பராசக்தி படத்துல என்னை reject பண்ணிட்டாங்க! - Actress Papri Ghosh| Kaathuvaakula...
'இந்திய மக்களின் கலாசாரம் அற்புதமாக இருக்கிறது'- உசைன் போல்ட்
இந்தியாவிற்கு வந்திருக்கும் தடகள வீரர் உசைன் போல்ட் 'NDTV' ஊடகத்திற்கு பேட்டி அளித்திருக்கிறார்.
அந்த நேர்காணலில் பேசியிருக்கும் அவர், "ஒரு புதிய நாட்டிற்கு (இந்தியா) வந்து மக்களைப் பார்த்து அவர்களுடன் உரையாடுவது மிகவும் அனுபவம் வாய்ந்த ஒன்றாக இருக்கிறது.
குறிப்பாக இளைஞர்கள் ஆர்வமாக போட்டியிடுவதை பார்க்கும்போது அவர்களின் எனர்ஜியை என்னால் உணர முடிகிறது.
இங்குள்ள கலாசாரம் மிகவும் அற்புதமாக இருக்கிறது" என்று கூறியிருக்கிறார்.

தொடர்ந்து பேசிய அவர், "எனக்கு ஸ்கோலியாசிஸ்(முதுகு தண்டுவடப் பாதிப்பு) பிரச்னை இருந்தது.
இந்தப் பாதிப்பு இருந்தால் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். அதனால் என்னுடைய வாழ்க்கை மிகவும் சவால் நிறைந்ததாக இருந்தது.
அதனை சரி செய்ய நான் கடினமாக உழைத்திருக்கிறேன். அதனால்தான் என்னால் ஒலிம்பிக்கில் சாதனை படைக்க முடிந்தது" என்று கூறியிருக்கிறார்.