ஃபேமிலி படம் ஓடிடி வெளியீட்டுத் தேதி!
'ஃபேமிலி படம்' திரைப்படம் ஓடிடியில் நாளை(ஜன. 15) வெளியாகிறது.
யு.கே. கிரியேஷன்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் வெளியான படம் 'ஃபேமிலி படம்'. டைனோசார் பட புகழ் உதய் கார்த்திக் கதாநாயகனாக நடித்துள்ளார். அவருக்கு ஜோடியாக சுபிக்ஷா கயா நடித்துள்ளார்.
விவேக் பிரசன்னா, ஸ்ரீஜா ரவி, பட்டிமன்ற பிரபலம் மோகனசுந்தரம், பார்த்திபன் குமார் மற்றும் கவின் உள்ளிட்டோர் பிரதான பாத்திரங்களில் நடித்துள்ளனர்.
இதையும் படிக்க: சூப்பர் ஸ்டாரின் சூப்பர் சாகா? சன் பிக்சர்ஸ் புதிய அறிவிப்பு!
கதை, திரைக்கதை, வசனம் எழுதி இப்படத்தை இயக்கியுள்ளார் செல்வகுமார் திருமாறன். அனிவி பாடல்களுக்கு இசையமைக்க, 'விலங்கு' இணையத்தொடரில் தனது இசையின் மூலம் மிரட்டிய அஜிஷ் இப்படத்தின் பின்னணி இசையை அமைத்துள்ளார்.
இந்த நிலையில், 'ஃபேமிலி படம்' திரைப்படம் நாளை(ஜன. 15) ஆஹா தமிழ் ஓடிடி தளத்தில் வெளியாகிறது.