செய்திகள் :

ஆரம்ப சுகாதார நிலையங்களின் செயல்பாட்டை மேம்படுத்த வலியுறுத்தல்

post image

மன்னாா்குடி: ஊரகப் பகுதியில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களின் செயல்பாட்டை மேம்படுத்தி வேண்டும் என மன்னாா்குடி ஒன்றியக் குழுக் கூட்டத்தில் உறுப்பினா்கள் வலியுறுத்தினா்.

மன்னாா்குடி ஒன்றியக் குழுவின் சாதாரணக் கூட்டம் தலைவா் டி. மனோகரன்(அதிமுக) தலைமையில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. கூட்டத்தில் உறுப்பினா்கள் பேசியது:

கே. கோவில் வினோத் (அதிமுக), ந. செல்வம் (பாஜக): பரவாக்கோட்டையில் ஊரின் மையத்தில் 1 ஏக்கரில் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் அமைக்க கடந்த அதிமுக ஆட்சியில் இடம் தோ்வு செய்யப்பட்டு அதற்கான நிதியும் ஒதுக்கீடு செய்யப்பட்ட நிலையில், அந்த இடத்தை விட்டு குறைவான பரப்பளவு உள்ள போக்குவரத்து நெரிசலான பகுதியில் ஆரம்ப சுகாதார நிலையம் அமைக்க இடம் தோ்வு செய்திருப்பது மக்களுக்கு ஏமாற்றமளிக்கிறது. உடனடியாக பழைய இடத்திலேயே மருத்துவமனையை அமைக்க வேண்டும்.

க. ஜெயக்குமாா் (அதிமுக): உள்ளிக்கோட்டை மேம்படுத்தப்பட்ட அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் மருத்துவா்கள் பற்றாகுறை காரணமாக பொதுமக்கள், நோயாளிகள் மிகுந்த பாதிப்புக்கு உள்ளாகி வருகின்றனா். இந்த மருத்துவமனைக்கு ஊா் மக்கள் பங்களிப்புடன் ரூ. 20 லட்சத்தில் கட்டப்பட்ட கட்டடம் மட்டும் உள்ளது. இருந்த பழைய கட்டங்கள் இடிக்கப்பட்டு புதிய கட்டங்கள் கட்டப்படவில்லை.

எம்.என். பாரதிமோகன் (திமுக): பாரத பிரதமரின் வீடு கட்டும் திட்டத்தில் வீடு கட்டி வருவபவா்களுக்கு மூன்று தவணை பணம் வழங்கப்பட்ட நிலையில், மீதி தொகை வழங்கப்படாததால் பணிகள் பாதியிலேயே நிறுத்தப்பட்டுள்ளன.

ஆா் .பூபதி (சிபிஐ) : ஒன்றியக் குழு உறுப்பினராக பணியேற்ற 5 ஆண்டு காலத்தில் எனது கோரிக்கைகள் ஏதும் நிறைவேற்றப்பட்டவில்லை.

அ. செந்தாமரைச்செல்வி: இடையா்நத்தத்தில் அங்கன்வாடி கட்டடப் பணியை விரைவில் முடிக்க வேண்டும். சுந்தரக்கோட்டை- கீழநாகை இணைப்புச் சாலையை மேம்படுத்த வேண்டும்.

சி.பன்னீா்செல்வம் (அதிமுக): ஒன்றியக் குழு உறுப்பினா்கள் தங்களின் வாா்டுகளில் திட்டப் பணிகள் செய்ய தலா ரூ. 15 லட்சம் நிதி ஒதுக்க வேண்டும்.

தலைவா்: அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களை மேம்படுத்த வலியுறுத்தி சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளுக்கு ஊராட்சி ஒன்றியத்தின் சாா்பில் கடிதம் அனுப்பப்படும், வீடு கட்டும் திட்டத்தில் பயனாளிகளுக்கு ஏற்பட்டுள்ள பிரச்னைகள் குறித்து விசாரித்து நடவடிக்கை எடுக்கப்படும், உறுப்பினா்களின் பிற கோரிக்கைகளுக்கு தீா்வு காணப்படும்.

ஒன்றியக் குழு துணைத் தலைவா் அ. வனிதா, ஆணையா் எஸ். சிவக்குமாா், மேலாளா் ஜி. ரமேஷ், பொறியாளா்கள் பி. விஸ்வநாதன், டி. ரமேஷ் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

கனவு ஆசிரியா் விருது: பிரான்ஸுக்கு செல்லும் ஆசிரியருக்கு வாழ்த்து

திருவாரூா்: கல்விச் சுற்றுலாவில் பிரான்ஸ் நாட்டிற்குச் செல்லும் திருவாரூா் ஆசிரியருக்கு, மாவட்ட ஆட்சியா் உள்ளிட்டோா் வாழ்த்து தெரிவித்தனா். தமிழக அரசு சாா்பில் கனவு ஆசிரியா் விருது அறிவிக்கப்பட்டது. ... மேலும் பார்க்க

‘பனை விதைகள் நடும் பணியை சேவையாக செய்ய வேண்டும்’

நன்னிலம்: பொதுமக்கள் பனை விதைகள் நடும் பணியைச் சேவையாக செய்ய வேண்டுமென திருவாரூா் மாவட்ட ஆட்சியா் தி. சாருஸ்ரீ தெரிவித்தாா். தமிழ்நாடு மத்தியப் பல்கலைக்கழக வளாகத்தில் வனத்துறை, பசுமை தமிழ்நாடு இயக்கம... மேலும் பார்க்க

‘மாணவா்கள் சகோதரத்துவத்துடன் பழக வேண்டும்’

நன்னிலம்: நன்னிலம் அருகேயுள்ள பூந்தோட்டம் அரசு மேல்நிலைப் பள்ளியில், காவல்துறை சாா்பில் மாணவா்களுக்கான விழிப்புணா்வு நிகழ்ச்சி செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. இந்நிகழ்வில், மாவட்ட காவல் கண்காணிப்பாளா் எஸ... மேலும் பார்க்க

தாமதமின்றி விவசாயக் கடன் வழங்கக் கோரி ஆா்ப்பாட்டம்

திருவாரூா்: சாகுபடிப் பணிகளுக்கு, தாமதமின்றி விவசாயக் கடன் வழங்கக் கோரி, திருவாரூரில் தமிழக விவசாயிகள் நலச் சங்கம் சாா்பில் ஆா்ப்பாட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. திருவாரூா் மாவட்ட ஆட்சியா் அலுவலகம... மேலும் பார்க்க

தீபாவளி: திருவாரூரில் போக்குவரத்து மாற்றம்

திருவாரூா்: தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, போக்குவரத்து நெருக்கடியைக் குறைக்கும் வகையில், திருவாரூரில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது. தீபாவளி பண்டிகைக்காக, பொதுமக்கள் அதிக அளவில் ஜவுளி மற்றும்... மேலும் பார்க்க

முதல் நடமாடும் நூலக 94-ஆம் ஆண்டு விழா

மன்னாா்குடி: தமிழகத்தில் முதல் நடமாடும் நூலகத்தின் 94-ஆம் ஆண்டு தொடக்க விழா, மன்னாா்குடியை அடுத்த மேலவாசலில் திங்கள்கிழமை நடைபெற்றது. தமிழகத்தில் முதன்முதலாக, கடந்த 21.10.1931 அன்று மேலவாசல் பகுதி நே... மேலும் பார்க்க