செய்திகள் :

Winter Session: `ஒரே நாடு ஒரே தேர்தல், வக்பு வாரியம்’ - திட்டமிடும் பாஜக; தயாராகும் எதிர்க்கட்சிகள்

post image

வரும் 25-ம் தேதி நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் கூடுகிறது. முன்னதாக 24-ம் தேதி அனைத்து கட்சி கூட்டத்திற்கு மத்திய அரசு அழைப்பு விடுத்திருக்கிறது. அதில், 'அவையை சுமூகமாக நடத்த ஒத்துழைப்பு வழங்க வேண்டும்' எனவும் கேட்டுக்கொள்ளப்பட இருக்கிறது. இதில் ஒரே நாடு ஒரே தேர்தல், வக்பு வாரியம் மசோதாக்கள் மீது அனல்பறக்கும் விவாதங்கள் நடத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஏற்கெனவே மகாாராஷ்டிரா, ஜார்க்கண்ட் தேர்தல், மணிப்பூரில் மீண்டும் வெடித்திருக்கும் கலவரம் என அரசியல் களம் பரபரப்பாக இருக்கிறது. இந்த சூழலில் நாடாளுமன்ற கூட்டத்தொடரும் கூட இருப்பதால் கூடுதல் பரபரப்பு தொற்றிக்கொள்ளும் என்கிறார்கள்.

ஒரே நாடு ஒரே தேர்தல்

இதுகுறித்து நம்மிடம் பேசிய நாடாளுமன்ற விவகாரம் அறிந்த சிலர், "குளிர்கால கூட்டத் தொடருக்கு ஜனாதிபதி ஒப்புதல் வழங்கியிருக்கிறார். அதன்படி இக்கூட்டம் வரும் 25-ம் தேதி தொடங்கி டிசம்பர் 20-ம் தேதி வரை நடக்கிறது. இதில் ஒரேநாடு ஒரே தேர்தல், வக்பு வாரிய தீர்த்த சட்டம் உள்ளிட்ட முக்கிய மசோதாக்கல் தாக்கல் செய்யப்படலாம் என்கிறார்கள். வரும் நாடாளுமன்ற தேர்தலின்போது நாடு முழுவதும் ஒரே நேரத்தில் மக்களவை மற்றும் சட்டப்பேரவை தேர்தல்களை நடத்த பா.ஜ.க விரும்புகிறது. இதற்கு எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. இதையடுத்து முன்னாள் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் தலைமையில் குழு அமைக்கப்பட்டது. அந்த குழு ஆய்வு செய்து தனது பரிந்துரைகள் சமீபத்தில் மத்திய அரசிடம் தாக்கல் செய்யப்பட்டது. அதை மத்திய அரசும் ஏற்றுக்கொண்டுவிட்டது. இதனால் சம்மந்தப்பட்ட மசோதா குளிர்கால கூட்டத்தொடரில் கொண்டுவர வாய்ப்பு இருக்கிறது.

இதேபோல் கடந்தமுறை நாடாளுமன்ற கூட்டம் கூடியபோது வக்பு வாரிய திருத்த சட்டம் கொண்டுவரப்பட்டது. அதற்கு எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தன. இதனால் அந்த மசோதா நாடாளுமன்ற கூட்டுக்குழுவின் ஆய்வுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. தற்போது பல்வேறு தரப்பினரின் கருத்துக்கள் கேட்கப்பட்டு வருகின்றன. அதிலும் ஏராளமான சர்ச்சைகள் வெடித்திருக்கிறது. இந்தசூழலில் வரும் 29ம் தேதி நாடாளுமன்றத்தில் கூட்டுக்குழு தனது தனது அறிக்கையை தாக்கல் செய்ய உள்ளது. இதையடுத்து வக்பு வாரிய சட்ட திருத்த மசோதா மீண்டும் தாக்கல் செய்யப்படலாம். இதனால் நாடாளுமன்றத்தில் அனல் தகிக்கும் விவாதங்கள் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மறுபக்கம் மணிப்பூரில் இரு சமூகங்களுக்கு இடையேயான மோதல் மீண்டும் அதிகரித்திருக்கிறது. இந்த பிரச்னை ஒன்றரை ஆண்டுகளுக்கு மேல் நடந்து வருகிறது. பிரதமர் ஒருமுறை கூட மணிப்பூருக்கு செல்லவில்லை என காங்கிரஸ் கடுமையாக சாடி வருகிறது.

