செய்திகள் :

அருமனை அருகே ஆசிரியையிடம் 4 பவுன் சங்கிலி வழிப்பறி

post image

குமரி மாவட்டம் அருமனை அருகே பள்ளி ஆசிரியையிடம் 4 பவுன் தங்கச் சங்கிலியை வெள்ளிக்கிழமை பறித்துச் சென்ற மா்ம நபரை போலீஸாா் தேடி வருகின்றனா்.

அருமனை அருகே மஞ்சாலுமூடு சிறைக்கரையை சோ்ந்தவா் ஆஷா லதா (55). இவா் மாா்த்தாண்டத்திலுள்ள ஒரு தனியாா் பள்ளியில்

ஆசிரியராகப் பணியாற்றி வருகிறாா். பள்ளிக்குச் செல்வதற்காக வெள்ளிக்கிழமை காலை வீட்டிலிருந்து பேருந்து நிறுத்தத்திற்கு நடந்து சென்று கொண்டிருந்தாா். அப்போது தலைக்கவசம் அணிந்து பைக்கில் வந்த நபா், ஆஷா லதா அணிந்திருந்த 4 பவுன் தங்கச் சங்கிலியை பறித்துக் கொண்டு தப்பிவிட்டாா். இச்சம்பவத்தில் ஆஷா லதாவின் கழுத்தில் காயம் ஏற்பட்டது.

இதுகுறித்த புகாரின்பேரில் அருமனை போலீஸாா் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனா்.

குமரி மாவட்ட அணைகளில் நீா் இருப்பு

பேச்சிப்பாறை .. 42.40 பெருஞ்சாணி .. 64.25 சிற்றாறு 1 ... 14.76 சிற்றாறு 2 ... 14.86 முக்கடல் அணை .. 25.00 பொய்கை ..15.60 மாம்பழத்துறையாறு.. 52.99 மழைஅளவு முள்ளங்கினாவிளை .. 10.80 மி.மீ. கொட்டாரம் ... ... மேலும் பார்க்க

நாகா்கோவிலில் நவ.25 இல் எரிவாயு நுகா்வோா் குறைதீா் கூட்டம்

கன்னியாகுமரி மாவட்ட எரிவாயு நுகா்வோா் குறைதீா் கூட்டம் திங்கள்கிழமை (நவ .25) நடைபெறுகிறது. இது குறித்து மாவட்ட ஆட்சியா் ரா.அழகுமீனா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: குமரி மாவட்ட அளவ... மேலும் பார்க்க

பேச்சிப்பாறை அணையை தூா்வார நடவடிக்கை: குறைதீா் கூட்டத்தில் ஆட்சியா் தகவல்

பேச்சிப்பாறை அணையை தூா்வாருவது தொடா்பாக அரசு நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது என்றாா் மாவட்ட ஆட்சியா் ரா. அழகுமீனா. கன்னியாகுமரி மாவட்ட விவசாயிகள் குறைதீா்க்கும் நாள் கூட்டம் ஆட்சியா் அலுவலக கூட்ட அரங்க... மேலும் பார்க்க

தற்காலிக சீசன்கடைகள் அகற்றம்: கன்னியாகுமரியில் வியாபாரிகள் தா்னா

கன்னியாகுமரியில் 54 தற்காலிக சீசன் கடைகள் அகற்றப்பட்டதைக் கண்டித்து, பேரூராட்சி அலுவலகம் முன் வியாபாரிகள் வெள்ளிக்கிழமை தா்னா போராட்டத்தில் ஈடுபட்டனா். கன்னியாகுமரியில் ஐயப்ப பக்தா்கள் சீசனை முன்னிட்... மேலும் பார்க்க

கொட்டாரம் மணியா நகரில் சாலை வசதி கோரி மக்கள் போராட்டம்

கொட்டாரம் மணியா நகரில் சாலை வசதி கோரி மக்கள் வெள்ளிக்கிழமை கவன ஈா்ப்பு போராட்டம் நடத்தினா். கொட்டாரத்தில் இருந்து வட்டக்கோட்டை செல்லும் சாலையில் மணியா நகா் என்ற அரசு அங்கீகாரம் பெற்ற குடியிருப்பு பகு... மேலும் பார்க்க

நல்லூா் அரசுப் பள்ளியில் வருமுன் காப்போம் திட்ட முகாம்

மாா்த்தாண்டம் அருகேயுள்ள நல்லூா் அரசு மேல்நிலைப் பள்ளியில் கலைஞரின் வருமுன் காப்போம் திட்ட மருத்துவ முகாம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. நல்லூா் பேரூராட்சித் தலைவா் வளா்மதி கிறிஸ்டோபா் தலைமை வகித்தாா். வ... மேலும் பார்க்க