செய்திகள் :

இந்த பாக். அணியை தோனியே வழிநடத்தினாலும் ஒன்றும் செய்யமுடியாது..!

post image

இந்த பாகிஸ்தான் அணியை தோனியே வழிநடத்தினாலும் ஒன்றும் செய்ய முடியாதென பாக். மகளிரணி முன்னாள் கேப்டன் விமர்சித்துள்ளார்.

சாம்பியன்ஸ் டிராபியில் 2 போட்டிகளிலும் நடப்பு சாம்பியனான பாகிஸ்தான் அணி தோல்வியடைந்து தொடரிலிருந்து வெளியேறியுள்ளது.

சாம்பியன்ஸ் டிராபியை நடத்தும் சொந்த அணி இப்படி விளையாடுவதும் அதுவும் கடினமான போராட்டம் இன்றி மிக எளிதாக தோல்வியுற்றதும் பாகிஸ்தான் ரசிகர்கள், முன்னாள் வீரர்கள் இடையே மிகுந்த விமர்சனங்களை எதிர்கொண்டு வருகின்றன.

இது குறித்து 39 வயதாகும் வர்ணனையாளரும் பாகிஸ்தானின் மகளிரணியின் முன்னாள் கேப்டன் சானா மிர் கூறியதாவது:

தோனியாலும் ஒன்றும் செய்ய முடியாது

சாம்பியன்ஸ் டிராபியில் தேர்வாகியிருக்கும் இந்த 15 பாகிஸ்தான் வீரர்களை எம்.எஸ்.தோனியோ அல்லது யூனிஸ் கானையோ யார் வழிநடத்தினாலும் ஒன்றும் செய்யமுடியாது. ஏனெனில் இந்த வீரர்கள் யாரும் குறிப்பிட்ட சூழ்நிலைகளுக்கு விளையாடும் தகுதியின் அடிப்படையில் தேர்ந்தெடுக்கப்படவில்லை.

நான் கிரிக்கெட் பார்த்துக்கொண்டிருந்தேன். நண்பரிடமிருந்து ’இந்தியா 100/2. ஆட்டம் முடிந்ததென நினைக்கிறேன்’ என குறுஞ்செய்தி வந்தது. அதற்கு நான் ‘அணியை தேர்வு செய்யும்போதே முடிந்துவிட்டது’ எனக் கூறினேன்.

15 பேர் கொண்ட அணியை அறிவிக்கும்போதே பாதி தொடரில் வெளியேறிவிட்டோம். இதை முதல்நாளில் இருந்தே கூறி வருகிறேன்.

தேர்வுக்குழு சரியில்லை

துபையில் ஒரு போட்டியாவது விளையாடுவோமென பாகிஸ்தான் அணிக்கு ஏற்கனவே தெரியும். பிறகெப்படி 2 பார்ட்-டைம் சுழல்பந்து வீச்சாளர்களை கொண்டு விளையாட வரும்.

அப்ரார் அஹ்மது ஒருநாள் கிரிக்கெட்டுக்கு மிகவும் புதியவர். ஆஸி, தெ.ஆ. உடன் விளையாடிய முக்கியமான வீரர்களை தேர்வுக்குழுவினர் நீக்கிவிட்டனர். அதனால்தான் பாகிஸ்தான் அணி அறிவிக்கும்போதே அது தொடரினை இழந்துவிட்டது என்றார்.

கடைசி போட்டி பிப்.27ஆம் தேதி வங்கதேசத்துடன் மோதுகிறது பாகிஸ்தான் அணி.

திடலில் அத்துமீறி நுழைந்தவருக்கு வாழ்நாள் தடை..! பாதுகாப்பை பலப்படுத்தும் பாகிஸ்தான்!

ராவல்பிண்டி திடலில் அத்துமீறி நுழைந்த நபரால் சாம்பியன்ஸ் டிராபியில் பாதுகாப்பை பலப்படுத்த பிசிபி முடிவெடுத்துள்ளது.சாம்பியன்ஸ் டிராபி போட்டிகளை பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் (பிசிபி) நடத்துகின்றன. நடப... மேலும் பார்க்க

தில்லி கேபிடல்ஸ் பயிற்சியாளராக முன்னாள் இங்கிலாந்து பயிற்சியாளர்!

தில்லி கேபிடல்ஸ் அணிக்கு உதவிப் பயிற்சியாளரை அந்த அணி நிர்வாகம் இன்று (பிப்ரவரி 25) நியமித்துள்ளது.இந்த ஆண்டு ஐபிஎல் தொடர் வருகிற மார்ச் 22 ஆம் தேதி தொடங்கவுள்ளது. தொடரின் முதல் போட்டியில் நடப்பு சாம்... மேலும் பார்க்க

சாம்பியன்ஸ் டிராபி: ஆஸி.-தெ.ஆ. போட்டி ரத்து!

சாம்பியன்ஸ் டிராபியில் ஆஸி. தெ.ஆ. போட்டி மழையினால் கைவிடப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது.ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி தொடரில் ராவல்பிண்டியில் நடைபெறவிருந்த 7ஆவது போட்டியில் ஆஸ்திரேலியா, தென்னாப்பிரிக்கா அணி... மேலும் பார்க்க

ஆஸி. - தெ.ஆ. போட்டி ரத்தானால் அரையிறுதிக்கு தகுதிபெறுவதில் சிக்கல்!

சாம்பியன்ஸ் டிராபியில் மழையின் காரணமாக ஆஸி.-தெ.ஆ. ஆட்டம் தொடங்கபடவில்லை என்பதால் ரசிகர்கள் சோகத்தில் ஆழ்ந்துள்ளார்கள். ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி தொடரில் ராவல்பிண்டியில் நடைபெறும் இன்றையப் போட்டியில் ஆஸ... மேலும் பார்க்க

இந்தியாவின் பி டீமை வீழ்த்துவதும் பாகிஸ்தானுக்கு கடினம்: முன்னாள் இந்திய கேப்டன்

இந்திய அணியின் பி டீமை வீழ்த்துவதும் பாகிஸ்தானுக்கு கடினம் என இந்திய அணியின் முன்னாள் கேப்டன் சுனில் கவாஸ்கர் தெரிவித்துள்ளார்.ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடரில் துபையில் நேற்று முன் தினம் (ப... மேலும் பார்க்க

ரூ.20 லட்சத்தில் தொடங்கி ரூ.23.75 கோடி வரை..! என்ன சொல்கிறார் வெங்கடேஷ் ஐயர்!

கேப்டன் பதவி வந்தால் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியைத் தலைமைத் தாங்க தயார் என்று கேகேஆர் அணியின் தொடக்க ஆட்டக்காரர் வெங்கடேஷ் ஐயர் தெரிவித்துள்ளார். 2024 ஆம் ஆண்டு ஐபிஎல்லில் 2-வது முறையாக கோப்பையை வென்ற... மேலும் பார்க்க