செய்திகள் :

TNPL 2025: நம்ம விஜய் சங்கரா இது... பேட்டிங், பௌலிங்கில் அசத்தல்; திருப்பூரை வீழ்த்திய சேப்பாக்!

post image

கோவையில் நடைபெற்று வரும் டிஎன்பிஎல் 2025 சீஸன் இரண்டாவது போட்டியில், சேப்பாக் சூப்பர் கில்லிஸ், ஐடிரீம் திருப்பூர் தமிழன்ஸ் அணிகள் நேற்று இரவு மோதினார்கள். திருப்பூர் அணி முதலில் பேட்டிங் செய்தது. முதல் ஓவரிலேயே அபிஷேக் தன்வார் பந்து வீச்சில், திருப்பூர் அணியின் ஓப்பனிங் பேட்ஸ்மேன் அமித் சாத்விக் அவுட்டானார்.

திருப்பூர் அணி

பவர்பிளே முடிவில் அந்த அணி 46 ரன்கள் எடுத்தது. மறுபக்கம் துஷார் ரஹேஜா நிலைத்து நின்று ஆடினார். இதனால் அந்த அணிக்கு மிடில் ஓவர்களில் நல்ல ரன்கள் கிடைத்தன.

கலக்கிய விஜய் சங்கர்

ரஹேஜா 43 பந்துகளில் 79 ரன்கள் எடுத்து அவுட் ஆனார். அவரது விக்கெட்டுக்கு பிறகு திருப்பூர் அணியின் ரன் ரேட் மீண்டும் குறைந்தது. 20 ஓவர்கள் முடிவில் அந்த அணி 173 ரன்கள் எடுத்தது. சேப்பாக் அணி சார்பில் அபிஷேக், விஜய் சங்கர் தலா 2 விக்கெட்கள் எடுத்தனர்.

ரஹேஜா

174 ரன்கள் இலக்குடன் களமிறங்கிய சேப்பாக், ஆரம்பம் முதலே அதிரடி காட்டியது. அந்த அணியின் ஒரு ஓப்பனரான ஆஷிக் 2 ரன்களில் அவுட்டானாலும், அந்த அணியின் மற்றொரு ஓப்பனர் மோகித் ஹரிஹரன் 22 பந்துகளில் 46 ரன் எடுத்து நல்ல ஸ்டார்ட் கொடுத்தார்.

மிடில் ஓவர்களில் சேப்பாக் கேப்டன் அபராஜித், விஜய் சங்கர் பவுண்டரிகளை விளாசினர். அபராஜித் கடைசி வரை ஆட்டமிழக்காமல் 48 பந்துகளில் 77 ரன்களும், விஜய் சங்கர் 23 பந்துகளில் 41 ரன்களும் எடுத்தனர். இதன் மூலம் 16 ஓவர்கள் முடிவிலேயே சேப்பாக் அணி இலக்கை எட்டி வெற்றி பெற்றது.

அபராஜித்

திருப்பூர் அணி சார்பில் பௌலிங்கில் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட டி. நடராஜன் 2 ஓவர்களில் 26 ரன்கள் விட்டுக் கொடுத்தார். நட்டுவின் துல்லிய யார்க்கர்கள் மிஸ் ஆனது. இதனால் அவரின் பௌலிங்கில் விக்கெட்கள் வராமல் பவுண்டரிகள் அதிகம் சென்றன.

திருப்பூர் அணிக்கு அந்த அணியின் கேப்டன் சாய் கிஷோர் மட்டுமே சற்று நன்கு பௌலிங் செய்தார். மறுபக்கம் கடந்த ஐபிஎல் சீஸனில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக விளையாடிய விஜய் சங்கருக்கு சற்று சுமாரான சீஸனாகவே இருந்தது. வாய்ப்பு கிடைத்தபோதும் அவரின் ஸ்ட்ரைக் ரேட் விமர்சனத்துக்குள்ளானது.

சேப்பாக் அணி

இந்தப் போட்டியில் பௌலிங்கில் 2 விக்கெட்டுகள் எடுத்ததுடன் பேட்டிங்கில் 180 – 200 ஸ்ட்ரைக்  ரைட்டில் ஆடினார். முக்கியமாக விஜய், அபராஜித்துடன் இணைந்து 3வது விக்கெட்டுக்கு 105 ரன்கள் அமைத்த பார்ட்னர் ஷிப், சேப்பாக் அணிக்கு அசத்தலான வெற்றியை கொடுத்தது.!

