யுபிஎஸ்சி தேர்வு: தமிழகத்தில் 57 பேர் தேர்வு; சிவச்சந்திரன் முதலிடம்
Travel Contest: கடல் கன்னியம்மனுக்கு ஓர் திருவிழா!; ஆச்சரியமூட்டும் மாமல்லபுரம்
வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் ‘My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்தக் கட்டுரையில் இடம்பெற்றுள்ள கருத்துகள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துகள். விகடன் தளத்தின் கருத்துகள் அல்ல - ஆசிரியர்
வீட்டில் ஓய்வு என்றால் எங்கே செல்லலாம் என்று யோசிக்கும்போது, உடனே நினைவு இடுக்கில் வந்து நிற்பது மாமல்லபுரம் தான். பலமுறை அங்கே குடும்பத்தோடு சென்றிருக்கிறேன்.
எனினும், மனதுக்கு சலிப்பு தட்டாத ஒரே இடம்!. சென்னைக்கு மிக அருகே இருப்பதால், மிக குறுகிய நேரத்தில் சென்றுவிட்டு திரும்பலாம்.
பல்லவ மன்னர்கள் காலத்தில் செதுக்கப்பட்ட சிற்பங்கள், ஐந்துரதம், அர்ச்சுனன் தபசு, வெண்ணை உருண்டை பாறை, புலிக்குகை, கடற்கரை கோவில் என பார்க்க பார்க்க ஆச்சரியமூட்டும் இடங்கள் மாமல்லபுரத்தில் ஏராளம் உண்டு.!

கடந்த மாதம் மாசி பௌர்ணமி அன்று, மாமல்லபுரத்தில் இருளர் சமூகத்தினரின் திருவிழா நடந்தது. அப்போது, வேடிக்கை பார்க்க சென்றிருந்தேன். கடற்கரையில் எங்கு பார்த்தாலும் குடில்கள் அமைத்து தங்கியிருந்தனர் இருளர் மக்கள்.
சிலர் தார்ப்பாய் மூலமும், ஒரு சிலர் சேலை, போர்வை ஆகியவற்றை குடிலாக மாற்றி தங்கி இருந்தனர்.
ஒரு சிலர் தாங்கள் வந்திருந்த வாகனத்தையே, குடிலாக மாற்றி இருந்தனர். அவர்கள் 3 நாள்கள் தங்கி அங்கேயே சமையல் செய்து சாப்பிட்டனர்.

இதற்காக மாமல்லபுரத்தில் பல இடங்களில் தற்காலிக பாத்திரக்கடைகள், விறகு கடைகள், காய்கறிக் கடைகள் அமைக்கப்பட்டிருந்தன. செங்கல்பட்டு, காஞ்சிபுரம், கடலூர், திருச்சி போன்ற நகரங்களில் இருந்து மாமல்லபுரத்திற்கு சிறப்பு பேருந்துகளும் இயக்கப்பட்டன.
கன்னியம்மனை அழைத்து செல்லும் திருவிழா
வந்தவாசியில் இருந்து வந்திருந்த விஜயகாந்த் என்பவரிடம் பேசினேன்.
எங்க முன்னோர்கள் காலத்தில், கோபித்துக் கொண்டு வந்த கன்னியம்மாள், மாசி முழுநிலவு அன்னைக்குதான் திரும்பி வந்தாள். எங்களின் குலதெய்வமான கன்னியம்மனைச் சமாதானப்படுத்தி, பூஜை செய்து எங்களோடு அழைத்துச் செல்ல வந்திருக்கோம்.
அதனால்தான் ஒவ்வொரு வருசமும் மாசி முழுநிலவு அன்னைக்கு இந்தக் கடற்கரைல கூடுறோம். கன்னியம்மன நெனச்சிக் கடல்ல மூழ்கி, எங்க பாவத்தையும் கடல்லையே விட்டுட்டுப் போறோம்.

