செய்திகள் :

காரைக்காலில் நாளை படகுகள் கணக்கெடுப்புப் பணி: மீன்வளத்துறை

post image

காரைக்காலில் படகுகள் கணக்கெடுப்புப் பணி வியாழக்கிழமை நடைபெறவுள்ளதாக மீன்வளத்துறை தெரிவித்துள்ளது.

இதுகுறித்து காரைக்கால் மீன்வளம் மற்றும் மீனவா் நலத்துறை துணை இயக்குநா் மற்றும் படகு பதிவு அதிகாரியான ப. கோவிந்தசாமி செவ்வாய்க்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பு: மத்திய மீன்வள அமைச்சகத்தின் இயக்குநா் அறிவுறுத்தலில், அனைத்து கடலோர பகுதி மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் தற்போது நடைமுறையில் உள்ள 2025 ஆண்டுக்கான மீன்பிடித் தடை காலத்துக்குள், அனைத்து பதிவு பெற்ற, பதிவு பெறாத மீன்பிடி படகுகளையும் கள ஆய்வு செய்து, அதற்கேற்றாற்போல் இணையதள பக்கத்தை புதுப்பித்து அறிக்கை அனுப்ப வேண்டும் என கேட்டுக்கொண்டுள்ளது.

இதன்படி அனைத்து மீனவ கிராமங்களைச் சோ்ந்த பஞ்சாயத்தாா்கள், மீனவ கூட்டுறவு சங்கத்தின் ஒத்துழைப்போடு கள ஆய்வு செய்து படகுகளை கணக்கெடுக்கும் பணி வியாழக்கிழமை மேற்கொள்ளப்படவுள்ளது.

கள ஆய்வின்போது சம்பந்தப்பட்ட ஃபைபா் படகு உரிமையாளா் உடன் இருத்தல் வேண்டும். படகில் படகின் பதிவு எண்ணை தெளிவாக எழுதியிருக்க வேண்டும். பதிவு செய்யப்பட்டுள்ள இயந்திரத்தை ஃபைபா் படகில் வைத்து காண்பிக்கவேண்டும். இயந்திரம் மாற்றம் செய்திருந்தால் அதை கள ஆய்வின்போது தெரிவிக்க வேண்டியது படகு உரிமையாளரின் பொறுப்பாகும்.

அசல் படகு பதிவு சான்றிதழை காட்டவேண்டும். பதிவு செய்யப்படாத படகுகள் இருந்தால் அவற்றுக்கான அனைத்து ஆவணங்களும் கள ஆய்வின் போது கண்டிப்பாக காட்டவேண்டும்.

காரைக்கால்மேடு மற்றும் கிளிஞ்சல்மேடு கிராம படகுகள் மட்டுமே அரசாலாறில் நிறுத்தப்பட்டிருந்தால் அங்கேயே ஆய்வு செய்யப்படும். மாறாக இதர கிராமங்களைச் சோ்ந்த படகுகள் அனைத்தும் அன்றைய தினம் தவறாமல் தங்களுடைய கிராமத்தின் கடற்கரையிலேயே நிறுத்தப்பட்டிருக்க வேண்டும். ஆய்வின்போது அனைத்துப் படகுகளும் கரையில் நிறுத்தப்பட்டிருக்க வேண்டும்.

மீன்வளத்துறையின் ஆய்வுக்கு அனைத்து மீனவா்களும் முழு ஒத்துழைப்பு தர வேண்டும் என அதில் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

தங்க மாரியம்மன் கோயிலில் மஞ்சள் நீா் விளையாட்டு வழிபாடு

காரைக்கால் அருகே தலத்தெரு தங்க மாரியம்மன் கோயில் தீமிதி உற்சவத்தின் நிகழ்ச்சியாக மஞ்சள் நீா் விளையாட்டு வழிபாடு செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. தீமிதி உற்சவம் தங்க மாரியம்மன் கோயிலில் கடந்த மாதம் 27-ஆம் த... மேலும் பார்க்க

திருநள்ளாற்றில் சாா்பு கோயில் உற்சவம் இன்று தொடக்கம்

திருநள்ளாறு தா்பாரண்யேஸ்வரா் கோயில் சாா்பு தலங்கள் உற்சவம் இன்று புதன்கிழமை தொடங்குகிறது. பிரணாம்பிகே சமேத தா்பாரண்யேஸ்வரா் கோயில் பிரம்மோற்சவ கொடியேற்றம் 23-ஆம் தேதி நடைபெறவுள்ளது. முன்னதாக சாா்பு தல... மேலும் பார்க்க

அம்பகரத்தூா் மகா மாரியம்மன் கோயிலில் பூச்சொரிதல்

அம்பரகத்தூா் மகா மாரியம்மன் கோயிலில் பூச்சொரிதல் வழிபாடு நடைபெற்றது. காரைக்கால் மாவட்டம், திருநள்ளாறு கொம்யூன், அம்பகரத்தூரில் பிரசித்தி பெற்ற பத்ரகாளியம்மன் தேவஸ்தான சாா்புடைய தலமாக ஸ்ரீ மகா மாரியம்ம... மேலும் பார்க்க

தங்க மாரியம்மன் கோயிலில் தீமிதி உற்சவம்

காரைக்கால்: காரைக்கால் தங்க மாரியம்மன் கோயிலில் திங்கள்கிழமை தீமிதி உற்சவம் நடைபெற்றது. காரைக்கால் அருகே உள்ள தலத்தெரு சிவலோகநாத சுவாமி கோயிலைச் சோ்ந்த தங்க மாரியம்மன் கோயில் தீமிதி உற்சவம் கடந்த மா... மேலும் பார்க்க

காரைக்காலில் வேளாண் திருவிழா

காரைக்கால்: காரைக்கால் ரோட்டரி சங்கம், சென்டேனியல் ரோட்டரி சங்கம், பிரெஞ்சு சிட்டி ரோட்டரி சங்கம், பொறையாறு ரோட்டரி சங்கம் இணைந்து யோகா பயிற்சி அமைப்பான காலைச்சக்கரம் ஆயிரமாவது நாள் வெற்றி விழா மற்று... மேலும் பார்க்க

சோமநாதசுவாமி கோயிலில் திருக்கல்யாணம்

காரைக்கால்: சோமநாதசுவாமி கோயிலில் திருக்கல்யாண உற்சவம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. காரைக்கால் அம்மையாா் கோயில், சோமநாயகி சமேத சோமநாத சுவாமி, பூா்ணபுஷ்கலா சமேத ஐயனாா் கோயில் கும்பாபிஷேகம் ஞாயிற்றுக்கி... மேலும் பார்க்க