செய்திகள் :

UP: மருத்துவமனையில் தீ விபத்து, 10 பச்சிளம் குழந்தைகள் பலி, 16 குழந்தைகள் காயம் - என்ன நடந்தது?

post image

உத்தரப்பிரதேசம் மாநிலத்தில் உள்ள ஜான்சி மாவட்டத்தில் உள்ள மருத்துவமனையில் நேற்றிரவு ஏற்பட்ட தீ விபத்தில் 10 பச்சிளம் குழந்தைகள் உயிரிழந்துள்ளனர். குறைந்தது 16 குழந்தைகள் உயிருக்கு ஆபத்தான சூழலில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

மகாராணி லஷ்மி பாய் மெடிக்கல் காலேஜில், பிறந்த குழந்தைகளுக்கான தீவிர சிகிச்சை மையத்தில் (neonatal intensive care unit - NICU) இரவு 10:45 மணியளவில் தீப்பற்றியதாக அதிகாரபூர்வமாக தெரிவித்துள்ளார் மாவட்ட மஜிஸ்திரேட் அவினாஷ் குமார்.

தீப்பற்றிய நாளில் NICU வார்டில் 54 குழந்தைகள் இருந்துள்ளனர், இவர்களில் 44 பேர் காப்பாற்றப்பட்டுள்ளனர். உயிரிழந்த குழந்தைகளில் 7 பேரின் சடலங்கள் மட்டுமே உடனடியாக அடையாளம் காண முடிந்துள்ளது. மற்ற சடலங்களை அடையாளம் காண டி.என்.ஏ டெஸ்ட் மேற்கொள்ளப்படலாம் என்கின்றனர்.

உயிருடன் மீட்கப்பட்ட குழந்தைகளின் பெற்றோரும் உறவினர்களும் குழந்தைகளைப் பார்ப்பதற்கு அனுமதிக்கப்படவில்லை. இதனால் மருத்துவமனை முன்னிலையில் போராட்டத்தில் ஈடுபட, சலசலப்பு ஏற்பட்டுள்ளது. குழந்தைகளின் உறவினர்கள் சாலையில் அமர்ந்து போராடி வருகின்றனர்.

உத்தரப்பிரதேச துணை முதல்வர் ப்ரஜேஷ் பதக், ஆக்ஸிஜன் செறிவூட்டியில் ஏற்பட்ட ஷார்ட்-சர்க்யூட் தான் தீ விபத்துக்கு காரணம் எனக் கூறியுள்ளார்.

மூத்த காவல் கண்காணிப்பளர் சுதா சிங், 16 குழந்தைகள் உள்ளூர் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெறுவதாகவும், அவர்களது உயிரைக் காக்க அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படுவதாகவும் தெரிவித்துள்ளார்.

மருத்துவமனையில் தீ பிடிக்கும்போது எழ வேண்டிய அபாய ஒலி வேலை செய்யவில்லை என்று கூறப்படும் விமர்சனங்களை அரசு மறுத்துள்ளது.

உயிரிழந்த குழந்தைகளின் குடும்பங்களுக்கு 5 லட்சமும் காயமடைந்துள்ள குடும்பங்களின் குழந்தைகளுக்கு 50,000-ம் இழப்பீடாக வழங்க உத்தரவிட்டுள்ளார் யோகி ஆதித்யநாத். பிரதமர் மோடி உயிரிழந்த குழந்தைகளின் குடும்பத்தினருக்கு 2 லட்சமும் காயமடைந்தவர்களின் குடும்பத்துக்கு 50, 000ம் பிரதமரின் தேசிய நிவாரண நிதியிலிருந்து அளிக்க உத்தரவிட்டுள்ளார்.

உ.பி: மருத்துவமனையில் இரவில் தீ விபத்து; 10 குழந்தைகள் தீயில் கருகி பரிதாபமாக உயிரிழப்பு!

உத்தரப்பிரதேச மாநிலம் ஜான்சியில் இருக்கும் மகாராணி லட்சுமிபாய் மருத்துவ கல்லூரியில் நேற்று இரவு திடீரென தீப்பிடித்துக்கொண்டது. குழந்தைகள் அவசர சிகிச்சை பிரிவில் ஏற்பட்ட இத்தீவிபத்தால் மருத்துவமனை முழு... மேலும் பார்க்க

தேனி: `தங்கச்சி வீட்டு விசேஷத்துக்கு வர்றேன்னு போனார்'- பணியில் உயிரிழந்த ராணுவ வீரர்; மக்கள் சோகம்!

தேனி பங்களாமேடு பகுதியைச் சேர்ந்த நாகராஜ் - இன்பவள்ளி தம்பதியரின் மகன் முத்து (36). இவர் இந்திய ராணுவத்தில் 15 ஆண்டுகளாக பணிபுரிந்து வந்தார். தற்போது ராஜஸ்தான் மாநிலம் 12 RAPID SIG ரெஜிமென்ட்டில் சிப்... மேலும் பார்க்க

குஜராத்: புல்லட் ரயில் கட்டுமான பணி நடக்கும் இடத்தில் கான்கிரீட் பிளாக் சரிந்து விபத்து; மூவர் பலி!

குஜராத் மாநிலம், அகமதாபாத்தில் இருந்து மும்பைக்கு புல்லட் ரயில் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதற்காக குஜராத் எல்லைக்கு உட்பட்ட பகுதியில் கட்டுமானப் பணிகள் முழுவேகத்தில் நடந்து வருகிறது. மகாராஷ... மேலும் பார்க்க

Uttarakhand Bus Accident: 200 மீட்டர் பள்ளத்தில் விழுந்த பேருந்து; அதிகரிக்கும் உயிரிழப்புகள்

உத்தரகண்ட் மாநிலம் அல்மோரா மாவட்டத்தில் ஏற்பட்ட சாலை விபத்தில் பலி எண்ணிக்கை 35ஆக உயர்ந்துள்ளது.45 இருக்கைகளைக் கொண்ட பேருந்து, மர்ச்சுலா பகுதியில் 200 மீட்டர் ஆழமான பள்ளத்தாக்கில் விழுந்து விபத்துக்க... மேலும் பார்க்க

Kerala: காசர்கோடு கோயில் விழாவில் பட்டாசு விபத்து; 154 பேர் காயம்; ஆபத்தான நிலையில் 8 பேர்

கேரள மாநிலம் காசர்கோடு மாவட்டம் நீலேஸ்வரத்தில் தேரு அஞ்சோடம்பலம் வீரேர்காவு கோவில் அமைந்துள்ளது. இங்கு இன்று (அக்டோபர் 29) அதிகாலை 12.20 மணியளவில் களியாட்டம் விழா நடைபெற்றது. அப்போது வாண வேடிக்கை நிகழ... மேலும் பார்க்க

திருவாரூர்: பாதாள சாக்கடையில் தவறி விழுந்து இளைஞர் பலி; காப்பாற்ற சென்றவருக்கு நேர்ந்த சோகம்!

திருவாரூர் நகராட்சிக்குட்பட்ட மேல வடம் போக்கி தெரு பகுதியில் நகராட்சிக்கு சொந்தமான கழிவு நீர் உந்து நிலையம் செயல்பட்டு வருகிறது. இந்நிலையில் சட்டவிரோதமாக கழிவு நீர் தனியார் வண்டி மூலம் கழிவு நீர் பாதா... மேலும் பார்க்க