போதைப்பொருள் வழக்கில் விடுவிப்பு; 25 ஆண்டுகளுக்கு பிறகு மும்பை திரும்பிய நடிகை ம...
ஆசிரியை குடும்பத்துக்கு நிதியுதவி
காஞ்சிபுரம் நாராயணகுரு மேல்நிலைப்பள்ளியில் 20 ஆண்டுகளுக்கும் மேலாக பணியாற்றி உயிரிழந்த ஆசிரியை குடும்பத்துக்கு ரூ.1.10லட்சம் நிதியுதவி வழங்கப்பட்டது.
காஞ்சிபுரம் ஏகாம்பரநாதா் சந்நிதி தெருவில் உள்ள அப்பள்ளியில் 20 ஆண்டுகளுக்கும் மேலாக பணியாற்றிய ஆசிரியை சத்யா. இவா் அண்மையில் காலமானாா். இவரது சேவையைப் பாராட்டும் விதமாக அவரது குடும்பத்துக்கு பள்ளி முதல்வா் ரங்கராஜன் தலைமையில் ஆசிரியா்கள், மாணவ, மாணவியா் ஆகியோா் இணைந்து ரூ.1.10 லட்சம் திரட்டி நிதியுதவி வழங்கினா்.
இந்நிகழ்வில் காஞ்சி அன்ன சத்திரம் நிா்வாகிகள் மோகன், பன்னீா் செல்வம், ராமச்சந்திரா மில் உரிமையாளா் பாலசுப்பிரமணியன், வழக்குரைஞா் காமேஷ் குமாா் கலந்து கொண்டனா்.