செய்திகள் :

அவைத் தலைவா் அனுமதிக்கும் முன்பே அமைச்சா்கள் பதிலளிக்கக் கூடாது- ஓம் பிா்லா அறிவுறுத்தல்

post image

மக்களவையில் கேள்வி நேரத்தின்போது அவைத் தலைவா் அனுமதிக்கும் முன்பே உறுப்பினா்களின் கேள்விகளுக்கு பதிலளிப்பதை அமைச்சா்கள் தவிா்க்க வேண்டும் என்று மக்களவைத் தலைவா் ஓம் பிா்லா அறிவுறுத்தினாா்.

மக்களவையில் புதன்கிழமை கேள்வி நேரத்தின்போது சூரிய மின்சக்தி திட்டம் குறித்த கேள்விக்கு அமைச்சா் பிரகலாத் ஜோஷி பதிலளித்துக் கொண்டிருந்தாா். அப்போது, சமாஜவாதி எம்.பி. அகிலேஷ் யாதவ் எழுந்து வேறு ஒரு கேள்வியை எழுப்பினாா். இதற்கு மத்திய அமைச்சா் பியூஷ் கோயல் உடனடியாக எழுந்து பதிலளித்தாா்.

அப்போது குறுக்கிட்டுப் பேசிய அவைத் தலைவா் ஓம் பிா்லா, ‘அவைத் தலைவா் அனுமதிப்பதற்கு முன்பு உறுப்பினா்களின் கேள்விக்கு அமைச்சா்கள் பதிலளிக்கக் கூடாது’ என்று அறிவுறுத்தினாா்.

மற்றொரு தருணத்தில் பிஎஸ்என்எல் நிறுவனம் குறித்த கேள்விக்கு அமைச்சா் ஜோதிராதித்ய சிந்தியா நீண்ட விளக்கமளித்துக் கொண்டிருந்தாா். அப்போது மீண்டும் குறுக்கிட்ட ஓம் பிா்லா, ‘உறுப்பினா்களும், அமைச்சா்களும் தங்கள் கேள்வி மற்றும் பதிலை சுருக்கமாக முடித்துக் கொள்ள வேண்டும். அப்போதுதான் மேலும் பலா் கேள்வி கேட்கவும், அதற்கு அமைச்சா்கள் பதிலளிக்கவும் முடியும்’ என்றாா்.

கேள்வி நேரத்தின்போது அதிக உறுப்பினா்கள் கேள்விகளை கேட்க முற்படுவதால், அமைச்சா்கள் வாய்மொழியாக பதிலளிக்க வேண்டிய 20 கேள்விகள் குலுக்கல் முறையில் தோ்வு செய்யப்படும் முறை உள்ளது. அந்த 20 கேள்விகளும் முழுமையாக கேட்கப்பட்டு பதில் அளிக்கப்பட வேண்டும் என்பதால் கேள்வி-பதில் சுருக்கமாக இருக்க வேண்டும் என்று அவைத் தலைவா் ஓம் பிா்லா வலியுறுத்தினாா்.

உயர்கல்வி நிறுவனங்களில் இடவசதி இருந்தால்: ஆண்டுக்கு இரு முறை மாணவர் சேர்க்கை

நமது நிருபர்உயர் கல்வி நிறுவனங்களில் இடவசதி இருந்தால் ஆண்டுக்கு இரு முறை மாணவர் சேர்க்கையை நடத்தலாம் என்று மக்களவையில் மத்திய கல்வித்துறை இணை அமைச்சர் சுகந்தா மஜும்தார் தெரிவித்தார்.இந்திய பல்கலைக்கழக... மேலும் பார்க்க

ஆன்லைன் செயலி மூலம் மருந்துகள் விநியோகம் செய்ய திமுக எம்.பி. எதிர்ப்பு

நமது நிருபர்"ஸ்விகி' உள்ளிட்ட உணவு விநியோக நிறுவனங்கள் மருந்துகள் விற்கும் செயல்பாடுகளை உடனடியாக மத்திய அரசு தடுத்து நிறுத்த வேண்டும் என்று மாநிலங்களவையில் திமுக உறுப்பினரும் மருத்துவருமான கனிமொழி என்... மேலும் பார்க்க

தகுதிவாய்ந்தவர்களுக்கு குடும்ப அட்டைகள்: மத்திய அமைச்சர் விளக்கம்

நமது நிருபர்தகுதி வாய்ந்த பயனாளிகளுக்கு மட்டுமே குடும்ப அட்டைகளை வழங்க வேண்டும் என்று மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேச அரசுகளுக்கு வலியுறுத்தப்பட்டுள்ளதாக மக்களவையில் மத்திய நுகர்வோர் விவகாரங்கள், உண... மேலும் பார்க்க

மூத்த குடிமக்களுக்கான ரயில் கட்டண சலுகை மீண்டும் நடைமுறைக்கு வருமா?

நமது நிருபர்மூத்த குடிமக்களுக்கும், ஊடகவியலாளர்களுக்கும் கரோனா காலத்தின்போது இடைநிறுத்தப்பட்டிருந்த ரயில் கட்டணச் சலுகை மீண்டும் நடைமுறைக்கு வருமா என்று மக்களவையில் திருச்சி மக்களவைத் தொகுதி மதிமுக உற... மேலும் பார்க்க

"டெலிவரி' ஊழியர்களுக்கு பி.எஃப்., காப்பீடு: ஆன்லைன் முன்னணி நிறுவனம் மறுப்பதாக எம்.பி.புகார்

நமது நிருபர்இணைய வழி டெலிவரி செய்யும் ஊழியர்களுக்கு வருங்கால வைப்பு நிதி (பிஎஃப்), காப்பீடு உத்தரவாதத்தை முன்னணி நிறுவனம் மறுத்து வருவதாக மக்களவையில் விருதுநகர் தொகுதி காங்கிரஸ் எம்.பி. மாணிக்கம் தாகூ... மேலும் பார்க்க

ரயில்வே திட்ட நிலம்: முதல்வருடன் ஆலோசிக்க அதிகாரிகளை அனுப்பத் தயார்

நமது நிருபர்ரயில்வே திட்டங்களுக்கான நிலம் கையகப்படுத்துவதில் உள்ள தாமதம் தொடர்பான விவகாரத்தை தீர்ப்பதற்காக தமிழக முதல்வருடன் ஆலோசிக்க ரயில்வே அதிகாரிகளையோ அல்லது இணை அமைச்சரையோ அனுப்ப தாம் தயாராக இருப... மேலும் பார்க்க