செய்திகள் :

"What Bro? Why bro? பிரசாந்த் கிஷோர் விஜயை எப்படி ஜெயிக்க வைப்பார்?" - விமர்சித்த சரத் குமார்

post image

பெரம்பலூரில் பாஜக சார்பில் சமத்துவ விருந்து நிகழ்ச்சி நடத்தப்பட்டது. 'சமத்துவ மக்கள் கட்சி'யைக் கலைத்துவிட்டு, 'பா.ஜ.க' பிரமுகராகியிருக்கும் சரத்குமார் இந்நிகழ்ச்சியில் விஜய்யை விமர்சித்துப் பேசியிருக்கிறார்.

விஜய் சமீபத்தில் 'த.வெ.க' 2ம் ஆண்டு தொடக்க விழாவில், "இவர்கள் இருவரும் அடித்துக் கொள்வது போல் அடித்துக் கொள்வார்களாம். அதனை மக்கள் நம்பனுமா? 'What Bro It's Very Wrong Bro'. இதற்கு நடுவில் நம்ம பசங்க, 'TVKForTN' என சம்பவம் செய்துவிட்டு வெளியே வந்துவிடுகிறார். ஸ்லீப்பர் செல் போன்று நீங்கள் எல்லாம் எங்கே சார் இருக்கிறீர்கள்?" என்று பேசியிருந்தார்.

TVK Vijay
TVK Vijay

இந்நிலையில் சரத்குமார், "அன்புச் சகோதரர் விஜய் ரொம்பவே பாப்புலரான நடிகர். உங்களுக்கு தமிழக அரசியல் வியூகத்தை வகுத்துக் கொடுக்க இந்தி தெரிந்த ஒருத்தர் வந்து தான் சொல்லிக் கொடுக்க வேண்டுமா? டேய், எங்கடா இருக்கீங்க நீங்களாம், யாருக்கிட்டட ஃபிராடுத்தனம் பண்றீங்க?

What Bro? Why bro? சொந்தத் தொகுதியிலேயே தோற்ற பிரசாந்த் கிஷோர் விஜயை எப்படி ஜெயிக்க வைக்கிறார் என்பதைப் பார்க்கலாம். பிரசாந்த் கிஷோர் திமுகவை ஜெயிக்க வைத்ததுபோல விஜய் கட்சியை ஜெயிக்க வைப்பாரா? வரும் தேர்தலில் அதையும் பார்த்துவிடுவோம்" என்று பேசியிருக்கிறார்.

Vikatan WhatsApp Channel

இணைந்திருங்கள் விகடனோடு வாட்ஸ்அப்பிலும்... CLICK BELOW LINK

https://bit.ly/VikatanWAChannel

Dhanush : டெல்லியில் பாலிவுட் படப்பிடிப்பு; வெளிநாட்டில் இட்லி கடை பாடல்! - தனுஷ் | Exclusive Update

Dhanush Exclusiveபாலிவுட்டில் தனுஷ் நடித்து வரும் 'தேரே இஷ்க் மெய்க்' படத்தின் ஷூட்டிங் டெல்லியில் நடைபெற்று வருகிறது. 'இட்லி கடை' படத்தை அடுத்து தனுஷ் நடிக்கும் படத்தை இயக்குநர்கள் ராஜ்குமார் பெரியசா... மேலும் பார்க்க

சப்தம் விமர்சனம்: இந்த அமானுஷ்யக் கதை வெறும் சப்தமா, வருடிக்கொடுக்கும் இசையா?

மூணாரிலுள்ள ஒரு தனியார் மருத்துவக் கல்லூரியில் அடுத்தடுத்து இரண்டு மாணவர்கள் தற்கொலை செய்துகொள்கிறார்கள். 'பேய் நடமாட்டத்தால்தான் இப்படி நடக்கிறது' என வெளியே பேச்சுகள் எழுகின்றன. அதற்காக, அமானுஷ்ய சக்... மேலும் பார்க்க

Harris Jayaraj: `அடுத்த மாதம் 'துருவ நட்சத்திரம்'; பலமுறை பார்த்துவிட்டேன்’ - ஹாரிஸ் கொடுத்த அப்டேட்

கெளதம் மேனன் - விக்ரம் கூட்டணியில் உருவான ‘துருவ நட்சத்திரம்’ படத்தின் டீசர் கடந்த 2017-ம் ஆண்டே வெளியாகி ரசிகர்களின் எதிர்பார்ப்புகளை எகிற வைத்தது.ஆனால், சில காரணங்களால் படத்தின் படப்பிடிப்பு பாதியில... மேலும் பார்க்க

Good Bad Ugly: `AK is red Dragon' ; `டேவிட் பில்லா' ரெபரென்ஸ் - மீண்டும் கேங்ஸ்டராக அஜித்!

அஜித் நடித்திருக்கும் `குட் பேட் அக்லி' திரைப்படத்தின் டீசர் இன்று வெளியாகியிருக்கிறது. `மார்க் ஆண்டனி' வெற்றிக்குப் பிறகு இப்படத்தை ஆதிக் ரவிசந்திரன் இயக்கியிருக்கிறார். `விடாமுயற்சி' திரைப்படத்தை தொ... மேலும் பார்க்க

Yuvan: "கிட்டதட்ட STR 50 டிராப்... இப்போ நடக்கிறதுக்கு காரணமே யுவன் சார்தான்'' - தேசிங்கு பெரியசாமி

`ஜோ' படத்தை தொடர்ந்து ரியோ நடிப்பில் உருவாகியிருக்கும் திரைப்படம் `ஸ்வீட்ஹார்ட்'. இப்படத்தை யுவன் ஷங்கர் ராஜா தயாரித்திருக்கிறார். இப்படத்தின் டிரெய்லர் வெளியீட்டு விழா இன்று நடைபெற்றது. இந்த நிகழ்வில... மேலும் பார்க்க