Aus vs Ind: ஆஸ்திரேலியாவில் ஹாட்ரிக் அடிக்குமா இந்தியா? பரபரக்கும் BGT தொடரின் ம...
U.P: ``கும்பகர்ணன் ஆறு மாதங்கள் தூங்கவில்லை; அவர் ரகசியமாக..'' - என்ன சொல்கிறார் உ.பி ஆளுநர்?!
'உலகின் முதல் விமானத்தை உருவாக்கியது ரைட் சகோதரர்கள் அல்ல... பரத்வாஜ முனிவர் தான்' என்று உத்தரப்பிரதேச கவர்னர் ஆனந்திபென் பட்டேல் பேசியுள்ளது சர்ச்சையை கிளப்பி உள்ளது.
லக்நௌவில் உள்ள ஒரு பல்கலைக்கழகத்தின் பட்டமளிப்பு விழாவில், "உலகின் முதல் விமானத்தை உருவாக்கியது பரத்வாஜர் முனிவர் தான். ரைட் சகோதரர்கள் அல்ல. ஆனால், அதற்கான அங்கீகாரம் பரத்வாஜருக்கு சென்று சேரவில்லை.
ராமாயணத்தில் கூறப்படும் புஷ்பக விமானம் 5,000 ஆண்டுகளுக்கு முன்பான மேம்பட்ட தொழில்நுட்பம் ஆகும். ஆனால், அதை யார் செய்தார், எங்கு, எப்போது செய்தார்கள் என்பது நமக்குத் தெரியாது.
கும்பகர்ணன் ஒரு தொழில்நுட்ப வல்லுநர் ஆவார். அவர் ஆறு மாதங்கள் தூங்கியதாக கூறப்படுகிறது. ஆனால், அவர் அந்த ஆறு மாதங்கள் ரகசியமாக தனது ஆய்வகத்தில் ஆயுதங்களை உருவாக்கி கொண்டிருந்திருக்கிறார். இவரது தொழில்நுட்பங்கள் வேறு நாடுகளுக்கு சென்றுவிடக்கூடாது என்று தான் ரகசியமாக அந்த ஆய்வுகளை செய்திருக்கிறார்.
வெளிநாடுகளில் இருந்து வந்த மக்கள் நம் தொழில்நுட்பங்கள் மற்றும் ஐடியாக்களை படித்து, தெரிந்து பல விஷயங்களை கண்டுபிடித்திருக்கின்றனர். நாம் நம் கண்டுபிடிப்புகளை பற்றி படித்து, தெரிந்துகொள்ள வேண்டும்" என்று உத்தரப்பிரதேச கவர்னர் ஆனந்திபென் பட்டேல் பேசியுள்ளார்.
நீங்கள் விரும்பி படித்த தொடர்கள், இப்போது ஆடியோ வடிவில்... புத்தம் புதிய விகடன் ப்ளே... உங்கள் அன்றாட பணிகளை கவனித்துக் கொண்டே ரசித்து கேட்க, உடனே இன்ஸ்டால் செய்யுங்கள்...