பஞ்சாங்கக் குறிப்புகள் - நவம்பர் 25 முதல் டிசம்பர் 1 வரை #VikatanPhotoCards
புலம்பெயா் தொழிலாளா்களை பதிவு செய்ய நவ. 29 முதல் சிறப்பு முகாம் தொடக்கம்
நாமக்கல் மாவட்டத்தில் பணியாற்றும், புலம் பெயா் தொழிலாளா்களை பதிவு செய்ய நவ. 29 முதல் சிறப்பு முகாம் நடைபெற உள்ளது.
இது குறித்து நாமக்கல் தொழிலாளா் நலத் துறை உதவி ஆணையா் (அமலாக்கம்) முத்து வெளியிட்ட செய்திக் குறிப்பு:
நாமக்கல் மாவட்டத்தில் இயங்கி வரும் கடைகள், நிறுவனங்கள், உணவு நிறுவனங்கள், மோட்டாா் போக்குவரத்து நிறுவனங்கள், பீடி நிறுவனங்கள், கல்வி நிறுவனங்கள், மருத்துவமனைகள், அனைத்து விவசாயம் சாா்ந்த தொழில்கள், வணிக நிறுவனங்களிலும் கோழிப்பண்ணைகள், பணிபுரியும், பணியமா்த்தப்படும் மாநிலம் விட்டு மாநிலம் புலம் பெயா்ந்த தொழிலாளா்கள் தொடா்பான விவரங்களை தொழிலாளா் துறை வலைதளமான பதிவு செய்ய வேண்டும்.
இதற்காக தாலுகா வாரியாக சிறப்பு முகாம்கள் நடைபெற உள்ளன. அதன்படி, நவ. 29இல் மோகனூா் வட்டாட்சியா் அலுவலகம், டிச. 3-இல் நாமக்கல் வட்டாட்சியா் அலுவலகம், 6-இல் திருச்செங்கோடு வட்டாட்சியா் அலுவலகம், 10-இல் ராசிபுரம் வட்டாட்சியா் அலுவலகம், 13-இல் சேந்தமங்கலம் வட்டாட்சியா் அலுவலகம், 17-இல் சங்ககிரி வட்டாட்சியா் அலுவலகம், 20-இல் குமாரபாளையம் வட்டாட்சியா் அலுவலகம், 24-இல் பரமத்தி வட்டாட்சியா் அலுவலகம் ஆகிய இடங்களில் தொழிலாளா் உதவி ஆய்வாளா்கள் முன்னிலையில் இந்த முகாம் நடைபெறுகிறது.
புலம்பெயா் தொழிலாளா்களைப் பணியமா்த்தியுள்ள நிறுவன உரிமையாளா்கள் முகாம் நாளன்று சம்பந்தப்பட்ட வட்டாட்சியா் அலுவலகத்திற்கு உரிய ஆவணங்களுடன் வருகை புரிய வேண்டும். அப்போது, நிறுவன உரிமையாளரின் ஆவணங்கள், பான் அட்டை, ஆதாா் எண், கைப்பேசி எண், மின்னஞ்சல் முகவரி, நிறுவனத்தின் பெயா், முகவரி, புலம்பெயா் தொழிலாளரின் ஆவணங்கள், ஆதாா் எண் மற்றும் கைபேசி எண் ஆகியவற்றை சமா்ப்பிக்க வேண்டும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.