செய்திகள் :

Siragadikka aasai: முத்து - மீனா கொடுத்த அதிர்ச்சி; பல்ப் வாங்கிய ரோகிணி!

post image

சிறகடிக்க ஆசை நேற்றைய (அக்டோபர் 23) எபிசோடில் ரோகிணி - மனோஜ் திருமண நாள் மற்றும் பிஸ்னஸ் பார்ட்டியில் குடும்பமாக அனைவரும் கலந்து கொள்ள ஒப்புக் கொள்கின்றனர். ஆரம்பத்தில் மீனாவும் ஸ்ருதியும் ஒப்புக்கொள்ளவில்லை. ரோகிணி எதையோ பேசி சம்மதிக்க வைக்கிறார். ஆச்சர்யமூட்டும் விதமாக முத்துவும் சம்மதிக்கிறார். 

இரவு தூங்க செல்வதற்கு முன் மீனாவும் முத்துவும் மனோஜ் செய்வதைப் பற்றி பேசுகின்றனர். முத்துவின் காலை மீனா பிடித்து விட முயற்சிக்க உடனே முத்து என் காலெல்லாம் பிடிக்காத என்று தடுக்க, "அட நீங்கதான் 50 காருக்கு ஓனராச்சே” என்று கிண்டல் செய்கிறார். பதிலுக்கு முத்தும் மீனாவை கலாய்க்கிறார். ஆனால் இருவரும் நிர்ப்பந்தத்தின் பேரில் ஒப்புக்கொண்டதாகவும், இது பிடிக்கவில்லை என்றும் சொல்கின்றனர். 

சிறகடிக்க ஆசை
Siragadikka aasai

பெரிய ஸ்டார் ஹோட்டலில் பார்ட்டி நடக்கிறது. விஜயாவுக்கு  பழங்கால நடிகை போன்று ரோகிணி `மேக் அப்’  போட்டு விடுகிறார். விஜயாவை பார்த்ததும் அண்ணாமலை ரொமாண்டிக் லுக் விடுகிறார். அண்ணாமலை கதாபாத்திரத்தில் நடிக்கும் சுந்தர்ராஜன், தான் ஒரு ஆகச் சிறந்த நடிகர் என்பதை அடிக்கடி நிரூபிக்கிறார். 

அடுத்ததாக மனோஜ்-ரோகிணி, ரவி-ஸ்ருதி ஆகியோரும் பணக்காரர்கள் போல மேக் அப் போட்டுக் கொண்டு வருகிறார்கள். ஆனால் முத்து மீனா வர தாமதம் ஆகிறது. விஜயா அவர்களை வழக்கம் போல மட்டம் தட்டி பேசுகிறார்.

சிறகடிக்க ஆசை
Siragadikka aasai

அந்த சமயத்தில் முத்து - மீனா  கெத்தாக அறைக்குள் நுழைகின்றனர். மனோஜை விட முத்து மாஸாக இருக்கிறார். முத்து எதை பற்றியும் கவலைப்படாமல், "மீனா நீ ரொம்ப அழகா இருக்க உன்ன நான் போட்டோ எடுக்கிறேன்" என்று யதார்த்தமாக நடந்து கொள்கிறார். அங்கிருந்த அனைவரும் மீனா- முத்துவை ஆச்சர்யத்துடன் பார்க்கின்றனர். 

முத்து போட்டோ எடுத்து கொண்டிருக்கும் போது, மனோஜ் போன் பேசிக்கொண்டே முத்துவை மோதுகிறார். முத்துவுக்கு கோபம் வந்து கத்துகிறார். ஆனால் யாரும் கவனிக்கவில்லை. முத்துவின் போன் கீழே விழுந்ததைப் பார்த்து வித்யா பதறி, போனுக்கு எதுவும் ஆகலையே என்று கேட்கிறார்.

சிறகடிக்க ஆசை

பின்னர் ரோகிணி முத்துவிடம் போனை கேட்கிறார். "கொடுங்க நான் போட்டோ எடுத்து தர்றேன்" என்று கேட்க முத்து தரவில்லை. ரோகிணியின் திட்டம் தோல்வி அடைகிறது. அடுத்து வரும் எபிசோடுகளில் மனோஜின் பிஸ்னஸ் என்னவானது, இந்த பார்ட்டி எப்படி முடியும் என்பது தெரியும். 

