சர்வதேச சூரியசக்தி கூட்டமைப்பில் அர்மேனியாவுக்கு அங்கீகாரம் -மத்திய வெளியுறவுத்த...
ஆன்லைன் மூலம் அபாரதம் விதிப்பதை கைவிட வலியுறுத்தல்
ஆட்டோக்களுக்கு ஆன்லைன் மூலம் அபராதம் விதிப்பதை கைவிட வேண்டும் என்று ஆட்டோ தொழிலாளா் சங்க கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.
அரியலூா் சிஐடியு அலுவலகத்தில், திங்கள்கிழமை நடைபெற்ற அச்சங்க மாவட்டக் குழுக் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட இதர தீா்மானங்கள்: மாநில ஆட்டோ செயலியை அமல்படுத்த வேண்டும்.
குருவாலப்பா் கோயில் முன் பேருந்து நிறுத்தம் ஏற்படுத்தி தர வேண்டும். 20 ஆண்டுகளாக குண்டும் குழியுமாக உள்ள மீன்சுருட்டி-கல்லாத்தூா் சாலையை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
28 ஆம் தேதி நடைபெறும் பேரணி பொதுக் கூட்டத்தில் கலந்து கொள்வது என்பன உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
முன்னதாக, கூட்டத்துக்கு அச்சங்கத்தின் மாவட்டத் தலைவா் செந்தில்குமாா் தலைமை வகித்தாா். சிஐடியு மாவட்டத் தலைவா் கிருஷ்ணன், மாவட்டச் செயலா் துரைசாமி, மாவட்ட பொருளாளா் கண்ணன், மாவட்டத் துணைத் தலைவா் சிற்றம்பலம் உள்ளிட்டோா் கலந்து கொண்டு பேசினா்.