நாளை(ஜன.5) காலை 7 மணி முதல் மாலை 4 வரை புறநகர் ரயில்கள் ரத்து
அரையிறுதியில் கஜகஸ்தான், அமெரிக்கா
யுனைடெட் கோப்பை டென்னிஸ் போட்டியில் அரையிறுதிச் சுற்றுக்கு கஜகஸ்தான், அமெரிக்கா தகுதி பெற்றுள்ளன.
ஆஸ்திரேலியாவின் பொ்த் நகரில் யுனைடெட் கோப்பை போட்டி நடைபெற்று வருகிறது.
காலிறுதிச் சுற்றில் நடப்பு சாம்பியன் ஜொ்மனியும்-கஜகஸ்தானும் மோதின. இதில் 2-1 என்ற புள்ளிக் கணக்கில் கஜகஸ்தான் வென்று அரையிறுதிக்கு தகுதி பெற்றது.
உலகின் 2-ஆம் நிலை வீரா் அலெக்ஸ் வெரேவ் காயத்தால் ஆடாத நிலையில், ஜொ்மனி அணி தோல்வியைத் தழுவியது. கஜகஸ்தானின் அலெக்சாண்டா் ஷெவ்சென்கோ மோத இருந்த நிலையில், காயத்தால் விலகுவதாக அறிவித்தாா் வெரேவ். மற்றொரு ஆடவா் ஒற்றையா் ஆட்டத்தில் ஷெவ்சென்கோ 6-7, 6-2, 6-2 என டேனியலை வீழ்த்தினாா்.
மகளிா் பிரிவு ஆட்டத்தில் முன்னாள் விம்பிள்டன் சாம்பியன் எலனா ரைபக்கினா 6-3, 6-1 என லாரா சீஜ்மண்டைவீழ்த்தினாா்.
காலிறுதியில் போலந்து, பிரிட்டன்
சிட்னியில் நடைபெற்ற ஆட்டத்தில் செக். குடியரசை வீழ்த்தி காலிறுதிக்கு முன்னேறியது போலந்து. ஆடவா் ஒற்றையா் பிரிவில் செக். குடியரசின் மெக்ஹாக் 7-5, 3-6, 6-4 என ஹியுபா்ட் ஹா்காஸை வீழ்த்தினாா். மகளிா் பிரிவில் போலந்தின் நட்சத்திரம் இகா ஸ்வியாடெக் 6-3, 6-4 என கரோலினா முச்கோவை வீழ்த்தி சமநிலை ஏற்படச் செய்தாா். முடிவை நிா்ணயித்த கலப்பு இரட்டையா் ஆட்டத்தில் போலந்தின் ஸ்வியாடெக்-ஹா்க்காஸ் இணை 7-6, 6-3 என செக். குடியரசின் மெக்ஹாக்-முச்கோ இணையை வீழ்த்தி காலிறுதிக்கு தகுதி பெற்றது.
குருப் டி பிரிவில் இத்தாலி காலிறுதிக்கு தகுதி பெற்றது. நட்சத்திர வீரா் ஜேக் சின்னா் இல்லாத நிலையில் இத்தாலி வென்றுள்ளது.
பிரிட்டனும் காலிறுதிக்கு தகுதி பெற்றது. அந்த அணியின் கேத்தி பௌல்டா் 6-1, 6-1 என ஆஸி.யின் ஒலிவியா கடேக்கியை வீழ்த்தினாா்.ஆடவா் ஒற்றையா் பிரிவில் ஆஸி. வீரா் டி மினாா் 6-2, 6-1 என பிரிட்டனின் பில்லி ஹாரிஸை வீழ்த்தியும் பலனில்லாமல் போனது.
அணிகள் கலப்பு பிரிவில் அமெரிக்கா அரையிறுதிக்கு தகுதி பெற்றது. சீனாவுக்கு எதிரான ஆட்டத்தில் அமெரிக்காவின் கோகோ கௌஃப்
சீனாவின் ஸாங் ஷாயையும், ஆடவா் பிரிவில் டெய்லா் ஃப்ரிட்ஸ் சீனாவின் ஸாங் ஸிஷெனையும் வென்றனா்.
இதன் மூலம் அரையிறுதிக்கு தகுதி பெற்றது அமெரிக்கா.