சினிமா விகடனின் பிரத்யேக Whatsapp க்ரூப்

https://chat.whatsapp.com/E0QlpeNbGHnF9W5rFKCVSU

சினிமா தொடர்பான எக்ஸ்க்ளூசிவ் அப்டேட், அசத்தல் பேட்டிகள், டி.வி அப்டேட்கள் என எதையும் மிஸ் செய்யாமல் தெரிந்து கொள்ள...

உங்கள் வாட்ஸ் அப் மூலமே இணைந்திருங்கள் சினிமா விகடனுடன்...

https://chat.whatsapp.com/E0QlpeNbGHnF9W5rFKCVSU

BB Tamil Day 17: 'போடா - போடி' ஜெஃப்ரிக்கும் சாச்சனாவிற்கும் சண்டை; ‘திண்டுக்கல் ரீட்டா’வாக விஷால்

ஹோட்டல் டாஸ்க்கில் பெண்கள் அணி ஓவர் அலப்பறை செய்தது. ஆண்களைப் பழிவாங்குவது போலவே நடந்து கொண்டதைப் போல் தெரிந்தது. எழுதுவதற்கு இடம் போதாத அளவிற்கு பலகையில் நிறைய புகார்களை எழுதிக் குவித்தார்கள். இந்த ம... மேலும் பார்க்க

Bigg Boss Tamil 8: `standby arunprasath' - வீடியோ பகிர்ந்து அருணுக்கு ஆதரவளித்த அர்ச்சனா

விஜய் டிவியில் பிக் பாஸ் சீசன் 8 அக்டோபர் 6ம் தேதி ஒளிபரப்பாகத் தொடங்கியது. அர்னவ், ரவீந்தர், தர்ஷா குப்தா, பவித்ரா ஜனனி உள்ளிட்ட பதினெட்டுப் பேர் போட்டியாளர்களாக பிக் பாஸ் வீட்டுக்குள் சென்றனர்.Bigg ... மேலும் பார்க்க

Serial Update: `அன்று வருத்தம்; இன்று வாய்ப்பு'- சன் டி.வியின் புதிய சீரியல்; மீண்டும் இணையும் ஜோடி

குழந்தை நட்சத்திரமாக நடிக்கத் தொடங்கி சினிமா, சீரியல் என இப்போது வரை பிஸியாக இருப்பவர் நீலிமா ராணி. சன், ஜீ தமிழ் உள்ளிட்ட முக்கிய சேனல்கள் எல்லாவற்றிலும் இவர் நடித்த சீரியல்கள் ஒளிபரப்பாகி உள்ளன.ஆரம்... மேலும் பார்க்க

Kayal & Karthigai Deepam: தீபாவை நெருங்கும் பேராபத்து | மூர்த்தி பற்றி அறியும் கயல்?

கயல்-எழில் திருமணம் முடிந்தும் நிம்மதி கிடைக்காதுபோல. இந்த சீரியலில் மட்டும் தான் தினமும் ஒரு புது பிரச்னை வருகிறது. கயலின் அண்ணன் மூர்த்தி மருத்துவமனையில் ஆபத்தான நிலையில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார்.... மேலும் பார்க்க

BB Tamil 8 Day 16: முத்துவோட லவ் ஸ்டோரி; என்னை அக்கான்னு கூப்பிடறாங்க - தர்ஷாவின் சிணுங்கல்

இன்றைய எபிசோடு சற்றாவது சுவாரசியமாக அமைந்ததற்கு காரணம், ‘ஸ்டார் ஹோட்டல் டாஸ்க்’. ஆண்கள் போட்ட டீலை, ‘குத்தினா கத்துவேன், கத்தினா குத்துவேன்’ என்கிற மாதிரி ராஜதந்திரத்துடன் கையாண்டு பெண்கள் அணி டபாய்த்... மேலும் பார்க்க

BB Tamil 8: `தோழி செளந்தர்யாவுக்கு நான் சொல்லி அனுப்புன விஷயம்'- `பிக் பாஸ்' விஷ்ணு சொல்வதென்ன?

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் தமிழ் 8 கொஞ்சம் கொஞ்சமாக விறுவிறுப்பாக தொடங்கியிருக்கிறது. நடிகர் ரஞ்சித், சீரியல் நடிகர் அருண், நடிகை பவித்ரா, மாடல் சௌந்தர்யா உள்ளிட்ட 18 போட்டியாளர்களுடன்... மேலும் பார்க்க