செய்திகள் :

TVK: 'இதய வாசலை திறந்து வைத்துக் காத்திருப்பேன்!' - தொண்டர்களுக்கு விஜய் விடுக்கும் அழைப்பு

post image
த.வெ.க-வின் முதல் மாநில மாநாடு நடைபெறவிருக்கும் சூழலில் அக்கட்சியின் தலைவர் விஜய் தொண்டர்களுக்கு அழைப்பு விடுத்து கடிதம் ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அதில் அவர் கூறியிருப்பதாவது,

``என் நெஞ்சில் குடியிருக்கும் தோழர்களே,

வணக்கம்.

நம் கழகத்தின் முதல் மாநில மாநாடான வெற்றிக் கொள்கைத் திருவிழாவிற்காக எழுதும் மூன்றாவது கடிதம் இது.

மாநாடு நிகழப் போகும் தருணம், நம் மனம் மற்றும் கள வளாகத்திற்கு வெகு அருகில் வந்துவிட்டது.

உங்கள் ஒவ்வொருவரையும் நேரில் சந்திக்கப் போகும் கணங்கள். நம்மிடையே இருக்கும் அன்பின் கனத்தை இன்னும் பலமடங்கு கூட்டப் போகின்றன. அதை வார்த்தைகளில் எப்படிச் சொல்வதென்று எனக்குத் தெரியவில்லை.

உச்சபட்ச அரசியல் ஒழுங்கோடு, உலகமே உற்று நோக்கிப் போற்றும் விதமாகக் கொண்டாடுவோம் நம் வெற்றிக் கொள்கைத் திருவிழாவை.

அத்திருவிழாவைக் கொண்டாடுவதற்காக, பெருந்திரளாக அனைவரும் மாநாட்டுக்கு வரும்போது பாதுகாப்பையும் கட்டுப்பாட்டையும் மனதில் நிறுத்தி, பத்திரமாக வாருங்கள். நம் கழகக் கொடியைக் கைகளிலும் மனங்களிலும் ஏந்தி வாருங்கள்.

உங்கள் வருகைக்காக வி.சாலை எல்லையில், என் இரு கரங்களையும் விரித்தபடி, இதய வாசலைத் திறந்து வைத்துக் காத்திருப்பேன்.

வாருங்கள். மாநாட்டில் கூடுவோம்.

நம் தமிழ்நாட்டு மண்ணுக்கான வெற்றிக் கொள்கைகளைச் செயல்படுத்த உறுதிபூண்டு முழங்குவோம்.

2026 என்ற இலக்கை நோக்கி, முதல் அடியை எடுத்து வைப்போம்.

வி.சாலை என்னும் வியூகச் சாலையில் சந்திப்போம்.

வெற்றி நிச்சயம்.” எனக் குறிப்பிட்டுள்ளார்.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்...https://bit.ly/46c3KEk

வணக்கம்,

BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://bit.ly/46c3KEk

புதுச்சேரி: `நிரூபித்துவிட்டால், அரசியலை விட்டே விலகுகிறேன்’ - நமச்சிவாயம் ஆவேசத்தின் பின்னணி என்ன?

சாடும் நாராயணசாமிபுதுச்சேரியில் என்.ஆர்.காங்கிரஸ் - பா.ஜ.க தலைமையிலான கூட்டணி ஆட்சியில் அமர்ந்ததில் இருந்து, முதல்வர் ரங்கசாமி, அமைச்சர் நமச்சிவாயம் உள்ளிட்டவர்கள் மீது ஊழல் குற்றச்சாட்டுகளை அடுக்கி வ... மேலும் பார்க்க

தீவிரமடையும் பிரச்னை; `லாரன்ஸ் சகோதரர் பற்றி தகவல் கொடுத்தால் ரூ.10 லட்சம் சன்மானம்' - NIA அறிவிப்பு

பாலிவுட் நடிகர் சல்மான் கான் வீட்டின் மீது கடந்த ஏப்ரல் மாதம் குஜராத் சிறையில் அடைக்கப்பட்டுள்ள லாரன்ஸ் பிஷ்னோய் கூட்டாளிகள் துப்பாக்கியால் சுட்டனர். இத்துப்பாக்கிச்சூடு தொடர்பாக மும்பை போலீஸார் விசார... மேலும் பார்க்க

TVK : காமராஜர், பெரியார், அம்பேத்கர், விஜய்... த.வெ.க கட்-அவுட் ‘காட்டும்’ அரசியல் ரூட் என்ன?

முதல் மாநாடுதமிழக வெற்றிக் கழகம்நடிகர் விஜய் புதிதாகத் தொடங்கியிருக்கும் தமிழக வெற்றிக் கழகம் கட்சியைச் சுற்றியே அனைவரின் கண்களும் இருக்கிறது. கட்சி தொடங்கிய கையேடு கட்சியின் கொடி, பாடலையும் வெளியிட்ட... மேலும் பார்க்க

`தமிழ்த்தாய் வாழ்த்து தவறாகப் பாடப்படவில்லை..!" - துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின்

தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரம்தமிழ்நாட்டின் ஆளுநர் ஆர்.என்.ரவி கலந்து கொண்ட ஒரு நிகழ்வில் தமிழ்த் தாய் வாழ்த்துப்பாடல் பாடப்படும் போது திராவிட திரு நல்நாடும் எனும் வரிகள் இல்லாமல் பாடப்பட்டது. அது தொடர... மேலும் பார்க்க

'பாஜக தொடர்பு... கட்சியை அழித்துவிட்டார்' - மயூரா ஜெயக்குமாருக்கு எதிராக கொதிக்கும் கோவை கதர்கள்

`கட்சி சித்தாந்தத்திற்கு எதிராக செயல்படுகிறார்’கடந்த 20.10.2024 அன்று கோவை மாநகர காங்கிரஸ் கமிட்டி சார்பில், 'கோவை காங்கிரஸ் கட்சியைக் காப்போம் காங்கிரஸ் கட்சியை வளர்ப்போம்' என்ற தலைப்பில் சிறப்புக் க... மேலும் பார்க்க

Stalin: "துறையும் வளர்ந்திருக்கு; உதயநிதியும் வளர்ந்திருக்கிறார்" - ஸ்டாலின் பெருமிதம்

முதலமைச்சர் கோப்பை விளையாட்டுப் போட்டி நிறைவு விழா நேற்று (அக்டோபர் 24) சென்னையில் நடைபெற்றது.முதலமைச்சர் கோப்பை போட்டியில் சென்னை மாவட்ட அணி 105 தங்கம் என மொத்தம் 254 பதக்கங்களைப் பெற்று முதலிடம் பிட... மேலும் பார்க்க