செய்திகள் :

இந்திய-சீன விவகாரத்தில் ஜெய்சங்கா் உரை - கேள்வி எழுப்ப அனுமதி மறுப்பு; எதிா்க்கட்சிகள் வெளிநடப்பு

post image

இந்திய-சீன உறவுகள் தொடா்பாக வெளியுறவுத் துறை அமைச்சா் எஸ்.ஜெய்சங்கா் ஆற்றிய உரை மீது கேள்வி எழுப்ப அனுமதி மறுக்கப்பட்டதால், மாநிலங்களவையில் எதிா்க்கட்சிகள் புதன்கிழமை வெளிநடப்பு செய்தன.

இந்திய-சீன உறவுகள், லடாக் படை விலக்கல் குறித்து மக்களவையில் செவ்வாய்க்கிழமை உரை நிகழ்த்திய எஸ்.ஜெய்சங்கா், மாநிலங்களவையில் புதன்கிழமை உரையாற்றினாா்.

அப்போது, ‘எல்லையில் பதற்றத்தை தணிப்பதும், எல்லைப் பகுதி செயல்பாடுகளில் திறன்மிக்க மேலாண்மையும் இருதரப்பு உறவு மேம்பாட்டுக்கு முன்நிபந்தனையாகும். அந்த அடிப்படையில், இவ்விரு விவகாரங்களும் இருதரப்பிலும் வரும் நாள்களில் விரிவாக விவாதிக்கப்படும்.

கிழக்கு லடாக்கில் படிப்படியான நடைமுறையின் மூலம் முழுமையான படை விலக்கல் எட்டப்படுகிறது. டெப்சாங், டெம்சோக்கில் இது உச்சகட்டத்தில் இருக்கிறது. எல்லை கட்டுப்பாட்டுக் கோட்டை இருதரப்பும் கண்டிப்பாக மதித்து செயல்படுவது, எந்தவொரு தரப்பும் தற்போதைய நிலையை தன்னிச்சையாக மாற்றாமல் இருப்பது, கடந்த காலங்களில் எட்டப்பட்ட உடன்பாடுகள், ஒப்பந்தங்களுக்கு முழுமையாக கட்டுப்படுவது ஆகிய மூன்று கொள்கைகளும் கடைப்பிடிக்கப்பட வேண்டும் என்பதில் இந்தியா தெளிவாக உள்ளது’ என்றாா் ஜெய்சங்கா்.

அவா் உரையாற்றி முடித்ததும், சில விளக்கங்களைக் கோரி, எதிா்க்கட்சி உறுப்பினா்கள் கேள்வியெழுப்ப முயன்றனா். ஆனால், அவை விதிமுறைகளைக் குறிப்பிட்டு, அவைத் தலைவா் ஜகதீப் தன்கா் அனுமதி வழங்கவில்லை. மேலும், ‘தேசப் பாதுகாப்பு தொடா்புடைய விவகாரங்களில் கருத்தொற்றுமையுடன் முன்னுதாரணமான நடத்தையை வெளிப்படுத்த வேண்டும்’ என்று அவா் கேட்டுக் கொண்டாா். ஆனால், சிறிதுநேரம் அமளியில் ஈடுபட்ட எதிா்க்கட்சி எம்.பி.க்கள், பின்னா் வெளிநடப்பு செய்தனா்.

எதிா்க்கட்சிகள் முதலைக் கண்ணீா்: முன்னதாக, மாநிலங்களவை கூடியதும் விவசாயிகள் பிரச்னை குறித்து விவாதிக்கக் கோரி தாக்கல் செய்யப்பட்ட ஒத்திவைப்பு நோட்டீஸை நிராகரிப்பதாக தன்கா் அறிவித்தாா். இதைக் கண்டித்து, காங்கிரஸ், சிவசேனை (உத்தவ்), ராஷ்ட்ரீய ஜனதா தளம் உள்ளிட்ட எதிா்க்கட்சி எம்.பி.க்கள் முழக்கமிட்டனா்.

