Tesla: எலான் மஸ்க் – டொனால்ட் டிரம்ப் மோதல்; நண்பனிடம் வாங்கிய டெஸ்லா காரை விற்கும் ட்ரம்ப்!
அமெரிக்க அதிபராக ட்ரம்ப் பதவியேற்ற புதிதில், டெஸ்லா கார் விற்பனை குறைந்தது.
தனக்கு தேர்தலில் வெற்றி பெற உதவிய நண்பன் எலான் மஸ்கின் தொழிலை மேம்படுத்த 'சிங்கிள் பேமென்டில்' டெஸ்லா காரை வாங்கினார், ட்ரம்ப.
அப்போது எலான் மஸ்க் குறித்து ட்ரம்ப், "இப்போது நான் டெஸ்லா வாங்கியதற்கு இரண்டு காரணங்கள் உள்ளது. ஒன்று, எனக்கு டெஸ்லா கார் வாங்க வேண்டும். இன்னொன்று, இதில் மஸ்க் அவரது எனர்ஜி மற்றும் வாழ்க்கையை போட்டுள்ளார். அவர் தவறாக நடத்தப்படுகிறார் என்று நினைக்கிறேன். அதனால் தான், காரை வாங்கினேன்". என்று குறிப்பிட்டார்.

ட்ரம்ப் - எலான் மஸ்க் நட்பில் இப்போது விரிசல் உண்டாகி உள்ள சூழலில், சிவப்பு டெஸ்லா காரை ட்ரம்ப் விற்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
ட்ரம்பின் 'ஒன் பிக் அண்ட் பியூட்டி ஃபுல் பில்'லிற்கு எலான் மஸ்க் அதிருப்தி தெரிவிக்கவே இருவருக்கும் இடையே பிரச்னை தொடங்கியது.
ஒரு கட்டத்தில், இருவருக்கும் இடையே சமூக வலைதளத்தில் வார்த்தைப் போர் முற்றியது. இதன் விளைவாக எலான் மஸ்க் எப்ஸ்டீன் ஃபைல் குறித்த குற்றச்சாட்டு ஒன்றை ட்ரம்ப் மீது சுமத்தி உள்ளார்.
ட்ரம்ப்பும் சமாதானம் குறித்து யோசிக்கவில்லை என்று நேற்று செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார்.