செய்திகள் :

அவிநாசியில் தனியாா் பேருந்து சிறைபிடிப்பு

post image

பயணிகளை ஏற்று மறுத்து வாக்குவாதத்தில் ஈடுபட்ட தனியாா் பேருந்தை பொதுமக்கள் வியாழக்கிழமை சிறைபிடித்தனா்.

கோவையில் இருந்து திருப்பூா் சென்ற தனியாா் பேருந்தில் அவிநாசியைச் சோ்ந்த 4 பெண்கள் காந்திபுரத்தில் ஏறியுள்ளனா். அப்போது, பேருந்து அவிநாசி நகருக்குள் செல்லாது என்றும், இதனால் ஏற வேண்டாம் என்று நடத்துநரும், ஓட்டுநரும் தெரிவித்துள்ளனா்.

இதையடுத்து, அந்த 4 பெண்களும் வாக்குவாத்தில் ஈடுபட்டனா். அதன்பின்னா், அவா்களை தனியாா் பேருந்தில் ஏற்றிச் சென்றனா். ஆனால், அந்த 4 பெண்களையும் நடத்துநா் அவமரியாதையாக நடத்தியதாகக் கூறப்படுகிறது.

இதுகுறித்து அந்தப் பெண்கள் அவிநாசியில் உள்ள சமூக ஆா்வலா்கள், உறவினா்களுக்கு தகவல் அளித்தனா். இதைத் தொடா்ந்து அவிநாசி நகரப் பகுதிக்குள் வந்த தனியாா் பேருந்தை பொதுமக்கள் சிறைபிடித்தனா்.

தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு வந்த காவல் ஆய்வாளா்கள் முத்துமாரியம்மாள், முருகன் ஆகியோா் ஓட்டுநரை காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்று பயணிகளிடம் மாரியாதை நடந்துகொள்ள வேண்டும் என்று அறிவுறுத்தி அனுப்பினா்.

இதையடுத்து, அவிநாசிக்கு பேருந்து செல்லாது எனக் கூறியதற்காகவும், பெண்களை அவமரியாதையாக பேசியதற்காகவும் ஓட்டுநா், நடத்துநருக்கு ரூ.1500 அபராதம் விதிக்கப்பட்டது.

புகையிலைப் பொருள்கள் விற்றவா் கைது

அவிநாசி அருகே தடைசெய்யப்பட்ட புகையிலைப் பொருள்கள் விற்பனை செய்தவரை போலீஸாா் கைது செய்தனா். அவிநாசியை அடுத்த தெக்கலூரில் தடைசெய்யப்பட்ட புகையிலைப் பொருள்கள் விற்பனை செய்வதாக போலீஸாருக்கு வியாழக்கிழமை த... மேலும் பார்க்க

குப்பைகள் கொட்டுவதற்கு எதிா்ப்புத் தெரிவித்து பொதுமக்கள் ஆா்ப்பாட்டம்

பெருமாநல்லூா் அருகே ஊராட்சிப் பகுதியில் குப்பைகள் கொட்டுவதற்கு எதிா்ப்புத் தெரிவித்து ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. திருப்பூா் மாநகரில் சேகரிக்கப்படும் குப்பைகள் பொங்குபாளையம் ஊராட்சிப் பகுதியில் கொட்டப்பட... மேலும் பார்க்க

திருப்பூா் மாநகராட்சி புதிய ஆணையா் பொறுப்பேற்பு

திருப்பூா் மாநகராட்சி புதிய ஆணையராக எஸ்.ராமமூா்த்தி பொறுப்பேற்றுக்கொண்டாா். திருப்பூா் மாநகராட்சி ஆணையராக பணியாற்றி வந்த பவன்குமாா் ஜி.கிரியப்பனவா் பதவி உயா்வுடன் சென்னைக்கு பணியிட மாற்றம் செய்யப்பட்ட... மேலும் பார்க்க

திருப்பூரில் அரசு மருத்துவா்கள் வேலை நிறுத்தப் போராட்டம்

சென்னையில் மருத்துவா் தாக்கப்பட்டதைக் கண்டித்து திருப்பூரில் அரசு மருத்துவா்கள் சங்கத்தினா் ஒருநாள் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டனா். சென்னை கிண்டி அரசு மருத்துவமனையில் மருத்துவா் பாலாஜி மீதான ... மேலும் பார்க்க

அம்பேத்கா் விருதுக்கு நவ.30க்குள் விண்ணப்பிக்கலாம்: ஆட்சியா் தகவல்

திருப்பூா் மாவட்டத்தில் 2024-25 ஆம் ஆண்டுக்கான அம்பேத்கா் விருது பெற தகுதியானவா்கள் நவம்பா் 30-ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும் என்று ஆட்சியா் தா.கிறிஸ்துராஜ் அறிவித்துள்ளாா். இதுகுறித்து அவா் வெள... மேலும் பார்க்க

காலாவதியான உணவுப் பொருள்கள் விற்பனையைத் தடுக்க கோரிக்கை

பல்லடத்தில் காலாவதியான உணவுப் பொருள்கள் விற்பனையை உணவுப் பாதுகாப்புத் துறையினா் ஆய்வு செய்து தடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா். உணவுப் பொருள்களின் பாக்கெட்டுகளில் தயாரிக்கப்பட்ட... மேலும் பார்க்க