செய்திகள் :

Wayanad : `வயநாடு நிலச்சரிவு தேசிய பேரிடர் இல்லை' - மத்திய அரசு சொல்வதென்ன?

post image

கடந்த ஜூலை 30 - ம் தேதி வயநாட்டில் ஏற்பட்ட நிலச்சரிவு ஒட்டுமொத்த நாட்டையும் துயரத்தில் ஆழ்த்தியது. புஞ்சிரி மட்டம், முண்டகை, சூரல் மலை கிராமங்களில் பல கிலோமீட்டர் தூரத்திற்கு ஏற்பட்ட நிலச்சரிவில் 400 - க்கும் மேற்பட்டோர் பரிதாபமாக உயிரிழந்தனர். பலர் மாயமாகினர். நூற்றுக்கணக்கானவர்கள் காயமடைந்தனர். உறவுகளையும் உடமைகளையும் இழந்து தவிக்கும் ஆயிரக்கணக்கானவர்களுக்கு மறுவாழ்வு அளிக்கும் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.

மோடி | வயநாடு நிலச்சரிவு

நிலச்சரிவு ஏற்பட்டு பல மாதங்கள் கடந்தும் ஆராத ரணமாக இருக்கிறது. நூற்றாண்டு கண்டிராத இந்த பேரழிவை தேசிய பேரிடராக அறிவித்து மீட்பு பணிகளை மேற்கொள்ள உதவ வேண்டும் என கேரள அரசு, மத்திய அரசிடம் வேண்டுகோள் விடுத்தது. பிரதமர் மோடி நேரில் வந்து ஆய்வு செய்தார். ஆலோசனை கூட்டமும் நடத்தினார். இது குறித்து விரிவான கடிதம் ஒன்றையும் மத்திய அரசுக்கு வழங்கியது. தேசிய பேரிடராக அறிவிக்க வாய்ப்பில்லை என தெரிவித்து வந்த நிலையில், தற்போது பதில் கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.

கேரள அரசின் டில்லி பிரதிநிதி தாமஸிற்கு மத்திய உள்துறை அமைச்சர் நித்யானந்த ராய் அனுப்பியுள்ள அந்த கடிதத்தில், " நாட்டில் ஏற்படும் எந்தவொரு பேரிடரையும் தேசிய பேரிடராக அறிவிக்க மாநில மற்றும் தேசிய பேரிடர் விதிமுறைகளில் வழிவகையில்லை. மாநில பேரிடர் நிதியின் மூலம் கேரள மாநிலத்திற்கு ரூ.388 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.

மோடி | வயநாடு நிலச்சரிவு

இதில் மத்திய அரசின் பங்களிப்பான ரூ.291 கோடியை இரண்டு தவணைகளாக விடுவிக்கப்பட்டது. மேலும், மாநில பேரிடர் மேலாண்மை நிதியில் ரூ. 394 கோடி ரூபாய் இருப்பு இருக்கிறது. நிவாரண பணிகளை மேற்கொள்ள கேரள மாநிலத்திடம் போதுமான நிதி கையிருப்பில் இருக்கிறது. அதேவேளையில், கேரள மாநிலத்திற்கு சாத்தியமான உதவிகளை மத்திய அரசு தொடர்ந்து வழங்கும்" என குறிப்பிடப்பட்டுள்ளது.

வயநாடு : `மத்திய அரசின் அறிவிப்பு மனிதாபிமானமற்ற செயல்' - கேரள வருவாய்த் துறை அமைச்சர் ராஜு

கேரள மாநிலம், வயநாடு மாவட்டத்தில் பெய்த பெருமழை காரணமாக கடந்த ஜூலை 30-ம் தேதி சூரல்மலை, முண்டக்கை பகுதிகளில் பயங்கர நிலச்சரிவு ஏற்பட்டது. இந்த நிலச்சரிவில் சிக்கி 400-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். ... மேலும் பார்க்க

கிண்டி : `விக்னேஷின் இறப்பிற்கு டாக்டர்கள்தான் காரணம்' - குடும்பத்தினர் வேதனை

சென்னை, கிண்டி கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனையில், புற்றுநோய் சிகிச்சை மருத்துவர் பாலாஜியை, விக்னேஸ்வரன் என்பவர் கத்தியால் குத்திய சம்பவம், பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது.இதுகுறித்து ... மேலும் பார்க்க

திருப்பத்தூர்: `உள்ள நுழைய கூட முடியாது’ - வட்டாட்சியர் அலுவலகத்தில் மோசமான நிலையில் கழிவறை

திருப்பத்தூரில் வட்டாட்சியர் அலுவலகத்தில் அதிகாரிகள் வந்து பார்வையிட்ட கழிவறை, மூன்றே மாதங்களில் மீண்டும் மோசமான நிலைக்குச் சென்றிருக்கிறது.தற்போது இது எவ்வித பராமரிப்பின்றி மிக அசுத்தமான நிலையில் ‌தூ... மேலும் பார்க்க

எழும்பூர்: அம்பேத்கர் அரசுப் பள்ளியைச் சுற்றி இத்தனை இடர்களா... கண்டுகொள்ளுமா அரசு?!

சென்னை எழும்பூர் ரயில் நிலையத்திற்கும் பூங்கா ரயில் நிலையத்திற்கும் இடையேயுள்ள ரயில்வே தண்டவாளத்தை ஒட்டி, டாக்டர் அம்பேத்கர் அரசு மேல்நிலைப் பள்ளி அமைந்திருக்கிறது. இந்தப் பள்ளியை ஒட்டியுள்ள தண்டவாளத்... மேலும் பார்க்க

நெல்லை: சேரும் சகதியுமான சாலைகள்; நடந்து செல்வதே சாகசம்தான்... அவதியில் ராதாபுரம் மக்கள்..!

நெல்லை மாவட்டம், ராதாபுரம் தாலுகாவுக்கு உள்பட்ட ப்ரைட் நகர் பகுதியில் சுமார் 120 வீடுகள் வரை இருக்கின்றன. இந்தக் குடியிருப்பு பகுதியில் உள்ள பாதைகள் அனைத்தும், முறையாகச் சாலைகள் அமைத்துத் தரப்படாமல், ... மேலும் பார்க்க

குமரி: திருவள்ளுவர் சிலை - விவேகானந்தர் மண்டபம் இடையே கட்டப்பட்டு வரும் கண்ணாடிப் பாலம்! | Album

திருவள்ளுவர் சிலை - விவேகானந்தர் மண்டபம்திருவள்ளுவர் சிலை - விவேகானந்தர் மண்டபம்திருவள்ளுவர் சிலை - விவேகானந்தர் மண்டபம் மேலும் பார்க்க