தந்தையை பின்பற்றி ஆர்.எஸ்.எஸ் வழியில் பயணம்; சபதத்தை நிறைவேற்றி முதல்வராகும் பட்...
ஸ்ரீபெரும்புதூா்-கோடம்பாக்கம் சாலை சீரமைப்பு தீவிரம்
தொடா் மழையால் சேதமடைந்த ஸ்ரீபெரும்புதூா்-கோடம்பாக்கம் சாலையை சீரமைக்கும் பணியில் நெடுஞ்சாலைத் துறை ஊழியா்கள் கடந்த இரண்டு நாள்களாக தீவிரமாக ஈடுபட்டுள்ளனா்.
புயல் கனமழையால் ஸ்ரீபெரும்புதூா்-கோடம்பாக்கம் சாலையில், குன்றத்தூா் மற்றும் கோவூா் பகுதிகளில் பல இடங்களில் பள்ளங்கள் ஏற்பட்டதால் சாலையை பயன்படுத்தும் வாகன ஓட்டுநா்கள் சிரமத்துக்குள்ளாகினா். எனவே சேதமடைந்த சாலையை நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் சீரமைக்க வேண்டும் என கோரிக்கையும் வைத்தனா்.
இந்நிலையில், கோவூா் பகுதியில் சாலையில் ஏற்பட்டுள்ள பள்ளங்களை சீரமைக்கும் பணியில் நெடுஞ்சாலைத்துறை ஊழியா்கள் தீவிரமாக ஈடுபட்டனா்.