சினிமா விகடனின் பிரத்யேக Whatsapp க்ரூப்

https://chat.whatsapp.com/JSk78H7siYK4aL2qO1RglR

சினிமா தொடர்பான எக்ஸ்க்ளூசிவ் அப்டேட், அசத்தல் பேட்டிகள், டி.வி அப்டேட்கள் என எதையும் மிஸ் செய்யாமல் தெரிந்து கொள்ள...

உங்கள் வாட்ஸ் அப் மூலமே இணைந்திருங்கள் சினிமா விகடனுடன்...

https://chat.whatsapp.com/JSk78H7siYK4aL2qO1RglR

'ஸ்ட்ராபெரி விவசாயி, யூடியூபர், திரிணாமுல் காங் எம்.பி..!' - அந்த 2011 டீம் இப்போ என்ன பண்றாங்க?

'பியூஷ் சாவ்லா ஓய்வு!'பியூஷ் சாவ்லா அனைத்துவிதமான கிரிக்கெட் போட்டிகளிலிருந்தும் ஓய்வு பெறுவதாக அறிவித்திருக்கிறார். கிரிக்கெட் ரசிகர்களை பொறுத்தவரைக்கும் இது ஒரு 'சிவாஜி செத்துட்டாரா...' மொமண்ட்தான்.... மேலும் பார்க்க

Gukesh - Magnus Carlsen: சாதனையைத் தவறவிட்ட குகேஷ்; 1.5 புள்ளி வித்தியாசத்தில் கார்ல்சன் சாம்பியன்!

நார்வே செஸ் தொடர் கடந்த மே 26-ம் தேதி தொடங்கியது. இத்தொடரில், உலகின் நம்பர் ஒன் செஸ் வீரர் மேக்னஸ் கார்ல்சன், உலக செஸ் சாம்பியன் குகேஸ், மற்றொரு இந்திய கிராண்ட் மாஸ்டர் அர்ஜுன் எரிகைசி உள்ளிட்டோர் கலந... மேலும் பார்க்க

ஆர்மினியா செஸ் தொடரில் அரவிந்த் சிதம்பரம் சாம்பியன்!; நூலிழையில் தவறவிட்ட பிரக்ஞானந்தா

ஆர்மீனியா நாட்டின் ஜெர்முக்கில் கடந்த மே 29-ம் தேதி, 6-வது ஸ்டீபன் அவக்யான் நினைவு செஸ் தொடர் (Stepan Avagyan Memorial chess tournament) தொடங்கியது.இதில், இந்தியாவைச் சேர்ந்த கிராண்ட் மாஸ்டர்கள் பிரக்... மேலும் பார்க்க

RCB : 'மது கம்பெனியை விளம்பரப்படுத்ததான் டீமை வாங்கினேன்!'- விஜய் மல்லையா சொல்லும் RCB கதை

'விஜய் மல்லையா பேட்டி...'பிரபல தொழிலதிபரும் வங்கிகளில் கடன் வாங்கி மோசடி செய்ததாக குற்றஞ்சாட்டப்படுபவருமான விஜய் மல்லையா 'ராஜ் சமானி' (Raj Shamani) என்பவரின் யூடியூப் சேனலுக்கு ஒரு பேட்டி அளித்திருக்க... மேலும் பார்க்க

Preity Zinta : 'நீங்க இல்லாம நாங்க இல்ல...' - நெகிழும் ப்ரீத்தி ஜிந்தா

நடந்து முடிந்த ஐ.பி.எல் சீசனில் பஞ்சாப் அணியை தோற்கடித்து பெங்களூரு அணி சாம்பியன் ஆகியிருந்தது. இந்நிலையில், பஞ்சாப் அணியின் உரிமையாளர்களுள் ஒருவரான ப்ரீத்தி ஜிந்தா அந்த அணியின் வீரர்கள் பற்றியும் ரசி... மேலும் பார்க்க

IPL : 'இளம் வீரர்களுக்கு எதற்கு அத்தனை கோடிகள்?' - கவாஸ்கர் காட்டம்!

ஐ.பி.எல் இல் ஆடும் இளம் வீரர்களுக்கு கோடிகளில் சம்பளம் கொடுப்பது பெரிய பலனை அளிப்பதில்லை என இந்திய அணியின் முன்னாள் வீரர் கவாஸ்கர் ஆங்கில பத்திரிகை ஒன்றுக்கு எழுதிய கட்டுரையில் குறிப்பிட்டிருக்கிறார்.... மேலும் பார்க்க