செய்திகள் :

Doctor Vikatan: அதிகம் சாப்பிட முடியாத நிலை, 'வயிறு சுருங்கிடுச்சு..' என்பது சாத்தியமா?

post image

Doctor Vikatan: குறைவாக சாப்பிட்டுப் பழகியவர்களுக்கு ஒரு கட்டத்தில் அதுவே பழகிவிடுகிறது. ஆசைப்பட்டாலும் அதற்கு மேல் அதிகமாக சாப்பிட முடிவதில்லை. 'வயிறு சுருங்கிடுச்சு...' என்று சொல்கிறோம். வயிறு சுருங்க வாய்ப்பு உண்டா....? எத்தனை நாள்களில் வயிறு சுருங்க ஆரம்பிக்கும்... வயிறு சுருங்குவதைப் போலவே, அதிகம் சாப்பிடுவோருக்கு வயிறு விரிய வாய்ப்பு உண்டா?

பதில் சொல்கிறார், கோயம்புத்தூரைச் சேர்ந்த பாரியாட்ரிக் மற்றும் வளர்சிதை மாற்ற அறுவை சிகிச்சை மருத்துவர் பாலமுருகன்.

பாரியாட்ரிக் மற்றும் வளர்சிதை மாற்ற அறுவை சிகிச்சை மருத்துவர் பாலமுருகன்

அடல்ட் எனப்படும் வளர்ந்த ஒருவரின் இரைப்பையின் கொள்ளளவு 1.5 முதல் 2 லிட்டர் வரை இருக்கும். இது அதிகபட்சமாக 4 லிட்டர் வரை விரிவடைய வாய்ப்பு உண்டு.

ஒருவர் நன்றாகச் சாப்பிட்டே பழகியதாகச் சொல்வது அவரது வயிற்றின் கொள்ளளவை வைத்துதான். பொதுவாக ஒருவரால் 1.5 முதல் 2 லிட்டர் வரை வயிறு நிறையும்வரை சாப்பிட முடியும். அத்துடன் போதும் என்ற உணர்வு ஏற்படும். ஆனால், சிலர் என்னதான் வயிறு முட்ட சாப்பிட்டாலும் சிறிது நேரத்திலேயே மீண்டும் பசி எடுப்பதாகச் சொல்வார்கள். அதற்குக் காரணம் அவர்களின் ஹார்மோன்கள்.

நம் உடலில் பசியை ஏற்படுத்தும் ஹார்மோன்கள் சுரக்கும். அந்த ஹார்மோன்கள் 'கிரெலின்' (Ghrelin) என அழைக்கப்படுகின்றன. வயிறு காலியாக இருக்கும்போது இந்த ஹார்மோன் 100 சதவிகிதம் சுரக்கும். அது சுரந்ததும்  பசி உணர்வு ஏற்படும். நன்றாகச் சாப்பிடுவோம். முன்னரே குறிப்பிட்டபடி, வயிற்றின் கொள்ளளவு போதும் என உணர்த்தியதும், வேறு சில ஹார்மோன்கள் சுரக்கும்.

சிலர் என்னதான் வயிறு முட்ட சாப்பிட்டாலும் சிறிது நேரத்திலேயே மீண்டும் பசி எடுப்பதாகச் சொல்வார்கள். அதற்குக் காரணம் அவர்களின் ஹார்மோன்கள்.

இன்க்ரெட்டின்ஸ் (Incretins) என்ற இந்த ஹார்மோன் அதிகம் சுரக்கும்போது, கிரெலின் ஹார்மோன் பூஜ்ஜியம் என்ற அளவுக்கு வந்து, சாப்பிட்டது போதும் என உணர்த்தும். சிலருக்கு சாப்பிட்ட சிறிது நேரத்திலேயே  இந்த கிரெலின் ஹார்மோன் மீண்டும் சுரக்கும். அதற்குக் காரணம், உடல் பருமன். கொழுப்பின் சதவிகிதம் அதிகமிருப்பவர்களுக்கும், அதன் காரணமாக இன்சுலின் எதிர்ப்புத்தன்மை உள்ளவர்களுக்கும் கிரெலின் மீண்டும் சுரந்து, மீண்டும் பசி எடுக்கும்.

