OPS: 'அமித் ஷா எவ்வளவோ சொன்னாரே, ஆனால் இபிஎஸ்...' - ஓ.பன்னீர் செல்வம் ஓப்பன் டாக...
Virat Kohli: `நானும் வீரர்களும் உங்களின் பின்னால் நிற்போம்' - கேப்டன் ரஜத் பட்டிதரை வாழ்த்திய கோலி
பெங்களூரு அணியின் புதிய கேப்டனாக ரஜத் பட்டிதர் நியமிக்கப்பட்டிருக்கிறார். அவருக்கு விராட் கோலி நெகிழ்வுடன் வாழ்த்துகளைத் தெரிவித்திருக்கிறார்.
![](https://gumlet.vikatan.com/vikatan/2024-05/70bc7324-81ab-4f96-96a4-a748f7065dd6/f9898623_4a71_4879_ada4_aae9bc404a17.webp)
இதுகுறித்து விராட் கோலி பேசுகையில், ``ரஜத் பட்டிதர்தான் பெங்களூர் அணியின் புதிய கேப்டன். பட்டிதருக்கு முதலில் வாழ்த்துகள். உங்களின் கடுமையான முயற்சியினால் முன்னேறி அத்தனை பெங்களூரு அணியின் ரசிகர்கள் மனதில் இடம்பிடித்திருக்கிறீர்கள். நீங்கள் இந்த இடத்துக்குத் தகுதியானவர். நானும் அணியின் மற்ற வீரர்களும் உங்களின் பின்னால் நிற்போம். நானும் பெங்களூரு அணியின் கேப்டனாக நீண்ட காலம் இருந்திருக்கிறேன்.
அது ஒரு மிகப்பெரிய பொறுப்பு. இது உங்களுக்குக் கிடைத்திருக்கும் மிகப்பெரிய மரியாதை. கடந்த சில ஆண்டுகளாக ரஜத்தின் ஆட்டத்தைப் பார்த்து வருகிறேன். ஒரு வீரராக பல படிகள் முன்னேறியிருக்கிறார். உள்ளூர் அளவில் அவரின் மாநில அணியையும் சிறப்பாக வழிநடத்தியிருக்கிறார்.
![](https://gumlet.vikatan.com/vikatan/2025-02-13/8dlggwws/IMG20250213120824.jpg)
ரசிகர்கள் அத்தனை பேரும் அவருக்கு ஆதரவளிக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன். யார் கேப்டனாக இருக்கிறார் என்பதையெல்லாம் விட அணியும் அணியின் நலனும்தான் முக்கியம்." என்றார்.