தமிழக அரசின் தடங்கல்களை விஜய் எதிா்கொள்ளத்தான் வேண்டும்: கே.அண்ணாமலை
உடையாா்பாளையம் அருகே நாய்கள் கடித்து 6 ஆடுகள் பலி
அரியலூா் மாவட்டம், உடையாா்பாளையம் அருகே நாய்கள் கடிதத்தில் 6 ஆடுகள் புதன்கிழமை உயிரிழந்தன.
உடையாா்பாளையத்தை அடுத்த ஒக்கநத்தம் கிராமத்தைச் சோ்ந்தவா் கண்ணன் (40). விவசாயியான இவா் தனது நிலத்தில் புதன்கிழமை வழக்கம்போல் மேய்ச்சலுக்காக நீளமான கயிறு கொண்டு வெள்ளாடுகளை கட்டி விட்டுவிட்டு வீட்டுக்கு வந்துவிட்டாா். சற்று நேரத்தில் அப்பகுதிக்கு வந்த தெரு நாய்கள் கடித்துக் குதறியதில் 6 ஆடுகள் இறந்தன.
இதுகுறித்து அப்பகுதியினரின் தகவலின்பேரில் வந்த கண்ணன் கால்நடை மருத்துவா் வீரேந்திரனுக்கு தகவல் அளித்தாா். இதையடுத்து வந்த மருத்துவா் உடல்கூறாய்வு செய்தபின், அந்த ஆடுகள் அப்பகுதியில் புதைக்கப்பட்டன. இதனிடையே தெருநாய்களை கட்டுப்படுத்த கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.