திரிவேணி சங்கமத்தில் புனித நீராடினார் ஹிமாசல் முதல்வர் சுக்விந்தர்!
அதிக ரன்கள் குவித்து ரிக்கி பாண்டிங் சாதனையை முறியடித்த விராட் கோலி!
சர்வதேச கிரிக்கெட்டில் அதிக ரன்கள் குவித்து ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் கேப்டன் ரிக்கி பாண்டிங் சாதனையை விராட் கோலி முறியடித்துள்ளார்.
ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடரில் துபையில் நேற்று முன் தினம் (பிப்ரவரி 23) நடைபெற்ற போட்டியில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோதின. இந்தப் போட்டியில் இந்திய அணி பாகிஸ்தானை 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தியது. அபார ஆட்டத்தை வெளிப்படுத்திய விராட் கோலி சதம் விளாசி அசத்தினார்.
ரிக்கி பாண்டிங் சாதனை முறியடிப்பு
பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் சதம் விளாசியதன் மூலம் சர்வதேச கிரிக்கெட்டில் அதிக ரன்கள் குவித்து மூன்றாமிடத்தில் இருந்த ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் கேப்டன் ரிக்கி பாண்டிங்கின் சாதனையை விராட் கோலி முறியடித்துள்ளார்.
Virat Kohli keeps adding to his greatness #ChampionsTrophy#PAKvIND ✍️: https://t.co/Xznber5ZVTpic.twitter.com/yo9IbtzNvS
— ICC (@ICC) February 23, 2025
பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியுடன் சர்வதேச கிரிக்கெட்டில் விராட் கோலி 27,503* ரன்கள் குவித்துள்ளார். அவருக்கு முன்பாக, இந்திய அணியின் முன்னாள் வீரர் சச்சின் டெண்டுல்கர் 34,357 ரன்களுடன் முதலிடத்திலும், இலங்கை வீரர் குமார் சங்ககாரா 28,016 ரன்களுடன் இரண்டாவது இடத்திலும் உள்ளனர்.
சர்வதேச கிரிக்கெட்டில் அதிக ரன்கள் குவித்துள்ள டாப் 5 வீரர்கள்
சச்சின் டெண்டுல்கர் (இந்தியா) - 34,357 ரன்கள்
குமார் சங்ககாரா (இலங்கை) - 28,016 ரன்கள்
விராட் கோலி (இந்தியா) - 27,503* ரன்கள்
ரிக்கி பாண்டிங் (ஆஸ்திரேலியா) - 27,483 ரன்கள்
மஹேலா ஜெயவர்த்தனா (இலங்கை) - 25,957 ரன்கள்