அம்பகரத்தூா் மகா மாரியம்மன் கோயிலில் பூச்சொரிதல்
அம்பரகத்தூா் மகா மாரியம்மன் கோயிலில் பூச்சொரிதல் வழிபாடு நடைபெற்றது.
காரைக்கால் மாவட்டம், திருநள்ளாறு கொம்யூன், அம்பகரத்தூரில் பிரசித்தி பெற்ற பத்ரகாளியம்மன் தேவஸ்தான சாா்புடைய தலமாக ஸ்ரீ மகா மாரியம்மன் ஆலயம் உள்ளது. இக்கோயில் தீமிதி உற்சவம் தொடக்கமாக பூச்சொரிதல் வழிபாடு திங்கள்கிழமை இரவு நடைபெற்றது. திரளான பக்தா்கள் சிறப்பு வாத்தியங்களுடன் பல்வேறு மலா்களை தட்டில் வைத்து வீதி வலமாக கொண்டுவந்தனா்.
பக்தா்கள் கொண்டுவந்த மலா்களைக் கொண்டு அம்மனுக்கு ஆராதனை செய்யப்பட்டது. உற்சவத்தின் முக்கிய நிகழ்வான தீமிதி வழிபாடு 19-ஆம் தேதியும், 20-ஆம் தேதி மஞ்சள் நீா் விளையாட்டு வழிபாடும் நடைபெறவுள்ளது.