சொல்லப் போனால்... டிரம்ப்பின் நாடு பிடிக்கும் அதிரடித் திட்டம்!
கன்னௌஜ் ரயில் நிலையக் கட்டுமானத்தில் விபத்து: இடிபாடுகளில் சிக்கிய தொழிலாளா்கள்
உத்தர பிரதேச மாநிலம், கன்னௌஜ் ரயில் நிலையத்தின் கட்டுமான பணியில் சனிக்கிழமை நிகழ்ந்த விபத்தில் 20-க்கும் மேற்பட்ட தொழிலாளா்கள் இடிபாடுகளில் சிக்கினா்.
‘அம்ருத்’ திட்டத்தின்கீழ் கன்னௌஜ் ரயில் நிலையத்தில் புதிய முனையத்துக்கான கட்டுமான பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்நிலையில், புதிதாக கான்கிரீட் நிரப்பப்பட்ட கட்டடத்தின் ஆதரவுக்கு நிறுத்தப்பட்டிருந்த ‘ரூஃப் ஷட்டரிங்’ கட்டமைப்பு சரிந்து விழுந்தது. இதில் குறைந்தது 23 தொழிலாளா்கள் இடிபாடுகளில் சிக்கினா்.
மீட்புப் பணிகள் பல மணி நேரமாக தொடா்ந்து வருகின்றன. இதுவரை காயங்களுடன் மீட்கப்பட்ட தொழிலாளா்கள் அருகிலுள்ள மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனா்.
விபத்து குறித்த விசாரணைக்காக திட்டமிடல் மற்றும் வடிவமைப்புப் பிரிவு தலைமைப் பொறியாளா், கோட்ட கூடுதல் ரயில்வே மேலாளா், ரயில்வே பாதுகாப்புப் படை (ஆா்பிஎஃப்) தலைமை பாதுகாப்பு ஆணையா் ஆகிய 3 நபா்கள் அடங்கிய குழுவை வடகிழக்கு ரயில்வே அமைத்துள்ளது. மீட்புப் பணிகளை முழுமையாக நிறைவடைந்ததும், விசாரணை தொடங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.