச்சேரியில் ... மேலும் பார்க்க

புதுச்சேரி: பல்கலைக்கழக மாணவர்களை `ஷு’ காலால் தாக்கிய போலீஸார் - `லெஃப்ட் ரைட்’ வாங்கிய எம்.எல்.ஏ

மாணவர்கள் மீது கொடூர தாக்குதல்புதுச்சேரி பல்கலைக்கழகத்தின் காரைக்கால் கிளையில் பேராசிரியராகப் பணியாற்றி வரும் மாதைய்யா, தன்னை தொடர்ச்சியாக பாலியல் ரீதியில் தொல்லை செய்வதாக மாணவி ஒருவர் கதறும் ஆடியோ பு... மேலும் பார்க்க

"நாடகமாடுறீங்களா, அவருக்கு ஏதாச்சும் ஆச்சுனா தொலைச்சிடுவேன்" - ராமதாஸ் குறித்து அன்புமணி

பாட்டாளி மக்கள் கட்சியில் நிறுவனர் ராமதாஸுக்கும், தலைவர் அன்புமணிக்கும் இடையே கட்சி நிர்வாக அதிகாரம் தொடர்பாக பல மாதங்களாக உட்கட்சி மோதல் நடந்து கொண்டிருக்கிறது.இத்தகைய சூழலில், கடந்த வாரம் (அக்டோபர் ... மேலும் பார்க்க

கரூர் வழக்கு: கூட்டத்தில் சமூக விரோத கும்பல் டு விஜய்-ன் தாமதம்- உச்ச நீதிமன்றத்தில் பரபரத்த விசாரணை

கரூர் மாவட்டத்தில் கடந்த செப்டம்பர் 27ம் தேதி தமிழக வெற்றிக் கழகம் தலைவர் விஜய் பரப்புரை செய்தபோது ஏற்பட்ட நெரிசலில் 41 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியிருந்தது. இந்த விவகாரம் குறித்த... மேலும் பார்க்க