செய்திகள் :

US : தடுப்பூசிகளின் தீவிர எதிர்ப்பாளர்... தற்போது ட்ரம்பின் சுகாதாரச் செயலர் - யார் இந்த கென்னடி?!

post image

சமீபத்தில் நடந்த அமெரிக்க தேர்தலில் அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்ட டொனால்ட் ட்டிரம்ப் தனது அமைச்சரவையில் யார் யார் இடம்பெற போகிறார்கள் என்பதை அறிவித்து வருகிறார். அதன்படி, தற்போது ட்ரம்ப், சுகாதாரச் செயலராக ராபர்ட் எஃப். கென்னடியை அறிவித்துள்ளார்.

யார் இந்த கென்னடி?

கென்னடியின் குடும்பம் அரசியல் பின்புலம் கொண்டது ஆகும். இவரது அப்பா முன்னாள் அட்டர்னி ஜெனரல் ஆவார் மற்றும் இவர் முன்னாள் அமெரிக்க அதிபர் ஜான் எஃ.ப் கென்னடியின் மருமகன் ஆவார்.

கடந்த ஆண்டு, ஜனநாயக கட்சி சார்பாக முன்னாள் அதிபர் ஜோ பைடனுக்கு எதிராக இவர் தான் தேர்தல் களத்தில் வேட்பாளராக போட்டியிட்டார். பின்னர், கமலா ஹாரிஸ் களத்திற்கு வர, இவர் சுயேச்சை வேட்பாளராக போட்டியிட்டார்.

அதன் பிறகு, தேர்தலில் இருந்து விலகி குடியரசு கட்சியுடன் ஒப்பந்தம் மேற்கொண்டு ட்ரம்பிற்கு ஆதரவாக பிரசாரம் செய்தார். தற்போது, ட்ரம்ப் அமைச்சரவையில் சுகாதாரச் செயலராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

எதிர்ப்பு!

இவரை சுகாதாரச் செயலராக ட்ரம்ப் தேர்ந்தெடுத்துள்ளது பல விமர்சனங்களை கிளப்பியுள்ளது. இதற்கு காரணம், இவர் தீவிர தடுப்பூசி எதிர்ப்பாளர் ஆவார். மேலும், இவர் தடுப்பூசி குழந்தைகளுக்கு ஆட்டிசத்தை ஏற்படுத்துகிறது... எய்ட்ஸ் நோயிற்கு ஹெச்.ஐ.வி காரணம் இல்லை என்பது போன்று நிரூபிக்கப்படாத பல மருத்துவம் சார்ந்த விஷயங்களைக் பேசி சர்ச்சையில் சிக்கிக்கொள்பவர் ஆவார்.

இவரை ட்ரம்ப் சுகாதாரச் செயலராக அறிவித்ததையொட்டி, அமெரிக்காவில் உள்ள பிரபல தொற்றுநோய் நிபுணர் ஒருவர், "போலியோ, தட்டம்மை போன்று 50 ஆண்டுகளுக்கு முன்பாக மறந்துபோன... கட்டுப்படுத்தப்பட்ட நோய்களை இப்போது மீண்டும் பார்க்கப்போகிறோம்" என்று அமெரிக்க ஊடகம் ஒன்றில் கூறியுள்ளார்.

இவரைப் பற்றி ட்ரம்ப் தனது எக்ஸ் பக்கத்தில், "சுகாதாரச் செயலராக ராபர்ட் எஃப்.கென்னடியை அறிவிப்பதில் மகிழ்ச்சி. நீண்ட காலமாக உணவு, தொழில்துறை, மருந்து துறைகளில் உள்ள மோசடிகள், தவறான தகவல்கள் மற்றும் குறைந்த தகவல்களால் அமெரிக்கர்கள் பாதிப்புக்குள்ளாகியிருக்கின்றனர். எந்தவொரு ஆட்சியிலும் சுகாதாரம் மிக மிக முக்கியமானது ஆகும். கென்னடி தனது செயல்பாடுகளால் அமெரிக்காவில் தொற்றுநோய்களை முடிவுக்குக் கொண்டுவருவார். மேலும் இவர் அமெரிக்காவை சிறப்பானதாகவும், மீண்டும் ஆரோக்கியமானதாகவும் ஆக்குவார்" என்று பதிவிட்டுள்ளார்.

