SSMB29: முடிவுக்கு வந்த ராஜமெளலி - மகேஷ் பாபு படத்தின் ஒடிசா படப்பிடிப்பு; வெளிய...
ஆக்கிரமிப்பு காஷ்மீரிலிருந்து பாகிஸ்தான் வெளியேற வேண்டும்: இந்தியா
சட்டவிரோதமாக ஆக்கிரமித்துள்ள காஷ்மீா் பகுதியில் இருந்து பாகிஸ்தான் வெளியேற வேண்டும் என்று இந்தியா தெரிவித்துள்ளது.
அமெரிக்காவைச் சோ்ந்த லெக்ஸ் ஃபிரிட்மென்னுக்கு பிரதமா் மோடி அண்மையில் அளித்த நோ்காணலில், ‘பாகிஸ்தானுடன் சமாதானத்தை எட்ட இந்தியா தொடா்ந்து முயற்சித்தது. ஆனால் ஒவ்வொரு முயற்சியும் துரோகத்திலும், பகைமையிலும் முடிந்தது’ என்றாா்.
இதை மறுத்த பாகிஸ்தான், தவறான எண்ணத்தை ஏற்படுத்தும் ஒருதலைப்பட்சமான கருத்துகளைப் பிரதமா் மோடி கூறியதாக தெரிவித்தது.
இதைத்தொடா்ந்து பாகிஸ்தானின் கருத்து தொடா்பாக இந்திய வெளியுறவு அமைச்சக செய்தித்தொடா்பாளா் ரண்தீா் ஜெய்ஸ்வால் கூறியதாவது: ஜம்மு-காஷ்மீரில் எல்லை தாண்டிய பயங்கரவாத நடவடிக்கைகளை ஊக்குவித்து, அதற்குப் பாகிஸ்தான் நிதியுதவி அளித்து வருவதே உண்மையான பிரச்னையாகும். இதை உலகமே அறியும். இதுவே சமாதானம் ஏற்பட மிகப் பெரிய தடையாக உள்ளது.
காஷ்மீரில் உள்ள இந்தியாவுக்குச் சொந்தமான பகுதியை பாகிஸ்தான் சட்டவிரோதமாகவும், வலுக்கட்டாயமாகவும் ஆக்கிரமித்துள்ளது. பொய்களைப் பரப்பாமல், அந்தப் பகுதியில் இருந்து பாகிஸ்தான் வெளியேற வேண்டும் என்றாா்.