வக்பு சட்ட திருத்த மசோதா ஆய்வு

எனவே இந்த விவகாரம் நாடாளுமன்றத்தில் பெரும் புயலைக்கிளப்பும். இதேபோல் காஷ்மீருக்கு மீண்டும் மாநில அந்தஸ்து வழங்க வேண்டும். நீக்கப்பட்ட சட்டப்பிரிவு 370-ஐ மீண்டும் கொண்டுவர வேண்டும் என்கிற கோரிக்கையை காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் தீவிரமாக முன்னெடுக்க வாய்ப்பு இருக்கிறது. இதற்கு சமீபத்தில் அந்த மாநிலத்தில் நடத்த தேர்தலில் தேசிய மாநாட்டு கட்சி, காங்கிரஸ் கூட்டணி வெற்றி பெற்றுள்ளது. அவர்கள் தேர்தலுக்கு முன்பு காஷ்மீருக்கு மீண்டும் மாநில அந்தஸ்து, நீக்கப்பட்ட சட்டப்பிரிவு 370-ஐ மீண்டும் கொண்டுவருவதற்கு நடவடிக்கை எடுப்போம் என வாக்குறுதி கொடுத்திருந்தார்கள். இதன்படி ஆட்சிக்கு வந்ததும் காஷ்மீர் சட்டப்பேரவையில் இவ்விரு கோரிக்கைகளையும் வலியுறுத்தி தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. எனவே இதுகுறித்தும் நாடாளுமன்றத்தில் விவாதிக்கப்படும். ஹரியானா சட்டப்பேரவை தேர்தல் முடிவுகள் சமீபத்தில் வெளியாகின.

அதற்கு முன்பு வெளியான கருத்துக்கணிப்பு முடிவுகளில் காங்கிரஸ்தான் வெற்றிபெறும் என சொல்லப்பட்டது. இறுதியில் பாஜகவுக்கு வெற்றி கிடைத்தது. இதையடுத்து காங்கிரஸ் சார்பில் வாக்கு இயந்திரங்கள் குறித்து பல்வேறு சந்தேகங்கள் கிளப்பப்பட்டன. அதற்கு பா.ஜ.க தலைவர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். இதுகுறித்து விவாதங்களை முன்வைப்பதற்கு காங்கிரஸ் தீவிரம் காட்டி வருகிறது.

இதேபோல் மாநிலங்களுக்கான வரி பகிர்வை உயர்த்தி வழங்க வேண்டும் என்கிற கோரிக்கையை முன்வைக்க எதிர்க்கட்சிகள் திட்டமிட்டுள்ளன. இதன்படிதான் மாநில வரி பகிர்வை 50% ஆக உயர்த்த வேண்டும் என முதல்வர் ஸ்டாலின் பேசி வருவது குறிப்பிடத்தக்கது. இதேபோல் டாலருக்கு எதிரான ரூபாய் மதிப்பு வீழ்ச்சி, விலைவாசி உயர்வு, விவசாயிகள் பிரச்சினை குறித்தும் கேள்விகளை எழுப்பி மத்திய அரசுக்கு நெருக்கடிகளை கொடுக்க எதிர்க்கட்சிகள் திட்டமிட்டுள்ளன.

ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி

இதற்கிடையில் வரும் 23-ம் தேதி வயநாடு இடைத்தேர்தல் முடிவுகள் வெளியாகவுள்ளது. முன்னதாக ரேபரேலி, வயநாடு என இரண்டு தொகுதிகளிலும் ராகுல் காந்தி வெற்றிபெற்றிருந்தார். இதையடுத்து வயநாட்டில் தனது பதவியை ராஜினாமா செய்தார். இதனால் மீண்டும் அங்கு இடைத்தேர்தல் நடந்தது. இதில் முதல்முறையாக தேர்தல் அரசியலுக்கு பிரியங்கா காந்தி வந்தார். அவருக்குத்தான் வெற்றிவாய்ப்பு அதிகம் இருப்பதாக சொல்லப்படுகிறது. அவர் வெற்றி பெறும் பட்சத்தில் அவரும் நாடாளுமன்றத்தில் அடியெடுத்துவைக்கிறார். ஏற்கெனவே ராகுல் காந்தி நாடாளுமன்றத்தில் அதிரடித்து வரும் சூழலில் பிரியங்கா காந்தியும் கூடுதல் பலம் சேர்ப்பார் என்கிறார்கள் காங்கிரஸாச். இதனால் நாடாளுமன்ற கூட்டத்தொடர் முடியும் வரை பரபரப்புக்கு பஞ்சம் இருக்காது" என்றனர்.

