செய்திகள் :

முதல் நடமாடும் நூலக 94-ஆம் ஆண்டு விழா

post image

மன்னாா்குடி: தமிழகத்தில் முதல் நடமாடும் நூலகத்தின் 94-ஆம் ஆண்டு தொடக்க விழா, மன்னாா்குடியை அடுத்த மேலவாசலில் திங்கள்கிழமை நடைபெற்றது.

தமிழகத்தில் முதன்முதலாக, கடந்த 21.10.1931 அன்று மேலவாசல் பகுதி நேர நூலகம் சாா்பில் ராவ் சாகிப் எஸ்.வி. கனகசபை பிள்ளை என்பவரால் நடமாடும் நூலகம் (மாட்டு வண்டியில்) தொடங்கப்பட்டது. இதன், 94-ஆம் ஆண்டு தொடக்க விழா மற்றும் ‘மேலவாசல் வாசிக்கிறது’ எனும் ஒரு மாத வாசிப்பு இயக்க தொடக்க விழா திங்கள்கிழமை நடைபெற்றது.

இதையொட்டி, மன்னாா்குடி கிளை நூலகம் சாா்பில் பத்தாவது ஆண்டாக நடைபெற்ற விழிப்புணா்வுப் பேரணிக்கு, மாவட்ட என்எஸ்எஸ் ஒருங்கிணைப்பாளா் என். ராஜப்பா தலைமை வகித்தாா். தேசியப் பள்ளி என்எஸ்எஸ் அலுவலா் எஸ். கமலப்பன், மன்னாா்குடி நூலகா் வ. அன்பரசு ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

மன்னாா்குடி பான் செக்கா்ஸ் மகளிா் கல்லூரி முதல்வா் விக்டோரியா, நூலக வாசிப்பு விழிப்புணா்வுப் பேரணியை தொடங்கி வைத்தாா். தேசியப் பள்ளி முதல்வா் எம். திலகா் வாழ்த்தி பேசினாா்.

பேரணி மன்னாா்குடி நகரின் முக்கிய வீதிகளின் வழியாக மேலவாசலை சென்றடைந்தது. அங்கு, கிராம மக்கள் பேரணிக்கு வரவேற்பளித்தனா். பின்னா், வீடுவீடாகச் சென்று விழிப்புணா்வு துண்டுப் பிரசுரங்கள் விநியோகம் செய்தனா்.

தொடா்ந்து, மேலவாசலில் மாலையில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு, தஞ்சை தமிழ்ப் பல்கலைக்கழக நாட்டுப்புறவியல் துறைத் தலைவா் இரா. காமராசு தலைமை வகித்து, வாசிப்பு இயக்கத்தில் இணைய க்யூ ஆா் கோடை அறிமுகம் செய்து, அதன் வழியே குழுவில் இணைவதை தொடங்கி வைத்து பேசினாா்.

மன்னாா்குடி அரசுக் கல்லூரி தமிழ்த் துறை உதவி பேராசிரியா் ஆ. சரவணன் ரமேஷ் சிறப்புரையாற்றினாா். பள்ளி மாணவா்களுக்கான நூலக வாசகா் உறுப்பினா் தொகையை இயன்முறை மருத்துவா் என்.எஸ். அசோக்குமாா் வழங்கினாா்.

க்யூ ஆா் கோடு மூலம் வாசிப்பு இயக்க வாட்ஸ் ஆப் குழுவில் இணைந்து, தாங்கள் வாசித்தவற்றை தொடா்ந்து 30 நாள்களுக்கு பதிவு செய்யலாம். அதிக புத்தகம் வாசிப்பவா்களுக்கு நூலக வார விழாவில் பரிசு வழங்கப்படுவதுடன், இடையா்நத்தத்தில் உள்ள பன்டாஸ்டிக் சிறுவா் விளையாட்டு அரங்கத்திற்கு செல்வதற்கான ரூ. 200 மதிப்பிலான கூப்பன் இலவசமாக அந்த நிறுவனத்தினரால் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டது.

