செய்திகள் :

Vijay: 'திமுக ஒரு கொத்தடிமை; விஜய் எங்களுக்கு எதிரி அல்ல!' - ஜெயக்குமார் பரபர

post image
முன்னாள் அமைச்சரான ஜெயக்குமார் இன்று பத்திரிகையாளர்களை சந்தித்திருந்தார். அப்போது அவர், 'விஜய் எங்களுக்கு எதிரி அல்ல!' என்றும் பேசியிருக்கிறார்.
Minister Jayakumar

திமுகவை விமர்சித்துப் பேசிய ஜெயக்குமார், 'ஸ்டாலின் எங்களைப் பற்றி கொத்தடிமை என்கிறார். கொத்தடிமைகளின் ஒட்டுமொத்த உருவமே திமுகதான். திமுக ஆட்சியிலுள்ள போது எப்படி தமிழகத்தின் உரிமைகளை பதவிக்காக தாரை வார்த்தார்கள் என்பதற்கு பல உதாரணங்களை அடுக்கலாம். தமிழ்நாட்டில் ஸ்டாலினுடைய ஒரே ஒரு குடும்பம் மட்டும்தான் மகிழ்ச்சியாக இருக்கிறது. குடியரசு தினத்தன்று கூட 30 தமிழக மீனவர்கள் சிறைபடுத்தப்பட்டிருக்கிறார்கள். அதற்காக ஸ்டாலின் என்ன செய்தார்? அன்புள்ள பிரதமரே என்று கடிதம் எழுதுகிறார்.

ஸ்டாலினும் உதயநிதியும் பிரதமரை சந்திக்கிறார்கள். அப்போதாவது தமிழகத்தின் பொருளாதாரத்தை மேம்படுத்தும் வகையில் நிதியை கேட்டு வாங்கி வந்தார்களா என்றால் இல்லை. மாறாக, 2026 க்குப் பிறகு உங்களுக்கே ஆதரவு தந்துவிடுகிறோம் என எழுதப்படாத ஒப்பந்தத்தை செய்துவிட்டு வந்திருக்கிறார்கள். அரிட்டாப்பட்டி டங்ஸ்டன் சுரங்கத்துக்கான ஏலம் ஆரம்பித்ததிலிருந்து 10 மாதங்களாக அமைதியாக இருந்தது யார்? போராடிய 5000 பேர் மீது வழக்குத் தொடுத்தது யார்? அத்தனையையும் செய்துவிட்டு பாராட்டு விழாவில் கலந்துகொள்ள ஸ்டாலினுக்கு வெட்கமாக இல்லையா? பா.ஜ.கவுடன் 2026 -ம் கூட்டணி இல்லை. எப்போதும் கூட்டணி இல்லை என்பதுதான் எங்களின் அரசியல் நிலைப்பாடு.' என்றார்

ஜெயக்குமார் - முன்னாள் அமைச்சர்

விஜய் எம்.ஜி.ஆரின் பாடல் வரிகளை பயன்படுத்துவது பற்றியும், விஜய்யுடன் அதிமுக கூட்டணிக்கு செல்லுமா என்பது பற்றியும் கேட்கப்பட்ட கேள்விக்கு, 'எம்.ஜி.ஆர் தவிர்க்க முடியாத சக்தி. கருணாநிதியை பற்றி யாராவது பேசுகிறார்களா? இன்றைக்கும் பட்டித்தொட்டியெங்கும் எம்.ஜி.ஆரின் பாடல்களும் தத்துவங்களும் ஒலித்துக் கொண்டிருக்கிறது. விஜய் ஒன்றும் எங்களுக்கு எதிரி அல்ல.' என்றார்.

'ஒருவர் வளைந்து கொடுத்தே பழகி விட்டார்; மற்றொருவர் சாட்டையால் அடித்துக்கொள்கிறார்' - கனிமொழி சாடல்

தென்காசி மாவட்டம் சுரண்டை பகுதியில் தெற்கு மாவட்டக் கழகம் சார்பில் திராவிட மாடல் சாதனை விளக்கப் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இந்த பொதுக்கூட்ட நிகழ்வில் எம்பி கனிமொழி கலந்துகொண்டார். அந்த நிகழ்வில் பேசிய ... மேலும் பார்க்க

`வேங்கைவயல் பிரச்னையில் பழனிசாமி ஏன் போராடவில்லை?’ - கேள்வி எழுப்பும் தொல்.திருமாவளவன்!

திருச்சி மாவட்டம், மணப்பாறையில் ஆதிதிராவிடர் நலப்பேரவையின் சார்பில் நடைபெறும் 25-ம் ஆண்டு வெள்ளி விழாவை முன்னிட்டு நடைபெறும் பொதுக் கூட்டத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவரும், சிதம்பர நாடாளுமன... மேலும் பார்க்க

`பெரியார் இல்லாமல் நமக்கு அரசியல் இல்லை!’ – சீமான் கருத்துக்கு இயக்குநர் பார்த்திபன் பதில்

நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், சமீப நாட்களாக பொது வெளியில் பெரியார் மீது கடுமையான விமர்சனங்களை வைத்து வருகிறார். அதற்கு பெரியாரிஸ்டுகளும், பெரியாரிய அமைப்புகளும் கடும் எதிர்ப்பு ... மேலும் பார்க்க

TVK :'விஜய்யின் சென்டிமென்ட்; புதிய நிர்வாகி சஸ்பென்ஸ்; அலப்பறை கொடுத்த மா.செ' - பனையூர் அப்டேட்ஸ்

தவெக கட்சியின் இரண்டாம் கட்ட மா.செக்கள் கூட்டத்தை நடத்தி மேற்கொண்டு 19 மா.செக்களை அதிகாரபூர்வமாக அறிவித்திருக்கிறார் விஜய். பனையூரில் பரபரப்பாக நடந்து முடிந்திருக்கும் விஜய் கட்சி மீட்டிங்கின் முக்கிய... மேலும் பார்க்க

EXCLUSIVE: கசியவிடப்பட்ட வேங்கைவயல் வீடியோவின் பின்னணி? | Seeman NTK DMK Kumbh Mela| Imperfect Show

இன்றைய இம்பர்ஃபெக்ட் ஷோ ஃவில்,* - உ.பி: பிரயாக்ராஜ் மகா கும்பமேளா - கூட்ட நெரிசலால் இதுவரை 31 பேர் இறந்தார்களா?* - மோடி, அமித் ஷா & யோகி என்ன சொல்கிறார்கள்* - நிர்வாகத் திறன் இல்லாததே காரணம் - ராக... மேலும் பார்க்க