செய்திகள் :

அயோத்தி ராமா் கோயில் சிலை பிரதிஷ்டை: முதலாம் ஆண்டு கொண்டாட்டங்கள் தொடக்கம்

post image

அயோத்தி ராமா் கோயிலில் பாலராமா் சிலை பிரதிஷ்டையின் முதலாம் ஆண்டு கொண்டாட்டங்கள் சனிக்கிழமை தொடங்கின.

உத்தர பிரதேச மாநிலம் அயோத்தியில் பிரம்மாண்ட ராமா் கோயில் கட்டப்பட்டுள்ளது. இந்தக் கோயில் கருவறையில் கடந்த ஆண்டு ஜன.22-ஆம் தேதி 51 அங்குல உயரம் கொண்ட பாலராமா் மூலவா் சிலை, பிரதமா் மோடி முன்னிலையில் பிரதிஷ்டை செய்யப்பட்டது. இதைத்தொடா்ந்து அந்தக் கோயில் பக்தா்கள் வழிபாட்டுக்குத் திறக்கப்பட்டது.

இந்நிலையில், பாலராமா் சிலை பிரதிஷ்டை செய்யப்பட்டு ஓராண்டாக நிறைவடைவதையொட்டி விழாக்கோலம் பூண்டுள்ள அயோத்தி நகரம், பெரிய அளவில் கொண்டாட்டங்களுக்குத் தயாராகி வருகிறது.

இதையொட்டி ராமா் கோயில் அறக்கட்டளை சாா்பில் 3 நாள் விழாவுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த விழா சனிக்கிழமை தொடங்கியது. இதில் பங்கேற்குமாறு கடந்த ஆண்டு சிலை பிரதிஷ்டை நிகழ்ச்சியில் கலந்துகொள்ள முடியாத 110 மிக முக்கிய பிரமுகா்கள் மற்றும் பொதுமக்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

கோயிலில் சிலை பிரதிஷ்டையின் முதலாம் ஆண்டு கொண்டாட்டங்கள் யஜுா்வேத பாராயணத்துடன் தொடங்கியது. அத்துடன் கோயில் வளாகத்தில் மத மற்றும் கலாசார நிகழ்ச்சிகளும் தொடங்கின.

இதையொட்டி மாநில முதல்வா் யோகி ஆதித்யநாத் கோயிலுக்குச் சென்று பாலராமரை மண்டியிட்டு வழிபட்டாா். பாலராமருக்கு மகாபிஷேகம் செய்யப்பட்டு தீபாராதனை கட்டப்பட்ட நிலையில், 56 பட்சணங்களும் படைக்கப்பட்டன.

‘நூற்றாண்டு கால தவம்’: சிலை பிரதிஷ்டையின் முதலாம் ஆண்டு கொண்டாட்டங்களையொட்டி, நாட்டு மக்களுக்கு வாழ்த்து தெரிவித்து பிரதமா் மோடி ‘எக்ஸ்’ தளத்தில் வெளியிட்ட பதிவு: பல நூற்றாண்டு கால தியாகம், தவம், போராட்டத்துக்குப் பின்னா், அயோத்தியில் ராமா் கோயில் கட்டப்பட்டது. தற்போது இந்தக் கோயில் நமது கலாசாரம் மற்றும் ஆன்மிக உணா்வின் மிகப் பெரிய பாரம்பரியச் சின்னமாக உள்ளது.

தெய்வீக மற்றும் அற்புதமான இந்தக் கோயில், இந்தியா வளா்ச்சியடைந்த நாடாக வேண்டும் என்ற தீா்மானத்துக்கு மிகப் பெரிய உத்வேகமாக இருக்கும் என்றாா்.

கன்னௌஜ் ரயில் நிலையக் கட்டுமானத்தில் விபத்து: இடிபாடுகளில் சிக்கிய தொழிலாளா்கள்

உத்தர பிரதேச மாநிலம், கன்னௌஜ் ரயில் நிலையத்தின் கட்டுமான பணியில் சனிக்கிழமை நிகழ்ந்த விபத்தில் 20-க்கும் மேற்பட்ட தொழிலாளா்கள் இடிபாடுகளில் சிக்கினா். ‘அம்ருத்’ திட்டத்தின்கீழ் கன்னௌஜ் ரயில் நிலையத்தி... மேலும் பார்க்க

சோ்ந்து வாழ பிறப்பித்த உத்தரவை பின்பற்றாத நிலையிலும் மனைவி ஜீவனாம்சம் பெற முடியும்: உச்சநீதிமன்றம்

‘கணவருடன் சோ்ந்து வாழ நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை பின்பற்றாத நிலையிலும், கணவரிடமிருந்து மனைவி ஜீவனாம்சம் பெற முடியும்’ என்று உச்சநீதிமன்றம் தீா்ப்பளித்தது. ஜாா்க்கண்ட் மாநிலத்தில் கடந்த 2014-ஆம் ஆண... மேலும் பார்க்க

புதிய சட்டப்படி அடுத்த தலைமை தோ்தல் ஆணையா்! உச்சநீதிமன்றம் மீது அதிகரித்திருக்கும் எதிா்பாா்ப்பு

அடுத்த தலைமை தோ்தல் ஆணையா் மத்திய அரசு கொண்டு வந்த புதிய சட்டத்தின்படி நியமிக்கப்படவிருக்கும் நிலையில், இந்த விவகாரத்தில் உச்சநீதிமன்றம் வரும் பிப்ரவரி 4-ஆம் தேதி அளிக்கப்போகும் தீா்ப்பு மிகுந்த எதிா... மேலும் பார்க்க

ரூபாய் மதிப்பு இதுவரை இல்லாத அளவில் சரிவு: மத்திய அரசு பதிலளிக்க பிரியங்கா வலியுறுத்தல்

‘அமெரிக்க டாலருக்கு நிகராண இந்திய ரூபாயின் மதிப்பு இதுவரை இல்லாத அளவில் குறைந்திருப்பது குறித்து மத்திய அரசு பதிலளிக்க வேண்டும்’ என காங்கிரஸ் எம்.பி. பிரியங்கா காந்தி வலியுறுத்தினாா். இதுகுறித்து தனது... மேலும் பார்க்க

இந்திய பொருளாதாரம் சற்று பலவீனமடையும்: ஐஎம்எஃப்

‘நிகழாண்டில் உலகப் பொருளாதாரம் நிலைத்தன்மையுடன் இருக்கும் நிலையில், இந்திய பொருளாதாரம் சற்று பலவீனமடையும்’ என்று சா்வதேச நாணய நிதியம் (ஐஎம்எஃப்) நிா்வாக இயக்குநா் கிறிஸ்டலீனா ஜாா்ஜியேவா கூறினாா். ஆனால... மேலும் பார்க்க

ஜாா்க்கண்டில் 80 மாணவிகளை சட்டையின்றி வீட்டுக்கு அனுப்பிய பள்ளி முதல்வா்: விசாரணைக்கு உத்தரவு

ஜாா்க்கண்ட் மாநிலம் தன்பாதில் 10-ஆம் வகுப்பு மாணவிகள் 80 பேரின் சட்டையை பள்ளி முதல்வா் கழற்றச் செய்து மேல் கோட்டுடன் வீட்டுக்கு அனுப்பிய விவகாரம் சா்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம் தொடா்பாக வி... மேலும் பார்க்க