எந்த ஊரில் வசித்தாலும், மாசி பௌர்ணமிக்கு இங்கே ஒன்று கூடிடுவோம். தமிழ்நாட்டில் இருந்து மட்டுமல்ல, ஆந்திரா, கேரளா, தெலங்கானா, கர்நாடகாவில் இருந்தும் எங்க சமூகத்து மக்கள் இங்கே வந்திடுவாங்க. இங்கேயே கடற்கரையில் 3 நாள்கள் தங்கி, வழிபாடு செய்வோம்.
எங்க முன்னோர்கள் காலத்தில், கோபித்துக் கொண்டு வந்த கன்னியம்மாள், மாசி முழுநிலவு அன்னைக்குதான் திரும்பி வந்தாள். அதனாலதான் ஒவ்வொரு வருசமும் மாசி முழுநிலவு அன்னைக்கு இந்தக் கடற்கரைல கூடுறோம்.
கன்னியம்மன நெனச்சிக் கடல்ல மூழ்கி, எங்க பாவத்தையும் கடல்லையே விட்டுட்டுப் போறோம்.
எங்கள் முன்னோர்கள் காலத்தில் வேட்டையாடுவது தான், பிரதான தொழில். அரசாங்கம் கடுமையான கட்டுப்பாடுகள் விதித்திருப்பதால், இப்போது யாரும் வேட்டையாடுவதற்கு செல்வதில்லை.
இங்கே திருவிழாவுக்கு வரும்போது, மீன்பிடித்து சமைப்போம், நத்தை பிடித்து சமைப்போம். கோழி இறைச்சி வாங்கி சமைப்போம். சிலர் சைவ உணவு சமைத்து சாப்பிடுவார்கள்.

ஊரில் கூலி வேலைக்கு போவோம், கட்டிடம் கட்டுவது, மூங்கில் கூடை பின்னுதல், பாய் பின்னுதல் போன்ற வேலைகளுக்கு செல்வோம். முன்னமாதிரி இல்லாமல் இப்போது, எங்க பசங்களும் படிக்க ஆரம்பிச்சிட்டாங்க.
ஒரு சிலர் தனியார் கம்பெனிகளுக்கு வேலைக்கு போறாங்க. வாழ்க்கைத்தரம் கொஞ்சம் மேன்மை அடைஞ்சிருக்குன்னு சொல்லலாம்” என்றார்.
மொட்டை அடித்தலும், முடிகாணிக்கையும் இங்கேதான்
தங்கலட்சுமி என்ற பெண்ணிடம் பேசினேன். “எந்த ஊரில் இருந்தாலும், மாசி பௌர்ணமிக்கு இங்கே வந்திடுவோம். எங்க பிள்ளைக, பேரப்பிள்ளைகளுக்கு முடிகாணிக்கை செலுத்துதல், காது குத்துதல் போன்ற சடங்குகள் இங்கே நடக்கும்.

திருமணம் நிச்சயதார்த்தமும் இங்கே தான் நடக்கும். இங்கே ஒரு சிலருக்கு கன்னியம்மன் அருள் வந்து குறி சொல்லுவா. அவ என்ன சொன்னாலும் அதுபடி நடக்கும். குறி கேட்பதற்கென்றே நிறைய பேர் இங்கே வருவாக.. எங்க கன்னியம்மன்ட்ட குறி கேட்காமல் நாங்க எந்த செயலையும் செய்ய மாட்டோம்” என்றார்.
இரவு முழுவதும் ஆட்டம், பாட்டம், கொண்டாட்டம் என்று மகிழ்ச்சியோடு திருவிழாவைக் கொண்டாடிய மக்கள், கிழக்கு வானம் வெளுக்கத் தொடங்கியதும் கடல் அலை கரையைத் தொடும் இடத்துக்கு வந்து, குடும்பம் குடும்பமாகப் பந்தல் அமைத்தார்கள்.

