செய்திகள் :

Vaibhav Suryavanshi: வைபவ் சூர்யவன்ஷியின் வயது குறித்து எழும் சர்ச்சைகள்; தந்தை சொல்வதென்ன?

post image

ஐ.பி.எல் தொடங்கப்பட்ட நாள்முதல் இன்றுவரை கடந்த 17 சீசன்களில் இதுவரை யாரும் பெறாத சிறப்பை பீகாரைச் சேர்ந்த 13 வயது வைபவ் சூர்யவன்ஷி இந்த ஐ.பி.எல் ஏலத்தில் பெற்றிருக்கிறார். தனது 9 வயதிலேயே கிரிக்கெட் அகாடெமியில் சேர்ந்து முறையாகப் பயிற்சி பெறத்தொடங்கிய இவர், 12 வயதில் தனது சொந்த மாநிலத்துக்காக வினு மங்கட் டிராபியில் களமிறங்கி 5 ஆட்டங்களில் 400 ரன்கள் அடித்தது, தொடர்ந்து ராஞ்சியில் பீகாருக்காகக் களமிறங்கியது என அசத்தினார்.

வைபவ் சூர்யவன்ஷி

பின்னர், கடந்த செப்டம்பரில், சென்னையில் நடைபெற்ற ஆஸ்திரேலியா U19 அணிக்கெதிரான இளையோர் டெஸ்டில் 58 பந்துகளில் சதம் அடித்ததன் மூலம், இளையோர் டெஸ்டில் இந்தியரின் அதிவேக சதம் என்ற சாதனை படைத்து கவனம் ஈர்த்த வைபவ் சூர்யவன்ஷி, இந்தாண்டு ஐ.பி.எல் ஏலத்தில் தனது பெயரைப் பதிவு செய்தார்.

அதைத்தொடர்ந்து, BCCI-ன் இறுதிப் பட்டியலில், 491-வது வீரராக ரூ. 30 லட்சம் அடிப்படை விலைக்குப் பட்டியலிடப்பட்ட வைபவ் சூர்யவன்ஷியை, ராஜஸ்தான் அணி ரூ. 1.10 கோடிக்கு ஏலம் எடுத்தது. இதன்மூலம், ஐ.பி.எல்லில் மிக இளம் வயதில் ஏலம் போன வீரர் என்ற தனிச் சிறப்பைப் பெற்றிருக்கும் இவர், வரும் சீசனில் ராஜஸ்தானின் பிளேயிங் லெவனில் இடம்பெற்றுக் களமிறங்கினால், மிக இளம் வயதில் ஐ.பி.எல் ஆடிய வீரர் என்ற சாதனையையும் படைப்பார்.

வைபவ் சூர்யவன்ஷி

இத்தகைய சிறப்புகளால் பலதரப்பிலிருந்தும் பாராட்டுகளை அவர் பெற்றுவந்தாலும், "அவருக்கு 13 வயது அல்ல 15 வயது" என வயது மோசடி செய்ததாகக் குற்றச்சாட்டுகளும் வந்துகொண்டிருக்கின்றன. இந்த நிலையில், அத்தகைய பேச்சுகளுக்கு அவரின் தந்தை சஞ்சீவ் தற்போது விளக்கமளித்திருக்கிறார்.

வைபவ் சூர்யவன்ஷி

இதுகுறித்து தனியார் ஊடகத்திடம் பேசிய சஞ்சீவ், ``வைபவ் இப்போது என்னுடைய மகன் மட்டுமல்ல, ஒட்டுமொத்த பீகாரின் மகன். இதற்காக வைபவ் கடுமையாக உழைத்திருக்கிறான். என்னுடைய நிலத்தைக்கூட விற்றுவிட்டேன். அதனால், இன்னமும் நிதிச் சிக்கல்களை எதிர்கொள்கிறேன். வைபவ் தனது எட்டரை வயதிலேயே இந்தியா கிரிக்கெட் வாரியத்தின் எலும்பு சோதனையில் பங்கேற்றான். அதன்பின்னர், 19 வயதுக்குட்பட்ட இந்திய அணியிலும் விளையாடியிருக்கிறான். எனவே நாங்கள் யாருக்கும் பயப்பட மாட்டோம். வைபவை மீண்டும் ஒருமுறை கூட வயது சோதனைக்கு உட்படுத்தலாம்." என்று கூறினார்.