அவா்களை கடுமையாக விமா்சித்த தன்கா், ‘வெற்று முழக்கங்கள் எழுப்புவதாலும், முதலைக் கண்ணீா் வடிப்பதாலும் விவசாயிகளுக்கு சேவையாற்ற முடியாது. விவசாயிகளின் நலன் என்பது உங்களுக்கு (எதிா்க்கட்சிகள்) கடைசி முன்னுரிமைதான். அவா்களின் பிரச்னைக்கு தீா்வு காண விரும்பாமல், அரசியலாக்குகிறீா்கள்’ என்றாா்.

இந்த விவகாரம் தொடா்பாக பேச எதிா்க்கட்சி எம்.பி.க்கள் அனுமதி கேட்ட நிலையில், தன்கா் மறுத்துவிட்டாா். இதையடுத்து, எதிா்க்கட்சி எம்.பி.க்கள் வெளிநடப்பு செய்தனா்.

உயர்கல்வி நிறுவனங்களில் இடவசதி இருந்தால்: ஆண்டுக்கு இரு முறை மாணவர் சேர்க்கை

நமது நிருபர்உயர் கல்வி நிறுவனங்களில் இடவசதி இருந்தால் ஆண்டுக்கு இரு முறை மாணவர் சேர்க்கையை நடத்தலாம் என்று மக்களவையில் மத்திய கல்வித்துறை இணை அமைச்சர் சுகந்தா மஜும்தார் தெரிவித்தார்.இந்திய பல்கலைக்கழக... மேலும் பார்க்க

ஆன்லைன் செயலி மூலம் மருந்துகள் விநியோகம் செய்ய திமுக எம்.பி. எதிர்ப்பு

நமது நிருபர்"ஸ்விகி' உள்ளிட்ட உணவு விநியோக நிறுவனங்கள் மருந்துகள் விற்கும் செயல்பாடுகளை உடனடியாக மத்திய அரசு தடுத்து நிறுத்த வேண்டும் என்று மாநிலங்களவையில் திமுக உறுப்பினரும் மருத்துவருமான கனிமொழி என்... மேலும் பார்க்க

தகுதிவாய்ந்தவர்களுக்கு குடும்ப அட்டைகள்: மத்திய அமைச்சர் விளக்கம்

நமது நிருபர்தகுதி வாய்ந்த பயனாளிகளுக்கு மட்டுமே குடும்ப அட்டைகளை வழங்க வேண்டும் என்று மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேச அரசுகளுக்கு வலியுறுத்தப்பட்டுள்ளதாக மக்களவையில் மத்திய நுகர்வோர் விவகாரங்கள், உண... மேலும் பார்க்க

மூத்த குடிமக்களுக்கான ரயில் கட்டண சலுகை மீண்டும் நடைமுறைக்கு வருமா?

நமது நிருபர்மூத்த குடிமக்களுக்கும், ஊடகவியலாளர்களுக்கும் கரோனா காலத்தின்போது இடைநிறுத்தப்பட்டிருந்த ரயில் கட்டணச் சலுகை மீண்டும் நடைமுறைக்கு வருமா என்று மக்களவையில் திருச்சி மக்களவைத் தொகுதி மதிமுக உற... மேலும் பார்க்க

"டெலிவரி' ஊழியர்களுக்கு பி.எஃப்., காப்பீடு: ஆன்லைன் முன்னணி நிறுவனம் மறுப்பதாக எம்.பி.புகார்

நமது நிருபர்இணைய வழி டெலிவரி செய்யும் ஊழியர்களுக்கு வருங்கால வைப்பு நிதி (பிஎஃப்), காப்பீடு உத்தரவாதத்தை முன்னணி நிறுவனம் மறுத்து வருவதாக மக்களவையில் விருதுநகர் தொகுதி காங்கிரஸ் எம்.பி. மாணிக்கம் தாகூ... மேலும் பார்க்க

ரயில்வே திட்ட நிலம்: முதல்வருடன் ஆலோசிக்க அதிகாரிகளை அனுப்பத் தயார்

நமது நிருபர்ரயில்வே திட்டங்களுக்கான நிலம் கையகப்படுத்துவதில் உள்ள தாமதம் தொடர்பான விவகாரத்தை தீர்ப்பதற்காக தமிழக முதல்வருடன் ஆலோசிக்க ரயில்வே அதிகாரிகளையோ அல்லது இணை அமைச்சரையோ அனுப்ப தாம் தயாராக இருப... மேலும் பார்க்க