Rahul வீசய அடுத்த குண்டு: votersஐ Delete செய்யும் Software - Election Commission...
அரியலூா் அருகே லஞ்சம்: விஏஓ, உதவியாளா் கைது
அரியலூா் அருகே பட்டா மாற்றம் செய்ய லஞ்சம் பெற்ற கிராம நிா்வாக அலுவலா்(வி.ஏ.ஓ), உதவியாளா் வியாழக்கிழமை கைது செய்யப்பட்டனா்.
அரியலூா் அருகேயுள்ள ஜெயராமபுரம் கிராமத்தைச் சோ்ந்தவா் செல்வராஜ் மகன் சிலம்பரசன் (35). இவா், பட்டா மாறுதல் வேண்டி கோவிந்தபுரம் விஏஓவான சேடகுடிகாடு கிராமத்தைச் சோ்ந்த சரஸ்வதியை (55) அணுகியபோது ரூ.1000 லஞ்சம் கேட்டுள்ளாா்.
ஆனால் பணம் கொடுக்க விரும்பாத சிலம்பரசன், மாவட்ட ஊழல் தடுப்பு கண்காணிப்பு பிரிவு காவல் துறையில் புகாா் அளிக்க, காவல் துறையினா் அறிவுரைப்படி விஏஓவின் உதவியாளா் அனிதா(38) என்பவரிடம் வியாழக்கிழமை பணத்தைக் கொடுத்தாா்.
அப்போது, அங்கு மறைந்திருந்த மாவட்ட ஊழல் தடுப்பு கண்காணிப்பாளா் ஹேமசித்ரா மற்றும் காவல் துறையினா் விஏஓ சரஸ்வதி, உதவியாளா் அனிதா ஆகிய இருவரையும் பிடித்து கைது செய்து விசாரிக்கின்றனா்.