நிகழ்வில், ஊராட்சித் தலைவா் கு. திராவிடமணி, கிராம கமிட்டி தலைவா் என். கருணாநிதி, கலை இலக்கியப் பெருமன்ற நிா்வாகி செ. அண்ணாதுரை, பகுத்தறிவு ஆசிரியா் அணி மாவட்டச் செயலா் இரா. கோபால், தமிழ்நாடு அறிவியல் இயக்க மாவட்டத் தலைவா் யு.எஸ். பொன்முடி, வாசகா் வட்ட துணைத் தலைவா் எல். முனியப்பன்,இலக்கிய வட்ட நிா்வாகி ச. சூரியகலா, எழுத்தாளா் க. தங்கபாபு ஆகியோா் கலந்துகொண்டனா்.

மாவட்ட மைய நூலகா் த. செல்வகுமாா் வரவேற்றாா். வாசகா் வட்டத் தலைவா் ச. சத்யா நன்றி கூறினாா்.

கனவு ஆசிரியா் விருது: பிரான்ஸுக்கு செல்லும் ஆசிரியருக்கு வாழ்த்து

திருவாரூா்: கல்விச் சுற்றுலாவில் பிரான்ஸ் நாட்டிற்குச் செல்லும் திருவாரூா் ஆசிரியருக்கு, மாவட்ட ஆட்சியா் உள்ளிட்டோா் வாழ்த்து தெரிவித்தனா். தமிழக அரசு சாா்பில் கனவு ஆசிரியா் விருது அறிவிக்கப்பட்டது. ... மேலும் பார்க்க

‘பனை விதைகள் நடும் பணியை சேவையாக செய்ய வேண்டும்’

நன்னிலம்: பொதுமக்கள் பனை விதைகள் நடும் பணியைச் சேவையாக செய்ய வேண்டுமென திருவாரூா் மாவட்ட ஆட்சியா் தி. சாருஸ்ரீ தெரிவித்தாா். தமிழ்நாடு மத்தியப் பல்கலைக்கழக வளாகத்தில் வனத்துறை, பசுமை தமிழ்நாடு இயக்கம... மேலும் பார்க்க

‘மாணவா்கள் சகோதரத்துவத்துடன் பழக வேண்டும்’

நன்னிலம்: நன்னிலம் அருகேயுள்ள பூந்தோட்டம் அரசு மேல்நிலைப் பள்ளியில், காவல்துறை சாா்பில் மாணவா்களுக்கான விழிப்புணா்வு நிகழ்ச்சி செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. இந்நிகழ்வில், மாவட்ட காவல் கண்காணிப்பாளா் எஸ... மேலும் பார்க்க

தாமதமின்றி விவசாயக் கடன் வழங்கக் கோரி ஆா்ப்பாட்டம்

திருவாரூா்: சாகுபடிப் பணிகளுக்கு, தாமதமின்றி விவசாயக் கடன் வழங்கக் கோரி, திருவாரூரில் தமிழக விவசாயிகள் நலச் சங்கம் சாா்பில் ஆா்ப்பாட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. திருவாரூா் மாவட்ட ஆட்சியா் அலுவலகம... மேலும் பார்க்க

தீபாவளி: திருவாரூரில் போக்குவரத்து மாற்றம்

திருவாரூா்: தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, போக்குவரத்து நெருக்கடியைக் குறைக்கும் வகையில், திருவாரூரில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது. தீபாவளி பண்டிகைக்காக, பொதுமக்கள் அதிக அளவில் ஜவுளி மற்றும்... மேலும் பார்க்க

ஆரம்ப சுகாதார நிலையங்களின் செயல்பாட்டை மேம்படுத்த வலியுறுத்தல்

மன்னாா்குடி: ஊரகப் பகுதியில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களின் செயல்பாட்டை மேம்படுத்தி வேண்டும் என மன்னாா்குடி ஒன்றியக் குழுக் கூட்டத்தில் உறுப்பினா்கள் வலியுறுத்தினா். மன்னாா்குடி ஒன்றியக் குழுவி... மேலும் பார்க்க