நீங்கள் விரும்பி படித்த தொடர்கள், இப்போது ஆடியோ வடிவில்... புத்தம் புதிய விகடன் ப்ளே... உங்கள் அன்றாட பணிகளை கவனித்துக் கொண்டே ரசித்து கேட்க, உடனே இன்ஸ்டால் செய்யுங்கள்...

https://bit.ly/PesalamVaanga

'கொதித்த வானதி... காட்டமான ஹெச்.ராஜா..!' - பாஜக மையக்குழு கூட்டத்தில் நடந்தது என்ன?

கடந்த 2.9.2024 முதல் தமிழக பா.ஜ.க-வில் தீவிர உறுப்பினர் சேர்க்கை நடந்து வருகிறது. ஒரு கோடி பேரை இணைக்க வேண்டும் என டெல்லி டார்கெட் கொடுத்திருந்த நிலையில், 20 லட்சம் பேர்தான் இணைத்துள்ளனர் என்கிறார்கள்... மேலும் பார்க்க

Adani: `அதானி மீது என்ன குற்றச்சாட்டு?’ - லஞ்சப் பட்டியலில் தமிழ்நாடு மின் பகிர்மானக் கழகம் | Decode

அதானி நிறுவனத்தின் தலைவர் கெளதம அதானி, அதானி கிரீன் எனர்ஜி நிறுவனத்தின் செயல் இயக்கநர் சாகர் அதானி, அதானி கிரீன் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியாக இருந்த வினீத் ஜெயின் உள்ளிட்ட 5 பேர் மீது அமெரிக்க ... மேலும் பார்க்க

`ஆட்சி அதிகாரம்; முதல் புள்ளியை வைத்துள்ளோம்... பல புள்ளிகள் தேவை' - திருமாவளவன் சொல்வதென்ன?

திண்டுக்கல் மாவட்டம், பழனியில் கட்சி நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ள விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன் வந்திருந்தார். முன்னதாக பழனி முருகன் கோயிலுக்கு சென்று திருமாவளவன் சாமி தரிசனம் செய்... மேலும் பார்க்க

Adani: 'குற்றம் நிரூபிக்கப்படும் வரை நாங்கள் நிரபராதிகளே!' - அதானி குழுமத்தின் அறிக்கை கூறுவதென்ன?!

'இது அடிப்படையற்ற குற்றசாட்டு' என்று அதானி மீதான அமெரிக்காவின் ஊழல் குற்றச்சாட்டிற்கு அதானி நிறுவனம் பதிலளித்துள்ளது. அதானி நிறுவனம் தனது அறிக்கையில், "அமெரிக்க நீதித்துறை மற்றும் அமெரிக்க பத்திரங்கள்... மேலும் பார்க்க

இந்திய அதிகாரிகளுக்கு ரூ.2,200 கோடி லஞ்சம் - அமெரிக்காவில் அதானி மீது முறைகேடு புகார் | முழு பின்னணி

சோலார் எனர்ஜி திட்ட ஒப்பந்த விவகாரத்தில் முதலீட்டைப் பெற அமெரிக்க முதலீட்டாளர்களை பொய் சொல்லி ஏமாற்றியதாகவும், அதற்காக இந்திய அதிகாரிகளுக்கு கோடிக்கணக்கில் லஞ்சம் கொடுத்ததாகவும் கௌதம் அதானி மீது பரபரப... மேலும் பார்க்க

Adani : 'அதானியும் மோடியும் கூட்டு... அதானியை கைதுசெய்ய வேண்டும்' - ராகுல் காந்தி கூறுவது என்ன?!

'சோலார் ஒப்பந்தத்திற்காக அதானி இந்திய அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுத்துள்ளார்... போலி அறிக்கைகள் மூலம் அமெரிக்கா மற்றும் உலக முதலீட்டாளர்களிடமிருந்து அதானி நிதி பெற்றுள்ளார்' என்று அமெரிக்கா அதானியின் மீ... மேலும் பார்க்க