வைபவ் சூர்யவன்ஷி தற்போது U19 ஆசியக் கோப்பைத் தொடருக்காக துபாயில் இருப்பதாக சஞ்சீவ் தெரிவித்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

நீங்கள் விரும்பி படித்த தொடர்கள், இப்போது ஆடியோ வடிவில்... புத்தம் புதிய விகடன் ப்ளே... உங்கள் அன்றாட பணிகளை கவனித்துக் கொண்டே ரசித்து கேட்க, உடனே இன்ஸ்டால் செய்யுங்கள்...

https://bit.ly/MadrasNallaMadras

Jaydev Unadkat: கைகொடுத்த SRH... IPL-ல் யாரும் நெருங்க முடியாத சாதனைப் படைத்த ஜெயதேவ் உனத்கட்!

இந்தியன் பிரீமியர் லீக்கின் (IPL) 18-வது சீசன் அடுத்தாண்டு நடைபெறவிருக்கிறது. அதனை முன்னிட்டு சவுதி அரேபியாவில் கடந்த இரண்டு நாள்களாக (நவம்பர் 24,25) ஐ.பி.எல் மெகா ஏலம் நடைபெற்றது. இதில், இதுவரை யாரும... மேலும் பார்க்க

IPL 2025: ``ஒரு டீனேஜராக இங்கு வந்தேன்..'' - டெல்லி ரசிகர்களுக்கு ரிஷப் பண்ட்டின் எமோஷனல் நோட்!

IPL 2025: 9 ஆண்டுகள் டெல்லி கேபிடல்ஸ் அணியில் இருந்த ரிஷப் பண்ட் இந்த ஆண்டு லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியால் ஏலத்தில் வாங்கப்பட்டுள்ளார்.கடந்த ஆண்டு கேப்டனாக செயல்பட்ட அவர், ஏன் தக்கவைக்கப்படவில்லை என்... மேலும் பார்க்க

IPL Mega Auction CSK: `ரூ.20 லட்சம் டு ரூ.3.40 கோடி' - இளம் பவுலர் யாரிந்த அன்ஷுல் கம்போஜ்

ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் 18-வது சீசன் வருகிற மார்ச் மாதம் நடைபெற இருக்கிறது.2025 ஆம் ஆண்டிற்கான இந்தத் தொடரை முன்னிட்டு வீரர்களுக்கான ஏலம் சவூதி அரேபியாவின் ஜெட்டாவில் நடைபெற்றது. இந்த ஐபிஎல் மெகா ஏல... மேலும் பார்க்க

IPL 2025 : ராஜஸ்தான் ராயல்ஸ் அணி எடுத்த 13 வயது வீரர்; சூர்யவன்ஷிக்கு 1.1 கோடி கொடுக்க என்ன காரணம்?!

ஐபிஎல் போட்டிகளில் பங்கேற்கும் மிக இளவயது நபர் என்ற பெருமையைப் பெற்றுள்ளார் வைபவ் சூர்யவன்ஷி. இந்தியாவின் U-19 போட்டிகளில் விளையாடிவரும் இவர் ராஜஸ்தான் அணியால் ஏலத்தில் எடுக்கப்பட்டுள்ளார். வைபவ் சூர்... மேலும் பார்க்க

Ind vs Aus: ``ஆரம்பத்தில் எங்கள் மீது ப்ரஷர் இருந்தது; ஆனால்..!’’ - வெற்றி குறித்து கேப்டன் பும்ரா

இந்தியா ஆஸ்திரேலியா நாடுகள் இடையேயான 5 டெஸ்ட் போட்டிகளைக் கொண்ட தொடரின் முதல் போட்டியை வென்றுள்ளது இந்திய அணி. வேகப் பந்துவீச்சாளர் பும்ரா கேப்டனாக செயல்பட்ட இந்த போட்டியை 4 வது நாளில் வென்றது இந்தியா... மேலும் பார்க்க

IPL Auction: ரூ.30 லட்சம் டு 6 கோடி! - ஆர்சிபி போட்டி போட்டு வாங்கிய ராஷிக் சலாம் யார்?

ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் 18-வது சீசன் வருகிற மார்ச் மாதம் நடைபெற இருக்கிறது. 2025 ஆம் ஆண்டிற்கான இந்த தொடரை முன்னிட்டு வீரர்களுக்கான ஏலம் சவுதி அரேபியாவின் ஜெட்டாவில் நடைபெற்று வருகிறது. இந்த ஏலத்தில... மேலும் பார்க்க