இந்த உணர்வைக் கட்டுப்படுத்த மருந்துகள் உள்ளன. தவிர, உடல் பருமனைக் குறைத்து, உடற்பயிற்சிகள் செய்யத் தொடங்க வேண்டும். எனவே, இதில் வயிறு 1.5 லிட்டரைவிட குறைவாகச் சுருங்கவோ, 4 லிட்டரைவிட அதிகமாக விரியவோ மாற வாய்ப்பில்லை. அவரவர் உடல் எடை, ரத்தச் சர்க்கரை அளவு, ஹார்மோன்கள் சுரக்கும் அளவு போன்றவற்றைப் பொறுத்து இது மாறும்.

உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதியில் பகிர்ந்துகொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும்.

``இந்த 12 நாட்டு மக்கள் அமெரிக்காவிற்குள் இனி நுழைய முடியாது..'' - ட்ரம்ப் அறிவிப்பு; என்ன காரணம்?

அமெரிக்க அதிபர் ட்ரம்ப் தொடர்ந்து பல அதிரடி அறிவிப்புகளை வெளியிட்டு வருகிறார். அப்படி நேற்று, உலகில் உள்ள குறிப்பிட்ட 12 நாடுகளைச் சேர்ந்த மக்கள் அமெரிக்காவிற்குள் அனுமதிக்கப்பட மாட்டார்கள் என்று அறிவ... மேலும் பார்க்க

Bangladesh: டிசம்பருக்குள் தேர்தல்! ராஜினாமா செய்யும் யூனுஸ்; ஹசீனாவின் எதிர்காலம்..? | In Depth

ரோட்டில் நின்றுகொண்டிருந்த பஸ்களும், கார்களும் கரும் புகைகளைக் கிளப்பி எரிந்துகொண்டிருக்க, கீழே சிதறிக் கிடக்கும் கற்களில் ஆங்காங்கே ரத்தம் தோய்ந்து… காய்ந்திருக்கின்றன. கற்களுடன் ஆங்காங்கே கட்டைகளும்... மேலும் பார்க்க

``2027-ல் மக்கள்தொகை கணக்கெடுப்பு; பாஜக சதி, பழனிசாமி துணை.." - ஸ்டாலின் குற்றச்சாட்டு

மக்கள்தொகை கணக்கெடுப்பு 2027 குறித்த தகவலை நேற்று மத்திய உள்துறை அமைச்சகம் வெளியிட்டது. 2027-ம் ஆண்டு வரை மக்கள்தொகை கணக்கெடுப்பை தள்ளிப்போடுவதற்கு, தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் எதிர்ப்பு தெரிவித்து... மேலும் பார்க்க

Varicose: கால் நரம்புகள் சுருண்டு வெரிகோஸ் வெயின்ஸ் பிரச்னை; இயற்கை மருத்துவத்தில் தீர்வுஉண்டா?

’’கர்ப்பிணிப்பெண்கள், உடல் பருமன் உள்ளவர்கள் மற்றும் ஒரே இடத்தில் நின்று வேலை செய்பவர்களுக்கு வெரிகோஸ் வெயின்ஸ் வருவதற்கு வாய்ப்புகள் அதிகம். காலின் தோலுக்கு அடியில் ரத்தம் மேலும் கீழும் செல்ல முடியாம... மேலும் பார்க்க

``ஒரு மொழியை சிறுமைப்படுத்தி, ஒரு மொழியை உயர்த்திப் பேசுவது தேவையில்லாதது!'' - நயினார் நாகேந்திரன்

புதுக்கோட்டையில் பா.ஜ.க மாவட்ட துணைத் தலைவர் முருகானந்தத்தின் இல்ல புதுமனை புகுவிழா நிகழ்ச்சி வருகின்ற எட்டாம் தேதி நடைபெற உள்ளது.இன்று அவரது இல்லத்திற்கு பா.ஜ.க மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் வந்தி... மேலும் பார்க்க

Kamal: ``கமல் பேசியதில் எந்த தவறும் இல்லை; தமிழ் மொழியில் இருந்துதான் கன்னடம் வந்தது'' - கே.என்.நேரு

நடிகரும் மக்கள் நீதி மய்ய தலைவருமான கமலஹாசன் இயக்குநர் மணிரத்தினம் இயக்கத்தில் தக்ஃலைப் திரைப்படத்தில் நடித்திருக்கிறார். இந்தபடம் நாளை (ஜூன் 5 ஆம் தேதி) வெளியாக உள்ள நிலையில் சென்னையில் கடந்த சில தின... மேலும் பார்க்க