அமெரிக்க விமானங்கள் அமிருதசரஸ் வருவது ஏன்? பஞ்சாப் முதல்வர் பகவந்த் மான்
அமிருதசரஸ்: நாடு கடத்தும் இந்தியர்களுடன், அமெரிக்க விமானங்கள் அமிருதசரஸ் வருவது ஏன் என பஞ்சாப் முதல்வர் பகவந்த் மான் கேள்வி எழுப்பியிருக்கிறார்.
அமெரிக்காவில் சட்டவிரோதமாகக் குடியேறிய இந்தியர்களை நாடு கடத்தும் நடவடிக்கையின்படி, இரண்டாவது விமானம் நாளை காலை அமிருதசரஸில் தரையிறங்கவிருக்கிறது.
இது பஞ்சாப் மற்றும் பஞ்சாபி மக்களை அவமானப்படுத்தும் வகையில் இருப்பதாகவும், ஏதோ முதலில் ஒரு அமெரிக்க விமானம் அமிருதசரஸில் தரையிறங்கியது. தற்போது இரண்டாவது விமானமும் அமிருதசரஸில் தரையிறங்க திட்டமிடப்பட்டுள்ளது.
எனவே, மத்திய வெளியுறவுத் துறை அமைச்சகம், அமெரிக்க ராணுவ விமானம் அமிருதசரஸில் தரையிறங்க வேண்டும் என்று முடிவு செய்ய மிக முக்கிய காரணம் என்ன என்பதை தெரிவிக்க வேண்டும் என்று கேள்வி எழுப்பியிருக்கிறார்.
பஞ்சாப் மாநிலத்துக்கு அவமானத்தை ஏற்படுத்தும் வகையில் இதனை தேர்வு செய்தீர்களா? பிரதமர் மோடியும் அமெரிக்க அதிபர் டிரம்பும் சந்தித்துக் கொண்டனர். இதுதான் டிரம்ப் கொடுக்கும் பரிசா? என்றும் கேள்வி எழுப்பியிருக்கிறார்.