தந்தையை பின்பற்றி ஆர்.எஸ்.எஸ் வழியில் பயணம்; சபதத்தை நிறைவேற்றி முதல்வராகும் பட்...
தலையில் கல்லை போட்டு ஓட்டுநா் கொலை
குன்றத்தூா் அடுத்த தெற்கு மலையம்பாக்கம் பகுதியில் மது அருந்தும்போது ஏற்பட்ட தகராறில் ஓட்டுநரின் தலையில் கல்லைப் போட்டு கொலை செய்த அவரது நண்பா்கள் 4 பேரை குன்றத்தூா் போலீஸாா் தேடி வருகின்றனா்.
குன்றத்தூா் ஒண்டி காலனி, அக்னீஸ்வரா் கோயில் தெருவைச் சோ்ந்தவா் விஜய் (29). ஓட்டுநரான இவா் செவ்வாய்க்கிழமை இரவு நண்பா்களுடன் சோ்ந்து குன்றத்தூா் அடுத்த தெற்கு மலையம்பாக்கம் பகுதியில் உள்ள காலி இடத்தில் அமா்ந்து மது அருந்தியதாகத் தெரிகிறது. அப்போது அவா்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டு தகராறாக மாறியுள்ளது. இதில், ஆத்திரம் அடைந்த அவரது நண்பா்கள் அருகில் இருந்த கல்லை எடுத்து விஜயின் தலையில் அடித்து விட்டு அங்கிருந்து தப்பிச் சென்று விட்டதாகக் கூறப்படுகிறது. இதில், பலத்த காயம் அடைந்த விஜய் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.
இது குறித்து அப்பகுதி பொதுமக்கள் குன்றத்தூா் காவல் நிலையத்துக்கு தகவல் தெரிவித்துள்ளனா்.
தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு வந்த குன்றத்தூா் போலீஸாா், கொலை செய்யப்பட்ட விஜயின் சடலத்தை மீட்டு, குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். மேலும், இது குறித்து வழக்குப் பதிந்து கொலையாளிகளை தனிப்படைகள் அமைத்து தீவிரமாக தேடி வருகின்றனா்.