செய்திகள் :

Uttarakhand Bus Accident: 200 மீட்டர் பள்ளத்தில் விழுந்த பேருந்து; அதிகரிக்கும் உயிரிழப்புகள்

post image

உத்தரகண்ட் மாநிலம் அல்மோரா மாவட்டத்தில் ஏற்பட்ட சாலை விபத்தில் பலி எண்ணிக்கை 35ஆக உயர்ந்துள்ளது.

45 இருக்கைகளைக் கொண்ட பேருந்து, மர்ச்சுலா பகுதியில் 200 மீட்டர் ஆழமான பள்ளத்தாக்கில் விழுந்து விபத்துக்குள்ளானது. ராம்நகரை அடைவதற்கு 35 கிலோமீட்டர் முன்னால், காலை 8:25 மணியளவில் விபத்து நடந்துள்ளது. அருகிலிருந்த கிராம மக்கள் விபத்தைப் பார்த்து தகவலளித்துள்ளனர். காவல்துறையினரும் பேரிடர் மீட்புப் படையினரும் மீட்புப்பணிகளில் ஈடுபட்டனர்.

விபத்து நடந்த இடத்திலேயே சில பயணிகள் உயிரிழந்துள்ளனர். தீவிர காயமடைந்திருந்த 9 பேர் மருத்துவமனைகளுக்கு அழைத்துச்செல்லப்பட்டனர். 3 பேர் வான் வழியாக எய்ம்ஸ் மருத்துவமனைக்கு அழைத்துச்செல்லப்பட்டனர். விபத்துக்கான காரணம் குறித்து இன்னும் அறியப்படவில்லை.

முதலமைச்சர் புஷ்கர் சிங் தாமி இன்று (நவம்பர் 4) காலையில், "பயணிகள் மரணம் குறித்த சோகமான செய்தியைக் கேட்டறிந்தேன். மீட்புப் பணிகளை விரைவாக மேற்கொள்ள மாவட்ட நிர்வாகத்துக்கு உத்தரவிட்டுள்ளேன்" என்று கூறினார்.

விபத்து நடந்த பகுதியின் ஆர்.டி.ஓ அதிகாரி இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

உத்தரகாண்ட் முதலமைச்சர் புஷ்கர் சிங் தாமி

விபத்தில் இறந்தவர்கள் குடும்பத்துக்கு ரூ.4 லட்சமும் காயமடைந்தவர்களுக்கு ரூ.1 லட்சமும் இழப்பீடு அறிவிக்கப்பட்டுள்ளது.

விபத்துக்கான காரணத்தை அறியும் விசாரணையும் முடுக்கிவிடப்பட்டுள்ளது. விபத்து குறித்து அறிந்த பிரதமர் மோடி தனது இரங்கலைத் தெரிவித்திருக்கிறார்.

மத்திய அரசு சார்பில் மரணமடைந்தவர்கள் குடும்பத்துக்கு ரூ.2 லட்சமும், காயமடைந்தவர்களுக்கு 50 ஆயிரமும் இழப்பீடு அறிவித்துள்ளார்.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்https://bit.ly/3OITqxs

வணக்கம்,

BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://bit.ly/3OITqxs

உ.பி: மருத்துவமனையில் இரவில் தீ விபத்து; 10 குழந்தைகள் தீயில் கருகி பரிதாபமாக உயிரிழப்பு!

உத்தரப்பிரதேச மாநிலம் ஜான்சியில் இருக்கும் மகாராணி லட்சுமிபாய் மருத்துவ கல்லூரியில் நேற்று இரவு திடீரென தீப்பிடித்துக்கொண்டது. குழந்தைகள் அவசர சிகிச்சை பிரிவில் ஏற்பட்ட இத்தீவிபத்தால் மருத்துவமனை முழு... மேலும் பார்க்க

தேனி: `தங்கச்சி வீட்டு விசேஷத்துக்கு வர்றேன்னு போனார்'- பணியில் உயிரிழந்த ராணுவ வீரர்; மக்கள் சோகம்!

தேனி பங்களாமேடு பகுதியைச் சேர்ந்த நாகராஜ் - இன்பவள்ளி தம்பதியரின் மகன் முத்து (36). இவர் இந்திய ராணுவத்தில் 15 ஆண்டுகளாக பணிபுரிந்து வந்தார். தற்போது ராஜஸ்தான் மாநிலம் 12 RAPID SIG ரெஜிமென்ட்டில் சிப்... மேலும் பார்க்க

குஜராத்: புல்லட் ரயில் கட்டுமான பணி நடக்கும் இடத்தில் கான்கிரீட் பிளாக் சரிந்து விபத்து; மூவர் பலி!

குஜராத் மாநிலம், அகமதாபாத்தில் இருந்து மும்பைக்கு புல்லட் ரயில் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதற்காக குஜராத் எல்லைக்கு உட்பட்ட பகுதியில் கட்டுமானப் பணிகள் முழுவேகத்தில் நடந்து வருகிறது. மகாராஷ... மேலும் பார்க்க

Kerala: காசர்கோடு கோயில் விழாவில் பட்டாசு விபத்து; 154 பேர் காயம்; ஆபத்தான நிலையில் 8 பேர்

கேரள மாநிலம் காசர்கோடு மாவட்டம் நீலேஸ்வரத்தில் தேரு அஞ்சோடம்பலம் வீரேர்காவு கோவில் அமைந்துள்ளது. இங்கு இன்று (அக்டோபர் 29) அதிகாலை 12.20 மணியளவில் களியாட்டம் விழா நடைபெற்றது. அப்போது வாண வேடிக்கை நிகழ... மேலும் பார்க்க

திருவாரூர்: பாதாள சாக்கடையில் தவறி விழுந்து இளைஞர் பலி; காப்பாற்ற சென்றவருக்கு நேர்ந்த சோகம்!

திருவாரூர் நகராட்சிக்குட்பட்ட மேல வடம் போக்கி தெரு பகுதியில் நகராட்சிக்கு சொந்தமான கழிவு நீர் உந்து நிலையம் செயல்பட்டு வருகிறது. இந்நிலையில் சட்டவிரோதமாக கழிவு நீர் தனியார் வண்டி மூலம் கழிவு நீர் பாதா... மேலும் பார்க்க

TVK : தவெக மாநில மாநாடு: காரில் சென்ற திருச்சி இளைஞரணி செயலாளர் உள்ளிட்ட இருவர் விபத்தில் பலி!

நடிகர் விஜய் தனது விஜய் மக்கள் இயக்கத்தை, தமிழக வெற்றிக் கழகமாக மாற்றி, நேரடி அரசியலில் குதிக்க முடிவு செய்தார். இந்நிலையில், தனது கட்சியின் முதல் மாநில மாநாட்டை விக்கிரவாண்டி அருகில் உள்ள வி.சாலை பக... மேலும் பார்க்க