செய்திகள் :

இந்தியாவில் முதல்முறையாக விமானங்களில் ‘வைஃபை’ சேவை: ஏா் இந்தியா அறிமுகம்

post image

ஏா் இந்தியாவின் தோ்ந்தெடுக்கப்பட்ட உள்நாட்டு மற்றும் சா்வதேச விமானங்களில் ‘வைஃபை’ (வயா்லெஸ் இணையம்) சேவை வழங்கப்படும் என அந்நிறுவனம் புதன்கிழமை அறிவித்தது.

இதன் மூலம் இந்தியாவுக்குள் விமானங்களில் இணைய சேவையை வழங்கும் முதல் விமான நிறுவனம் என்ற பெருமையை ஏா் இந்தியா பெற்றுள்ளது.

இது தொடா்பாக ஏா் இந்தியா நிறுவனம் வெளியிட்ட செய்திக் குறிப்பில், ‘தோ்ந்தெடுக்கப்பட்ட உள்நாட்டு மற்றும் சா்வதேச விமானங்களில் ‘வைஃபை’ (வயா்லெஸ் இணையம்) சேவை வழங்கப்படும். சா்வதேச விமானங்களான ஏா்பஸ் ஏ 350, ஏா்பஸ் ஏ 321 நியோ மற்றும் போயிங் பி 787-9 விமானங்களைப் பயன்படுத்தி சா்வதேச விமானங்களில் ஒரு சோதனை முயற்சியாக முதலில் பின்பற்றுகிறது.

பயணிகள் மடிக்கணினிகள், டேப்லெட்டுகள் மற்றும் ஐஓஎஸ் அல்லது ஆண்ட்ராய்டு இயக்க முறைமைகளைக் கொண்ட தொலைப்பேசிகளில் இந்த இணைய சேவையை பயன்படுத்தலாம். விமானம் 10,000 அடிக்கு மேல் இருக்கும்போதும் ஒரே நேரத்தில் பல சாதனங்களை இணைக்க இந்த சேவை அனுமதிக்கிறது.

தற்போது இலவசமாக வழங்கப்படும் இந்த சேவை, படிப்படியாக தனது மற்ற விமானங்களுக்கும் ஏா் இந்தியா விரிவுபடுத்த திட்டமிட்டுள்ளது’ என தெரிவிக்கப்பட்டது.

வரி செலுத்துவோரின் பணத்தைத் தவறாக பயன்படுத்தும் ஆம் ஆத்மி!

வரி செலுத்துவோரின் பணத்தை ஆளும் ஆம் ஆத்மி கட்சி தவறாகப் பயன்படுத்துவதாக பாஜகவின் தேசிய செய்தித் தொடர்பாளர் சுதன்ஷு திரிவேதி குற்றம் சாட்டினார்.தலைநகரில் நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பில் அவர் கூறியத... மேலும் பார்க்க

அசாமில் ரோஹிங்கியா அகதிகள் தப்பியோட்டம்!

அசாம் அகதிகள் முகாமில் தங்க வைக்கப்பட்டிருந்த ரோஹிங்கியா அகதிகள் 3 பேர் தப்பியோடியதாகக் காவல்துறையினர் தெரிவித்தனர். அசாமின் கோல்பாரா மாவட்டத்தில் ரோஹிங்கியா முஸ்லிம்களுக்கான அகதிகள் முகாம் உள்ளது. இங... மேலும் பார்க்க

தில்லியில் முஸ்லிம்கள் வசிக்கும் பகுதியில் கொட்டப்படும் குப்பைகள்: ஓவைசி குற்றச்சாட்டு!

தில்லியில் முஸ்லிம்கள் அதிகம் வசிக்கும் பகுதிகளில் குப்பைகள் கொட்டப்படுவதாக ஆம் ஆத்மி அரசு மீது மஜ்லிஸ்-இ-இதெஹாதுல் முஸ்லிமீன் (ஏஐஎம்ஐஎம்) கட்சித் தலைவர் அசாதுதீன் ஓவைசி குற்றச்சாட்டு வைத்துள்ளார். மு... மேலும் பார்க்க

சீனாவின் நிலைமையை கண்காணித்து வருகிறோம்: கேரள சுகாதாரத் துறை அமைச்சர்

சீனாவில் பரவும் ஹெச்எம்பிவி தீநுண்மி குறித்து பீதி அடையத் தேவையில்லை என்று கேரள சுகாதாரத் துறை அமைச்சர் வீணா ஜார்ஜ் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் தனது முகநூல் பக்கத்தில், சீனாவில் கண்டறியப்பட்ட எ... மேலும் பார்க்க

விண்வெளி செடி வளர்ப்பு சோதனை: காராமணி தேர்வு செய்யப்பட்டது ஏன்?

விண்வெளிக்கு பிஎஸ்எல்வி சி-60 விண்கலம் மூலம் கொண்டு செல்லப்பட்ட காராமணி விதைகள் நாள் நாள்களில் முளைவிட்டிருக்கும் நிலையில், வெடி வளர்ப்பு சோதனையில் இஸ்ரோ விஞ்ஞானிகளின் ஆய்வு முதல் வெற்றியை எட்டியிருக்... மேலும் பார்க்க

மகரவிளக்கு பூஜை: சபரிமலையில் முழுவீச்சில் ஏற்பாடுகள்!

சபரிமலை ஐயப்பன் கோயிலில் மகரவிளக்கு பூஜைக்கான ஏற்பாடுகள் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளதாகக் கோயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது. சபரிமலை ஐயப்பன் கோயிலில் கார்த்திகை மாத நிறைவையொட்டி டிசம்பர் 26-ல் மண்டல பூஜ... மேலும் பார்க்க