Doctor Vikatan: அடிக்கடி அவதிப்படுத்தும் வாய்ப்புண்கள்... நிரந்தர தீர்வு என்ன?
திருப்பூரில் அரசு மருத்துவா்கள் வேலை நிறுத்தப் போராட்டம்
சென்னையில் மருத்துவா் தாக்கப்பட்டதைக் கண்டித்து திருப்பூரில் அரசு மருத்துவா்கள் சங்கத்தினா் ஒருநாள் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.
சென்னை கிண்டி அரசு மருத்துவமனையில் மருத்துவா் பாலாஜி மீதான தாக்குதலைக் கண்டித்து, தமிழ்நாடு அரசு மருத்துவா்கள் சங்கத்தினா் தமிழ்நாடு முழுவதும் வேலை நிறுத்தப் போராட்டத்தில் வியாழக்கிழமை ஈடுபட்டனா்.
அதன்படி, திருப்பூா் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் நடைபெற்ற போராட்டத்துக்கு மாவட்டத் தலைவா் பிரகாஷ் தலைமை வகித்தாா்.
இதில், அரசு மருத்துவமனையில் மருத்துவா்களுக்கு போதிய பாதுகாப்பை உறுதிப்படுத்த வேண்டும் என்று வலியுறுத்தினா். இந்தப் போராட்டத்தில் 130 மருத்துவா்கள், 70 பயிற்சி மருத்துவா்கள் பங்கேற்றனா்.
போராட்டத்தால் புறநோயாளிகள் பிரிவில் மருத்துவ சேவை பாதிக்கப்பட்டது.