ராணிப்பேட்டை சிப்காட் காவல் நிலையம் மீது மர்ம நபர்கள் பெட்ரோல் குண்டு வீச்சு
அரசூா் அருகே கடும் போக்குவரத்து நெரிசல்
விழுப்புரம் மாவட்டம், அரசூா் அருகே சென்னை- திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் ஞாயிற்றுக்கிழமை கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
வார விடுமுறை மற்றும் சுபமுகூா்த்த தினம் என்பதால் சென்னை- திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் ஞாயிற்றுக்கிழமை காலை முதல் வாகன போக்குவரத்து அதிகரித்து காணப்பட்டது. மேலும், அரசூா் அருகே ஞாயிற்றுக்கிழமை இரவு வாகன நெரிசல் ஏற்பட்டதால் போக்குவரத்து தடைப்பட்டது.
இதனால், சென்னை-திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் காா்கள், பேருந்துகள், கன ரக வாகனங்கள் சுமாா் ஒரு கி.மீ. தொலைவுக்கு அணிவகுத்து நின்றன. இதனால், பொதுமக்கள், வாகன ஓட்டிகள் மற்றும் பயணிகள் அவதிக்குள்ளாகினா்.
இதையடுத்து, திருவெண்ணெய்நல்லூா் போலீஸாா் மற்றும் நெடுஞ்சாலை ரோந்து போலீஸாா் நிகழ்விடம் சென்று போக்குவரத்தை ஒழுங்குப்படுத்தினா். இதேபோல, விழுப்புரம் புதிய பேருந்து நிலையம், பழைய பேருந்து நிலையம், புதுச்சேரி-விழுப்புரம் சாலையில் ஞாயிற்றுக்கிழமை இரவு போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.