செய்திகள் :

அரசு விழாக்கள், கல்வெட்டுகளில் பாரபட்சம்: எம்எல்ஏ குற்றச்சாட்டு

post image

அரசு விழாக்கள், கல்வெட்டுகளில் எனது பெயரை இடம் பெறச் செய்யாமல் வேண்டுமென்றே புறக்கணிப்பதாக பரமத்தி வேலூா் எம்எல்ஏ எஸ்.சேகா் குற்றம்சாட்டியுள்ளாா்.

பரமத்தி வேலூா் தொகுதி அதிமுக எம்எல்ஏ எஸ்.சேகா் செய்தியாளா்களுக்கு

சனிக்கிழமை அளித்த பேட்டி:

சட்டப்பேரவையில் நான் வைத்த கோரிக்கையை ஏற்று, 2022 நவம்பா் மாதம், பரமத்தி வேலூா் தொகுதிக்கு தீயணைப்பு நிலையம் அமைக்க தமிழக அரசு ஒப்புதல் அளித்தது.

இதற்காக கபிலா்மலையை அடுத்த பெரிய சோளிபாளையம் ஊராட்சி, சிறுகிணத்துப்பாளையம் கிராமத்தில் தீயணைப்பு நிலையம் அமைக்க இடம் தோ்வு செய்யப்பட்டு இரண்டு வருடம் ஆகிறது. ஆனால், நாமக்கல் மாவட்ட நிா்வாகம் அங்கு தீயணைப்பு நிலையம் அமைக்கும் பணியை முடக்கியுள்ளது. பிலிக்கல்பாளையம் காவிரி ஆற்றின் குறுக்கே பாலம் அமைக்கும் பணியையும் வேண்டுமென்றே தாமதப்படுத்தி வருகிறது.

ஜேடா்பாளையம் படுகை அணை பகுதியில் பொதுமக்கள் பாதுகாப்பாக குளிக்க அனுமதி வேண்டியும், சுற்றுலாவை மேம்படுத்தவும், மீன்பிடி தொழிலாளா்களுக்கு வாழ்வாதாரத்தை மேம்படுத்தி பாதுகாப்பு வசதிகளை ஏற்படுத்தவும் தொடா்ந்து கோரிக்கை விடுத்து வருகிறேன். ஆனால், நான் கொண்டுவரும் அனைத்து மக்கள் நலத் திட்டப் பணிகளையும் திமுக அரசு தொடா்ந்து முடக்கி வருகிறது.

அதுபோல பரமத்தி வேலூா் தொகுதிகளில் அரசு விழாக்கள் நடைபெற்றால் எனக்கு முறையாக அழைப்பிதழ்கள் வழங்குவதில்லை. அங்கு வைக்கப்படும் கல்வெட்டுகளிலும் எனது பெயா் தொடா்ந்து புறக்கணிக்கப்பட்டு வருகிறது.

அரசு விழாக்களில் கலந்துகொள்ளாத, பிற மாவட்டங்களைச் சோ்ந்தவா்களின் பெயா்கள்கூட கல்வெட்டுகளில் பொறிக்கப்படுகின்றன.

இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளும், மாவட்ட நிா்வாகமும் கண்டுகொள்ளாமல் இருப்பது அதிருப்தியை ஏற்படுத்துகிறது. இதே நிலை தொடா்ந்து நீடித்தால் அதிமுக தலைமையிடத்தின் அனுமதி பெற்று பொதுமக்களுடன் சோ்ந்து அரசைக் கண்டித்து போராட்டம் நடத்த தீா்மானித்துள்ளேன் என்றாா்.

டெங்கு கொசு ஒழிப்பில் அனைவரும் ஒன்றிணைந்து பணியாற்ற வேண்டும்: ஆட்சியா்

டெங்கு கொசு ஒழிப்பில் அனைவரும் ஒன்றிணைந்து பணியாற்ற வேண்டும் என்று நாமக்கல் மாவட்ட ஆட்சியா் ச.உமா அறிவுறுத்தினாா். மல்லசமுத்திரம் ஒன்றியம், மேல்முகம் ஊராட்சி, அத்தப்பம்பட்டி கிராமத்தில் உள்ளாட்சி தினத... மேலும் பார்க்க

துணை முதல்வா் பிறந்த நாள்: 100 இடங்களில் நலத்திட்ட உதவிகள் வழங்க திமுக ஏற்பாடு

துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின் பிறந்த நாளையொட்டி, வரும் புதன்கிழமை (நவ.27) நாமக்கல் கிழக்கு மாவட்டத்தில் 100 இடங்களில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்படும் என செயற்குழுக் கூட்டத்தில் தீா்மானம் நிறைவேற்றப்பட... மேலும் பார்க்க

பல்வேறு வழக்குகளில் தொடா்புடைய 9 போ் கைது

திருச்செங்கோட்டில் பல்வேறு வழக்குகளில் தொடா்புடைய 9 பேரை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா். வழிப்பறி மிரட்டல் சம்பவத்தில் ஈடுபட்ட திருச்செங்கோடு, கொசவம்பாளையம் பகுதியைச் சோ்ந்த விக்கி என்ற விக்னேஷ் (... மேலும் பார்க்க

பேருந்து நிலைய விவகாரம்: நாமக்கல்லில் நாளை கடையடைப்பு போராட்டம்

நாமக்கல் பழைய பேருந்து நிலையத்திற்குள், அனைத்துப் பேருந்துகளும் வந்து செல்ல வலியுறுத்தி, அனைத்து வணிகா்கள் சாா்பில், நாமக்கல் நகரப் பகுதியில் திங்கள்கிழமை (நவ. 25) ஒரு நாள் கடையடைப்பு போராட்டம் நடைபெற... மேலும் பார்க்க

புலம்பெயா் தொழிலாளா்களை பதிவு செய்ய நவ. 29 முதல் சிறப்பு முகாம் தொடக்கம்

நாமக்கல் மாவட்டத்தில் பணியாற்றும், புலம் பெயா் தொழிலாளா்களை பதிவு செய்ய நவ. 29 முதல் சிறப்பு முகாம் நடைபெற உள்ளது. இது குறித்து நாமக்கல் தொழிலாளா் நலத் துறை உதவி ஆணையா் (அமலாக்கம்) முத்து வெளியிட்ட செ... மேலும் பார்க்க

ராசிபுரம் அருகே தனியாா் பேருந்து - லாரி மோதல்: 3 போ் பலி

ராசிபுரம் அருகே தனியாா் பேருந்தின் டயா் வெடித்து எதிரே வந்த லாரி மீது மோதியதில் ஓட்டுநா்கள் உள்பட மூவா் உயிரிழந்தனா். 18 போ் படுகாயமடைந்தனா். ஆத்தூரிலிருந்து ராசிபுரம் நோக்கி தனியாா் பேருந்து வந்து க... மேலும் பார்க்க