Telangana: திருநங்கை தன்னார்வலர்களை போக்குவரத்து காவலில் ஈடுபடுத்த திட்டம்; ரேவந்த் ரெட்டி அறிவிப்பு

ஹைதராபாத் மாநகரில் போக்குவரத்து நெரிசலை சரிசெய்ய காவல்துறையினருக்கு உதவும் வகையில் தன்னார்வமுள்ள திருநங்கைகளை பணியமர்த்த தெலங்கானா முதலமைச்சர் ரேவந்த் ரெட்டி உத்தரவிட்டுள்ளார்.திருநங்கை தன்னார்வளர்களு... மேலும் பார்க்க

Srilanka: 'மறுமலர்ச்சியை ஆரம்பிக்க தோள் கொடுத்ததற்கு நன்றி'- அநுர குமார திசாநாயக்க அபார வெற்றி

கடந்த செப்டம்பர் 21-ம் தேதி இலங்கையில் அதிபர் தேர்தல் நடைபெற்றது.அதில், தேசிய மக்கள் சக்தி (என்பிபி) கூட்டணி சார்பில் போட்டியிட்ட அநுர குமார திசாநாயக்க வெற்றி பெற்று அதிபரானார். அனுராவின் தேசிய மக்கள்... மேலும் பார்க்க

”பொய்க்கு மேக்கப் போடுகிறார் எடப்பாடி பழனிசாமி; அது அம்பலமாகி விடும்”- சாடிய முதல்வர் ஸ்டாலின்!

அரியலூர் மாவட்டத்தில் நடைபெற்ற பல்வேறு நிகழ்ச்சிகளில் முதல்வர் ஸ்டாலின் கலந்து கொண்டார். இதற்காக நேற்று இரவே ஜெயங்கொண்டம் வந்த ஸ்டாலின் அங்குள்ள விருந்தினர் மாளிகையில் தங்கினார். இதற்காக விருந்தினர் ம... மேலும் பார்க்க

Elon Musk: 'கடினமான வேலை; எதிரிகள் அதிகம்; ஆனால், சம்பளம் இல்லை' - எலான் மஸ்க்கின் புதிய வேலை என்ன?

அமெரிக்க அதிபர் டிரம்ப் தன்னுடைய தேர்தல் பிரசாரத்தில் 'அமெரிக்காவைக் காப்பாற்றுங்கள்' என்ற முன்னெடுப்பை எடுத்து மக்களிடம் வாக்கு சேகரித்தார்.இதன் ஒரு பகுதியாக, தற்போது 'அரசு செயல்திறன் (Department of ... மேலும் பார்க்க

`அதானி வீட்டுக்குச் சென்றது உண்மைதான், ஆனால்...!' - அஜித் பவாரின் குற்றச்சாட்டு குறித்து சரத் பவார்!

கடந்த 2019ம் ஆண்டு மகாராஷ்டிராவில் சட்டமன்றத் தேர்தலுக்குப் பிறகு ஆட்சியமைக்க எந்த கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்கவில்லை. பா.ஜ.க மற்றும் சிவசேனா இடையே முதல்வர் பதவி தொடர்பாகக் கருத்து வேறுபாடு ஏற்பட்... மேலும் பார்க்க

எலான் மஸ்க்கின் ‘X’ தில்லாலங்கடி... அதிபர் தேர்தலில் ஏற்படுத்திய தாக்கமும் விளைவும் என்ன?

அமெரிக்க தேர்தலும் எலான் மஸ்கும்!நடந்து முடிந்த அமெரிக்க அதிபர் தேர்தலில் ‘எக்ஸ்’ சமூக வலைதளமும், குறிப்பாக அதன் உரிமையாளர் எலான் மஸ்க்கும் முக்கியப் பங்கு வகித்ததை யாராலும் மறுக்க முடியாது. இந்தக் கா... மேலும் பார்க்க