ஃபார்முக்குத் திரும்ப வேண்டுமா? உள்ளூர் போட்டிகளில் விளையாடுங்கள்: யுவராஜ் சிங்
Vanangaan: 'கோட்டியாக வாழ வைத்த என் இயக்குநருக்கு நன்றி'- பாலா குறித்து நெகிழ்ந்த அருண் விஜய்
கடந்த வாரம் அருண் விஜய் நடிப்பில் வெளியானத் திரைப்படம் 'வணங்கான்'.
இயக்குநர் பாலா இயக்கிய இத்திரைபடத்திற்கு ஜி.வி பிரகாஷ் இசையமைத்திருக்கிறார். 'வணங்கான்' படத்தில் மாற்றுத்திறனாளியாக நடித்து அனைவரின் பாராட்டுகளையும் பெற்றிருக்கிறார் அருண் விஜய். இவரை தவிர்த்து படத்தில் அறிமுக நடிகைகளான ரோஷினி மற்றும் ரிதா ஆகியோர் நடிப்பும் பாராட்டப்பட்டிருக்கிறது.
இந்நிலையில் அருண் விஜய் இயக்குநர் பாலாவிற்கு நன்றி தெரிவித்து தனது எக்ஸ் பக்கத்தில் பதிவு ஒன்றைப் பதிவிட்டிருக்கிறார். அவர் வெளியிட்டிருந்தப் பதிவில், " வணங்கானில் என்னை கோட்டியாக வாழ வைத்த என்னுடைய இயக்குநர் பாலா அவர்களுக்கு மனமார்ந்த நன்றிகள்.
கோட்டியாக நடிக்க வாய்ப்பு கிடைத்தது வாழ்நாளில் ஒரு முறை மட்டுமே கிடைக்கும் அனுபவம். இந்தப் படத்தில் பேசாமலேயே மக்களின் இதயங்களை வென்றதற்கு நீங்கள்தான் காரணம். என்னால் என்ன செய்ய முடியும் என்பதை நீங்கள் எனக்கு தெரியப்படுத்தினீர்கள்.
இதற்காக நான் உங்களுக்கு எப்போதும் கடமைப்பட்டிருக்கிறேன்" என்று நெகிழ்ச்சியாகப் பதிவிட்டு பாலாவிற்கு நன்றியைத் தெரிவித்திருக்கிறார்.