பந்தலை வேப்பிலையால் நிரப்பி மாவு விளக்கு ஏற்றினர். அதன் பிறகு பந்தலுக்கு முன்பு ஏழு படிகளை அமைத்தார்கள்.
ஒவ்வொரு படியையும் தண்ணீர் தெளித்து மஞ்சள், சந்தனம், குங்குமம் பூசி, தேங்காய் உடைத்து வழிபாடு செய்தனர். அப்போதும் சிலர் அருள் வந்து ஆடினர். சாமியாடியின் காலில் விழுந்து வழிபட்ட அவர்கள், கன்னியம்மன் தன்னுடன் வருவதாக எண்ணிக்கொண்டு, சொந்த ஊர் புறப்பட்டனர்.
-சி.அ.அய்யப்பன்
சென்னை
My Vikatan-க்கு உங்களது `சுற்றுலா' கட்டுரை

இனி வாசகர்கள் விகடன் அறிவிக்கும் மாதாந்திர தலைப்பை மையப்படுத்தி கட்டுரைகள் அனுப்பலாம்.
இந்த மாதத்திற்கான தலைப்பு - `சுற்றுலா'. சுற்றுலா என்கிற தலைப்பில் My Vikatanக்கு உங்களது கட்டுரை படைப்புகளை அனுப்பலாம். நீங்க சுற்றுலா போன அனுபவமாக இருக்கலாம், பார்க்க வேண்டிய தலங்களாக இருக்கலாம், சுற்றுலா போகும் போது செய்ய வேண்டிய ஏற்பாடுகள் குறித்த தகவல்களாகவும் இருக்கலாம். ஆனால், உங்களின் சொந்த படைப்பாக, இதுவரை எந்த தளத்திலும் வெளிவராத படைப்பாக இருக்க வேண்டும், புகைப்படங்களுடன் அனுப்பவேண்டும். தேர்வு செய்யப்படும் கட்டுரைகள் அனைத்தும் பிரசுரம் ஆகும்.
வாசகர்களை உற்சாகப்படுத்தும் நோக்கில், இந்த மாதம் அனுப்பப்படும் பயணக் கட்டுரைகளில் சிறந்த கட்டுரைகள் தேர்ந்தெடுக்கப்பட்டு பரிசுத் தொகை வழங்கப்பட உள்ளது.
பரிசுத்தொகை விவரம்:
முதல் பரிசு : ரூ. 2,500 (2 வெற்றியாளர்கள்)
இரண்டாம் பரிசு : ரூ. 1000 (5 வெற்றியாளர்கள்)
நினைவுப் பரிசு: ₹500 (10 வெற்றியாளர்கள்)
நினைவில் கொள்க:
நீங்க கட்டுரையை அனுப்ப வேண்டிய கடைசி நாள் ஏப்ரல் 20, 2025
ஒருவர் ஒன்றுக்கு மேற்பட்ட கட்டுரைகளை அனுப்பலாம்.
உங்கள் படைப்புகளை: my@vikatan.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பலாம்
விகடனுக்கு என்று பிரத்யேகமாக அனுப்பப்படும் கட்டுரைகள் மட்டுமே பரிசீலிக்கப்படும்
உங்கள் படைப்பை திருத்தவோ, பிரசுரிக்கவோ, நிராகரிக்கவோ முழு உரிமையும் விகடனுக்கு இருக்கிறது.
கட்டுரையின் தரத்தின் அடிப்படையில் வெற்றியாளர்கள் விகடன் நடுவர் குழுவால் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.
விகடனில் உங்களுக்கென ஒரு பக்கம்...
உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க - my@vikatan.com என்ற மின்னஞ்சலுக்கு அனுப்புங்கள்!

ஏதோ ஓர் ஊரில், எங்கோ ஒரு தெருவில் நடந்த ஒரு விஷயம்தான் உலகம் முழுக்க வைரலாகிறது. உங்களைச் சுற்றியும் அப்படியொரு வைரல் சம்பவம் நடந்திருக்கலாம்... நடந்துகொண்டிருக்கலாம்... நடக்கலாம்..! அதை உலகுக்குச் சொல்வதற்காகக் களம் அமைத்துக் கொடுக்கிறது #MyVikatan. இந்த எல்லையற்ற இணையவெளியில் நீங்கள் செய்தி, படம், காணொளி, கட்டுரை, கதை, கவிதை என என்ன வேண்டுமானாலும் எழுதலாம். ஃமீம்ஸ், ஓவியம் என எல்லாத் திறமைகளையும் வெளிப்படுத்தலாம்.