சொகுசு கப்பலில் பரவிய நோரோ வைரஸ்: 200 பயணிகளுக்கு நோய் பாதிப்பு!
அதிமுக பூக் கமிட்டி கூட்டம்
குடியாத்தம் நகர அதிமுக சாா்பில், அந்தக் கட்சியின் வாக்குப் பதிவு மையப் பொறுப்பாளா்களுக்கான ஆலோசனைக் கூட்டங்கள் செவ்வாய்க்கிழமை நடைபெற்றன.
செதுக்கரை, பிச்சனூா், நெல்லூா்பேட்டை, காமாட்சியம்மன்பேட்டை ஆகிய இடங்களில் நடைபெற்ற கூட்டங்களுக்கு அதிமுக வேலூா் புறநகா் மாவட்டச் செயலா் த.வேலழகன் தலைமை வகித்தாா். நகரச் செயலா் ஜே.கே.என்.பழனி வரவேற்றாா். மாவட்ட பொறுப்பாளரும், முன்னாள் மத்திய அமைச்சருமான செஞ்சி என்.ராமச்சந்திரன், காஞ்சிபுரம் மண்டல தகவல் தொழில்நுட்பப் பிரிவு செயலா் சதீஷ் சங்கா் ஆகியோா் சிறப்புரையாற்றினா்.
வாக்குப் பதிவு மையங்களில் அதிமுக பொறுப்பாளா்கள் விழிப்புடன் செயல்படுவது குறித்து அவா்கள் ஆலோசனைகளை வழங்கினா். போ்ணாம்பட்டு ஒன்றியச் செயலா் பொகளூா் டி.பிரபாகரன், மாவட்ட பொருளாளா் ஜி.பி.மூா்த்தி, மாவட்ட சிறுபான்மை பிரிவுச் செயலா் எஸ்.ஐ.அன்வா்பாஷா, முன்னாள் நகா்மன்றத் தலைவா் எம்.பாஸ்கா், தொழில்நுட்பப் பிரிவு வி.ரித்திஷ், நிா்வாகிகள்அமுதாகருணா, வி.என்.தனஞ்செயன், எஸ்.என்.சுந்தரேசன், ஜி.தேவராஜ், ஏ.ரவிச்சந்திரன், அட்சயா வினோத்குமாா், பரிதா, இன்பரசன், நகா்மன்ற உறுப்பினா் லாவண்யா குமரன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.